நீ தானே என் சுவாசம்

நினைவுகள் சுமக்கும் இதயத்தின் ஆழம் புதைத்தேன் உனதுருவம்
கனவுகளை சேர்த்து கண்களில் கோர்த்து அமைத்தேன் புது உலகம்
தினம் தினம் நூறு கவிதைகள் கொண்டு வரைந்தேன் ஒரு கடிதம்
மதியெல்லாம் உனதாக மனமெங்கும் நீயாக காதல் வரமானது
(நினைவுகள் சுமக்கும்)

கண்களின் ஓரம் மின்னிடும் ஜாலம் நீயன்றி யார் தந்தது.....
இனிமைகள் தந்தாய் இம்சையும் செய்தாய் என் முன்னே நீயாய் வந்தாய்
இத்தனை காலம் இல்லாத மாற்றம் என்னுள்ளே யார் தந்தது....
கனவெல்லாம் உனதாக கவியெல்லாம் அழகாக என்னுள்ளே நீயாய் வந்தாய்
(கண்களின் ஓரம்)

பூவோடு உரசும் காற்றுக்கள் பேசும் புதிர் தானே உன் ஸ்பரிசம்
உயிர் வாழ தூண்டும் உணர்வெல்லாம் ஆளும் புதுமையே உன் சுவாசம்
அனிச்சத்தின் அழகாம் அலை வான ஒளியாம் பேசும் மொழியின் மென்மை
மின்னல்கள் இடியாகும் இமையெல்லாம் இருளாகும் இன்பமே உன் வெள்ளம்
(பூவோடு உரசும்)
(நினைவுகள் சுமக்கும்)

Comments

பாடல் ஒன்றிற்கான வரிகளின் ஈர்ப்பு உள்ளது ஒவ்வொரு வரிகளிலும். கவிதையில் தெரியும் அழகு., அதை இசையினில் சேர்க்க இன்னும் மெருகேறலாம்.,முயற்சித்து பாருங்கள் தங்ககையே

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு