விழுவியம் காப்போம்

நம் முன்னோர்கள் விழுவியம் காப்போம் என அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் விழுவியங்கள் என்றால் என்னவென்பது இன்று வரை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதும் இல்லை ஏனென்றால் நாம் அனைவரும் அப்படியான ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டவர்களாகவும், நேரமின்மையில் அவதிப்படுபவர்களாகவும் காணப்படுகின்றோம்.

இனி விழுமியங்கள் சார்ந்த சில தகவல்களை பார்ப்போம். மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்களை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான அன்பு, நாணயம், இரக்கம், நீதி, நேர்மை, நம்பிக்கை, கருத்து, எண்ணம், பக்தி என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம். இவ்வாறான கருத்துருக்களை வாழ்க்கையில் முதன்மையாக கொண்டு செயற்படும், முன்னகர்த்தப்படும் ஒரு தனி நபருடைய வாழ்க்கை அமைதியே வடிவானதாக காணப்படும்.

மேலும் விழுமியங்கள், கலாச்சார கருத்துக்களில் நம்பிக்கையில்லாதவர்களும், பொய்யென உரைப்பவர்களும் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் அனைவரும் தப்பான எண்ணம் கொண்டவர்கள் என்றோ, தப்பானவர்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை. முன் வைக்கப்படும் ஒரு விடயமானது அதன் கருத்து தெளிவுடனும், உண்மையானதாகவும், நன்மை பயக்கும் வகையினதாகவும் காணப்படும் பட்சத்தில் அவற்றினை பின்பற்றுவதில் தவறில்லை என்பதனையே சொல்ல வருகின்றேன்.

விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம்.

  1. தனி மனித விழுமியங்கள்
  2. பண்பாட்டு விழுமியங்கள்

தனி மனித விழுமியங்கள்

தனி மனிதருடைய வாழ்க்கையை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

பண்பாட்டு விழுமியங்கள்

ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றது.

ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. மனித விழுமியங்களை ஒழுங்கு படுத்துவதற்கும், மனித நாகரிகத்தை பிறழ்வின்றி வைத்திருப்பதற்கும் இறை நம்பிக்கை மிக அவசியமானதாகும். இறை நம்பிக்கை எனும் போது அவரவர் இஸ்ட தெய்வங்களை வழிபட்டு வரலாம் மேலும் எம்மிடம் காணப்படும் சிறந்த பண்புகளை ஏனையவர்களுக்கும், சிறுவர்கள் மத்தியில் விழுமியங்கள் சார்ந்த நல் கருத்துக்களை சேர்ப்பித்தலும் ஒவ்வொருவருடையதும் முக்கியமான கடமையாகும்.

விழுமியங்களை பேணி நல்லதொரு தேசத்தை ஆள்வோம்

Comments

//உங்களுக்கான அன்புப் பரிசு என் வலையில் காத்திருக்கின்றது//

அன்பு பரிசென சொல்லி இப்படி ,மாட்டி விட்டுட்டீங்களே அண்ணா :(
விழுமியம்... ... ......
வந்தியதேவன்... இவ்வளவு வடிவா ஒரு பதிவு. விழுமியங்கள் பாதுகாக்கப்படவேண்டியவை. அதற்கும் நீங்கள் இட்ட கருத்துக்கும் என்ன சம்பந்தம்??
உங்கள் வலைத்தளத்திற்கு விளப்பரமா??
அப்படியானால் இறைய பின்னுட்டம் வந்த பதிவில் போய் பின்னுட்டம் இட்டால் reach ஆகும்..
கீர்த்தி... விழுமியம் இல்லை. இருப்பு கூட கிடையாது தமிழனுக்கு. புத்தர் சிலைகளும் பார்களும் கிறிகட்டும் தான். விழுமியம் மண்ணாங்கட்டி என்று எழுதுவதைவிட்டு காதல் சினிமா என்று எழுதினால் வந்தியதேவன் போன்றவர்கள் நல்லாய் பின்னுட்டம் இடுவார்கள். குற்றம் கூறுவதாக நினைக்க வேண்டாம். மனஉளைச்சல் தான்..
கிறுக்கன் said…
எமது மூதாதையர்ர் சொன்ன விழுமியங்களில் "உடை"யும் ஒன்றுதானே கீர்த்தி.. அதை இன்றைய பெண்கள் கடைப்பிடிபதில்லையே..

Popular posts from this blog

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு