Posts

என் முதுகிலுள்ள அழுக்கை அகற்றிவிட்டு உங்களிடம் வருகிறேன்

இன்று எங்கு பார்த்தாலும் ஒருவர் இன்னொருவரை குறை கூறுவதும் இன்னொருவர் மற்றொருவரை குறை கூறுவதுமாக தொடர்கின்றதே தவிர தன் குறைகளை இனங்கண்டு அவற்றை அகற்றுவார் மிக குறைவாகவே இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களை அசைப்போட்டதில் அருவருப்பு தன்மை சூடிக்கொண்டது. உண்மை தான் இன்று பொதுவாக ஆண்களே தவறு செய்பவர்களாக சுட்டிக்காட்டப்படுகின்றார்கள் பெண்கள் விடயத்தில் ஆண்கள் மோசமானவர்கள் அப்படி இப்படி எல்லாம் கதைக்கின்றார்கள் ஆனால் ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்பதே என் வாதம் (இங்கு தவறு செய்யும் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்) என்னடா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தன்னினத்தைப் பற்றியே குறைக்கூறுகின்றாளே என நினைக்கின்றீர்களா? யார் செய்தால் என்ன தவறு தவரு தானே...? அதிலென்ன ஆண் பெண் என்ற பேதம்??? என்ன சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றாள் என யோசிக்கின்றீர்களா? விடயத்தோடு தான் பேசுகின்றேன் ஆம் கடந்த சில மாதங்களாக எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பெண் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் தொலைப்பேசியில் அழைத்துக்கொண்டிருந்தாள் ஆனால் அந்த குறித்தப்பெண் யார் என்பது சார்பான தகவ...

இதயம் பேசுகிறது

இளமை மறந்து இரவுகளோடு இருண்டு போன நாட்களைக் கடந்து இதயங்கள் பேசிக்கொள்ளும் காலம்..... இது இனிமை காலம்! தனிமைச்சிறை தன்னை கவ்விக் கவ்வி தலையாட்டிச் சென்றதொரு காலம் அது இறந்த காலம்! இழப்புக்கள் இடியென தாக்க... இன்பத்தின் சுவடுகள் மறைய... இருதயம் நொருங்கிப்போன தடயங்கள் ஏராளம் அவன் இருப்பான் இவன் இருப்பான் சொல்லிச் சொல்லி கடந்து வந்தேன் சொல்லாமல் எவனிருப்பான்? என்று ஏங்கியதொரு காலம் - அது கடந்த காலம்! நரகமும் சொர்க்கமயம் விசமதும் அமிர்த உணவு அகிம்சைகள் அணைத்துக் க்ஒண்டு அன்பதோ என்னை ஆளும் அழகிய காலம் அது என்னோடு நீ இருக்கும் நிகழ்காலம்! மீண்டும் மீண்டும் வேண்டும் இந்த இனிமை காலம் நிஜங்களை என்னில் ஏந்திக்கொள்ள...!

அன்பே நீ வருவாயா...?

மறுத்துப்போன உணர்வுகளை சுமந்து உதிரம் சிந்திய என் இதயத்தூடும் உலாவரும் உனக்காக எழுதுகின்றேன் ஒரு கடிதம் பதில் கூட வினா தொடுக்கும் வேள்விகள் அரங்கேறியதில் உள்மன ஓலங்கள் மௌனமாய் மறைந்தன தவிப்போடு தடுமாறிய கணங்களில் தலைசாய்க்க மடி தேடியதில் தோற்றுப்போன என் மனவலியை தலையணையைத் தாண்டி யார் அறிவார்? உனைத் தேடி உனைத்தேடி உரிமைப்போர் நிகழ்த்தி தோற்ற விம்மலின் ஏக்கத்தோடே தூக்கம் தொலைத்தது என் எத்தனை இரவுகள்? இறுகிப்போன மனதினில் இறுக்கி வைத்த உன்னன்பில் இளைப்பாற இன்றும் துடிக்கிறேன் அன்பே நீ வருவாயா...?

விந்தை உலகில் விழித்தெழு மனிதா....!

" சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கி றான் " என்று ஆய்வுகள் கூறுகின்றன . அன்றாடம் எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படுவது தான் இது சார்ந்த தகவல்கள் என்றாலும் கனவு என்பது உண்மையா ? என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்று வரை காணப்படவே செய்கின்றது . அதனிலும் கனவு கலர் கலராக வருகின்றனவா ...? அல்லது பிளாக் & வைட்டாக வருகின்றனவா ..? என்றெல்லாம் பலவாறான சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது . மேலும் கனவு ஏன் , எதனால் , எப்போது ஏற்படுகின்றது ? கனவு காண்பதென்பது ஒரு குறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன . இது சார்ந்த சில தகவல்களை ஆராய்வோம் . கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள் , காட்சிகள் , ஓசைகள் , உணர்வுகள் , நிகழ்வுகளைக் குறிக்கிறது . ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண அறிவியல் புரிதலை இன்று வரை அடைந்தபாடில்லை . ஒரு நபர் சிறிது நேரம் ஏதா...

LOVE LINES

Oh my Dear! Am Wondering….. Yes! Still am wondering about the precious life with you Unexpectedly, you came to my life as a great friend & Unconditionally became a best part on me I know, when you read those lines You will be laugh out & think I’m joking But believe this my love; this isn’t a lyrics This is a real thought from a small heart With lots of love Sometimes you will throw this as a paper But just remember this is my heart It’s only beating for you Just for you I couldn’t include my feelings in these lines And I don’t know to express, how my love growing for you And what inside me is real But am sure one day let you will know my love And Search me as am searching you Yes! I mean it darling Just smile for me Memories of you hugging me everyday Moment I spent with you are the real risen in life Dear.. my mind won't settle without you Love me as am loving you You can just throw me out But how you will er...

மெழுகா.... நான்...???

வாழ்வு இருண்ட என்னை- நீ மடி சாய்த்த நொடியில் மபுணிப்பு மறைந்தது! கவலைச் சிறை எனை விடுத்து களிப்பு என் இதயக்கதவை அணைத்துக் கொண்டது! மெல்லத் தெளிந்த என் மனதில் - மேன்மை உருவம் நீ...! செல்லம் கொஞ்சும் உன் சிரிப்பில் கலந்த நெஞ்சம் இன்பக்கோர்வை ! கானல் தான் இனிமையோ இரு நாட்களில் இடிந்த - என் இதயத்தை வலிகள் சூழ்ந்தன  அன்பனே...! உயிர் சொரியும் - உன் இனிய வார்த்தைகள் எங்கோ தொலைந்து....; மனம் கணக்கும் மௌன பாஷைகள் மொழியானதால்....; உன்னன்பு கரம் பற்றி உயிர் பெற்ற நானோ சிலையாகிறேன்! இன்று மெழுகாய் நான் உருக்கும் சுடராய் நீ!

அந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன!

Image
அதிகாலை துயிலலில் பனித்துளிகள் பட்டு நீராடும் புல்வெளியை தென்றல் தொட்டு செல்லும் வருடல் போலவே.., வலிகள் தாங்காமல் நொறுங்கும் என் இதயத்தை சேர்வையாக்கி கோர்வை செய்யுது உன் அன்பு! வேண்டும் என துடித்து விரும்பிப் பெற்ற விரத தவத்தின் பரிசுகள் என்னை பகடையாக்கி பார்த்து சிரித்து மகிழ்ந்திட.., மெல்லிய தூரல்களே சிலிர்க்க வைக்கும் என்னில் அடை மழையின் சாரல் பட்டும் தெப்பமாய் வெப்பம் உள்ளே! என்றாலும்; கவலைகளை சுமந்து வெம்பும் நொடிகள் தாண்டி அந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன..; நெஞ்சோடு நீ இருப்பதால்!