தோற்ற மாற்றம்



அகல் கண் கொண்ட

பார்வைகள் பலவிதம்

ஏனோ பார்ப்பவர்

நிலை அதில் மாறுதே!

கூர் காதிலே கேட் பவை

நன்மை எண்ணாது

நலம் தீர விசாரித்து

தெளிதலே சிறப்பு!

பேச்சிலே மயக்கிடும்

விந்தை கொண்டான்

அங்கே வீழ்வதும்

மனிதனின் மடமையே!

ஆழ்கடல் ஆழமும்

அழந்தால் சிறிதே

அவன் சிறு மன ஆழமோ

அதனிலும் பெரிதே!

ஆளுமை எண்ணமே

ஆளுதே பூமியை

அன்பென்ற மென்மையும்

அடிமையே அதனிலே!

தோற்றத்தை மாற்றிடும்

உலகிலே - இன்று

பொய் மாயமாய் மாறுதே

மனித மனமே!

வீழ்ச்சியோ மீட்சியை

நாடுதே - இங்கே

மீதமோ மிருகத்தின்

கொடுமை ஆட்சியே!

Comments

அருமையாக கவிதை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு