67. மலரொன்று மடிந்து வீழ்கின்றது


மலரொன்று மடிந்து வீழ்கின்றது
பார்ப்பாரற்று பரிதவித்த மலரொன்று
இன்று மடிந்து வீழ்கின்றது

மண்ணில்!

இத்தனை நாள் சுமந்த
செடி கூட - இனி வேண்டாம்
நீ எனக்கு என்ற

வார்த்தைகளை
துப்பிவிட்டு ஒதுங்கியதால்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!

எழிலோடு பொழிவு கொண்ட

இனிய மலரொன்று
மனதின் பாரம் தாங்காமல்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!

என்னை சுமந்தவள் நீதானே
என செடியிடம் கேட்டு விட்டு

ஏங்கி ஏங்கி அழுது துடித்து
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!


தன் கருவுக்குள் உயிர் கொடுத்து
கலையிலகில் உரு கொடுத்து
உறவாடி மகிழ்ந்து விட்டு
மறு மொட்டின் உதயம் சேர்க்க
மலரை தூற்றியதால்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!

தலை கோதி தாலாட்டிய செடி
துயில் கொள்ள நினைக்கையில்
போ என துரத்தியதால்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!

வாழ்வின் நொடிகளிலே

வசந்தங்கள் கண்டு விட்டு
வறுமை வாட்டியதும்
வலி தாங்க முடியாமல்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!

எத்தனையோ புகழ்ச்சி கண்டும்

தன் அழகில் லயிப்பு கொண்டும்
வியப்போடு நோக்கிவிட்டு
மறுபிறப்பை நாடியதால்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!

இறப்புக்குள் பெருமை கொண்டும்

இனிமைகள் சேர்வை கொண்டும்
இளைப்பாற நினைக்கையிலே
இடியொன்று வீழ்ந்ததனால்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!

மறு ஜென்ம கதை கேட்டு
மதி கெட்ட இவ்வுலகில்

மீண்டும் மலராக வேண்டாம் என
தீர்க்கமான முடிவு கொண்டு
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!







Comments

மலருக்கும் இவ்வளவு சோகமா!

அருமை கீர்த்தி, பாராட்டுக்கள்.
//தலை கோதி தாலாட்டிய செடி
துயில் கொள்ள நினைக்கையில்
போ என துரத்தியதால்
இன்று மடிந்து வீழ்கின்றது
மண்ணில்!//

வலிகள் எனக்கும் புரிகிறது. செடியைப் பிரியும் மலர் மாலையில் இணைய வேண்டும்.
Admin said…
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
Admin said…
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு இங்கு http://shanthru.blogspot.com/2009/09/blog-post_14.html அழைத்திருக்கின்றேன் ஏற்றுக்கொள்ளவும்
renu said…
iniya varigal....

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

உறவுகள்!