ஹைக்கூ கவிதைகள்

"நண்பன்"
துன்பத்திலும்
வாழ்பவன்
உற்ற துணையாக!

"இரவு"
நிலவொளியினோடு
தனிமையும்
சொந்தமானது!

"கல்வி"
இறப்பினூடும்
அழிவில்லா
செல்வமிதுதான்!

"காதல்"
இதயங்களின்
இனிமையும்
இன்பமயமாக!

"கவிதை"
உணர்வு சொட்டு
உதிரமாய்
உருவாகின்றது!

"நிலவு"
வட்டமுகமது
வானத்தில்
வட்டமிட்டது!

"மௌனம்"
வார்த்தைகளின்
தொடர்ச்சி
வந்துதிக்குது!

"தனிமை"
இல்லாமையிலும்
இறுதிவரை
உடனிருப்பது!

"கடவுள்"
நேற்றையதினமே
எதிர்கால
வித்திட்டவன்!

"ஏழை"
தினம்தினமும்
உண்டழுக
தண்ணீர் அமுது!

"தாலி"
பெண்ணவளுக்கு
துணைவனின்
உத்தரவாதம்!

Comments

Bavan said…
வழக்கம்போல நல்லாயிருக்கு எண்டு சொல்லாம ஹைக்கூ கவிதை ஒண்டு எழுதி நல்லாயிருக்கு எண்டு சொல்ல நினைச்சு மூளை கலங்கி கடைசிவரை முடியாததால் சொல்லுறன்

கவிதை நல்லாயிருக்கு..ஹீஹீ....;)
//வழக்கம்போல நல்லாயிருக்கு எண்டு சொல்லாம ஹைக்கூ கவிதை ஒண்டு எழுதி நல்லாயிருக்கு எண்டு சொல்ல நினைச்சு மூளை கலங்கி கடைசிவரை முடியாததால் சொல்லுறன்//
இப்போ தான் மூளை கலங்கியதா முதலே அப்படின்னு தானே நான் நினைத்தேன் he he he

கவிதை நல்லாயிருக்கு..ஹீஹீ....;)
நன்றி தம்பி
//"தனிமை"
இல்லாமையிலும்
இறுதிவரை
உடனிருப்பது!//

கீர்த்தி,

ரொம்ப பிடிச்சது.
அட கவிதை கவிதை....

இந்த படுபாவிக்கு விளங்கத்தக்கவாறு நல்ல கவிதைகளை எழுதியமைக்கு நன்றி...

எனக்கு மிகப் பிடித்தது இது தான்...

// "தனிமை"
இல்லாமையிலும்
இறுதிவரை
உடனிருப்பது! //

அழகிய கவிதைகள்...

(ஒரு சின்ன விடயம். ஹைக்கூ என்றால் என்ன? )
//"தனிமை"
இல்லாமையிலும்
இறுதிவரை
உடனிருப்பது!//

கீர்த்தி, ரொம்ப பிடிச்சது.//

நன்றி அண்ணா
//இந்த படுபாவிக்கு விளங்கத்தக்கவாறு நல்ல கவிதைகளை எழுதியமைக்கு நன்றி...//
விளங்கிட்டா சந்தோசம்

///எனக்கு மிகப் பிடித்தது இது தான்...

// "தனிமை"
இல்லாமையிலும்
இறுதிவரை
உடனிருப்பது! //

அழகிய கவிதைகள்...//
நன்றி நன்றி


//(ஒரு சின்ன விடயம். ஹைக்கூ என்றால் என்ன? )//
ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்
7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்
கவிதை இது குறித்த மேலதிக விளக்கத்தை பதிவாக வெகு விரைவில் எழுதுகின்றேன்
//பெண்ணவளுக்கு
துணைவனின்
உத்தரவாதம்!//

ஒவ்வொரு கவிதையின் வரிகளும் கலக்கல்....

இன்னும் நிறைய நிறைய கலக்குங்க...
//ஒவ்வொரு கவிதையின் வரிகளும் கலக்கல்....

இன்னும் நிறைய நிறைய கலக்குங்க...//

நன்றி நன்றி நன்றி
Anonymous said…
hi
kavithai's are good, pl note that but they are not kaikoos....if u dont mind, follow some basics of haikkoo's format...thanks for understanding.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு