எங்கிருந்து வந்தாள்
தேவலோக அழகோ.....
பூமியில் பூத்த மலரோ.....
காணும் கண்கள் ஏங்கும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
வேண்டும் என்று தோன்றும்
என்னைக் கடந்து செல்ல - பல
மின்னல் என்னைத் தாக்கும்....!
அவளது அவளது நினைவினைத் தான்
தினம் தினம் மனமதும் சுமந்திருக்கும்
பகலது இரவினைக் கடந்த பின்னும்
பட படவென அலை அடித்துச் செல்லும்
மனதில் ஏதோ புதுவித மாற்றம்.....
மணரம் வரையில் தொடரும் தேடல்....!
நிலவவள் ஒளி தரும் நிலவவள்
அவள் எழில் பாடவே
மொழிகள் தான் போதுமோ
மின்மினி அவளது கண்கள் தான்
அவளது நினைவுகள் சுமந்து தான்
நாட்களும் நகருமோ
ஞாபகம் தொடருமோ
நாளையும் மலருமோ.....?
கண்ணிமைகள் மூடி ஜன்னல் திறந்திடும்போது
காற்றும் கொஞ்சம் சிலிர்த்திடும்,
காதல் நெஞ்சை துளைத்திடும்....
செவ்விதழோ கோவைப்போல சிவந்து நிற்கும்...
தத்துப் பற்கள் பார்க்கும் போது
முத்தென எண்ணம் தோன்றும்
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாள்
முகத்தில் அழகாய் புன்னகை பூத்தாள்!
காலையில் புலர்ந்திடும் வேளையில்
அவள் முகம் காணவே ஏங்குவேன்
கண்களை மூடுவேன்....
கவிதைகள் பாடுவேன்
இரவிலே நடுங்கிடும் குளிரிலே
நிழலையும் பார்க்கவே வாழுவேன்
தனிமையில் வாடுவேன்
தலையணை தேடுவேன்
சிறு பார்வையாலே சின்ன மனம் சிறைப்பிடித்தாள்,
கொஞ்சும் தமிழ் யுத்தம் செய்தாள்
என்னை ஏதோ செய்தாள்...
தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்
முடிவாய் என் மனம் அவளிடம் ஈர்த்தாள்
பூமியில் பூத்த மலரோ.....
காணும் கண்கள் ஏங்கும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
வேண்டும் என்று தோன்றும்
என்னைக் கடந்து செல்ல - பல
மின்னல் என்னைத் தாக்கும்....!
அவளது அவளது நினைவினைத் தான்
தினம் தினம் மனமதும் சுமந்திருக்கும்
பகலது இரவினைக் கடந்த பின்னும்
பட படவென அலை அடித்துச் செல்லும்
மனதில் ஏதோ புதுவித மாற்றம்.....
மணரம் வரையில் தொடரும் தேடல்....!
நிலவவள் ஒளி தரும் நிலவவள்
அவள் எழில் பாடவே
மொழிகள் தான் போதுமோ
மின்மினி அவளது கண்கள் தான்
அவளது நினைவுகள் சுமந்து தான்
நாட்களும் நகருமோ
ஞாபகம் தொடருமோ
நாளையும் மலருமோ.....?
கண்ணிமைகள் மூடி ஜன்னல் திறந்திடும்போது
காற்றும் கொஞ்சம் சிலிர்த்திடும்,
காதல் நெஞ்சை துளைத்திடும்....
செவ்விதழோ கோவைப்போல சிவந்து நிற்கும்...
தத்துப் பற்கள் பார்க்கும் போது
முத்தென எண்ணம் தோன்றும்
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாள்
முகத்தில் அழகாய் புன்னகை பூத்தாள்!
காலையில் புலர்ந்திடும் வேளையில்
அவள் முகம் காணவே ஏங்குவேன்
கண்களை மூடுவேன்....
கவிதைகள் பாடுவேன்
இரவிலே நடுங்கிடும் குளிரிலே
நிழலையும் பார்க்கவே வாழுவேன்
தனிமையில் வாடுவேன்
தலையணை தேடுவேன்
சிறு பார்வையாலே சின்ன மனம் சிறைப்பிடித்தாள்,
கொஞ்சும் தமிழ் யுத்தம் செய்தாள்
என்னை ஏதோ செய்தாள்...
தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்
முடிவாய் என் மனம் அவளிடம் ஈர்த்தாள்
Comments
உண்மையான வரிகள் கூட..
வாழ்த்துக்கள்
//தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்
முடிவாய் என் மனம் அவளிடம் ஈர்த்தாள்//
//தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்//
அருமையான வரிகள்
மணரம் வரையில் தொடரும் தேடல்....!//
கீர்த்தி,
காதல் கீர்த்தனை.
மொழிகள் தான் போதுமோ//
கீர்த்தி,
உன் கேள்வி நியாயமானது தான்.
ஆனால்,
மெளனம் போதும்னா பாத்தா, மெளனத்தால் ஒன்னையும் சொல்ல முடியாதே.!