திருப்பிக் கொடு

உன்னைக் கண்ட நாள் தொட்டு
உள்ளத்துடிப்பு பல மடங்காய்
இரத்த நாடியில் ஏதோ பிசைய
"சுர்" என்று ஏதோ உடலெங்கும் பரவியது

இன்ப ஊற்று இரட்டிப்பாகி
உணர்வெல்லாம் உன்
நினைவு சூடிக்கொள்ள
சிறகு முளைத்த பறவையாய்
என் மனசு ஆனது

இடைக்கிடை இதயம் தொட்டுச் சென்ற
நீ
இன்று என்
இரவுகளை மொத்தமாய் விழுங்கிச் செல்கின்றாய்
இரவோடு இரவாகி என்
இரவுகளைத் தொலைத்தப் பின்னும்
விடியலிலும் உனையே தேடித் துடிக்கின்றேன்

இப்பொழுதெல்லாம் நான் உன்னை
நினைப்பதே இல்லை - ஏனோ
இதயம் தான் ஏங்கி அழுகின்றது

நி
தம் உந்தன் தரிசனம் வேண்டி

இரவுகளின் சாரல் தனலாக
விடியலின் தூரல் குளிராக
மனதினில் நீயும் மலராக
மௌனத்தால் நானும் சிலையாக

மனதினில் மாற்றம் தந்தாயே
இதயத்தை இடம் மாற்றிச் சென்றாயே
இன்று
நீ யே நானாய் ஆனேன்
ிலவாய் பாதி தேய்ந்தேன்

உன்னில் என்னை விளக்கிவிடு
உறவே என்னை மறந்துவிடு
உலகில்
நானாய் வாழ்வதற்கு
என்னை
எனக்கே தந்துவிடு!

Comments

எங்கேயோ பயங்கர ஊடல் நடக்குது என்று மட்டும் விளங்குது.. :P

கவிதை அருமை குமுக்கு.. ஆனால் புரியுவேண்யவர்களுக்கு புரியவேண்டுமே..:P
//எங்கேயோ பயங்கர ஊடல் நடக்குது என்று மட்டும் விளங்குது.. :P//
ஹா ஹா என்னத்த எழுதினாலும் அங்கு கொண்டு போய் முடித்திடுறாங்களே..... :(

//கவிதை அருமை குமுக்கு..//
நன்றி டுபுக்கு :)

//ஆனால் புரியுவேண்யவர்களுக்கு புரியவேண்டுமே..:P//
ஒரு பிரச்சினையும் இல்லை நம்புங்கள் உங்கள் அன்புக்கு நன்றி
அழகான மென்மையான ஒரு காதல் உண்ர்வுகளை அப்பிடியே வரிகளில் போட்டுள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.
காதல் கவிதை எழுதினால் காதலிக்க வேண்டுமென்ற நியதி இல்லை புல்லட்.
சம்யுக்தாவை நான் நம்புகிறேன். நல்ல கவிதை தோழி.
//உலகில் நானாய் வாழ்வதற்கு
என்னை எனக்கே தந்துவிடு!//
நல்ல கற்பனை. மேலும் வளர வாழ்த்துக்கள்.
Vettipullai said…
அழகான ஆசை...
புல்லட் கருத்த நான் ரிப்பீட்டுறேன்...
//அழகான மென்மையான ஒரு காதல் உண்ர்வுகளை அப்பிடியே வரிகளில் போட்டுள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.//

Tnx u So Much Anna
//இளவழுதி வீரராசன்//

உண்மையை சொன்னீர்கள் நன்றி
// Vetti pullai said...

அழகான ஆசை...//

ஆசை யாரை விட்டது போங்க
//அண்ணாமலையான் said...

புல்லட் கருத்த நான் ரிப்பீட்டுறேன்...//

எதற்காக இந்த கொலைவெறி நானும் புல்லட்டுக்கு சொன்ன பதிலையே ரிப்பீட்டுறேன்.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு