68. சிற்பியும் செதுக்களும்

உருவம் கொடுப்பதற்காக
கற்களையும் சிற்பியையும்
படைத்தான் இறைவன்!




அவனே சிற்பியாய் நின்று
உருவத்தோடு உயிரையும்
கொடுத்துப் பார்த்துப் பார்த்துச்
செதுக்கிய சிற்பம் நீ

அவன் செதுக்கல்களில்
தான் எத்தனை நேர்த்தி
எத்தனை நுணுக்கமான
வளைவுகள்.....
அப்பப்பா...
அற்புதம் கண்டு வியக்கின்றேன்!

அங்கங்கே
ஒவ்வொன்றாய்
கண், காது, மூக்கு, வாய் என
ஒன்றோடு ஒன்றாய்
ஒவ்வொன்றாய்
எத்தனை செதுக்கல்கள்…




இவற்றுக்குப் பெயர் தான்
உறுப்புக்களாம்
உதிரம் கொண்டல்லோ
செய்துள்ளான் ஒவ்வொன்றையும்!

சிற்பங்கள் சிறப்பானவை
போற்றத்தக்கவை
பள்ளிக்காலம் தொட்டு
இன்று வரை சிற்பங்களையும்
அவற்றின் கலை அம்சங்களையும்
கண்டு வியந்த நெஞ்சம்,

இன்று......,
உனை நோக்கி பயணிக்கின்றன
என் அதிசய பார்வைக்கூடே
அதிசயமாய்!




உன்னிலும் உயர்ந்த சிற்பம்
உண்டோ உலகில்
உயர்வைப் பெற.....
உயர்வைத் தர.....?

உன்னதம் தாங்கிய உன் வம்சம்
படைப்பதற்காய் எத்தனை சிற்பிகளை
படைத்திருக்கின்றான்
தாய் என்னும் சிறந்த ஸ்தானத்தோடு?




உதிரத்தை பாலாக்கி - உன்னை
உயிராய் ஆளாக்க
தன்னை பாழாக்கி - தரணியிலே
தவமிருந்து விதைக்கின்றாள்
தாயானவள் உன்னை!

உயர்ந்த எண்ணத்தோடு
இத்தனை அழகாய்
உன் பிறப்பை அலங்கரித்த
அவனுக்காய் (இறைவன்)
அவனாய் நின்று உனை விதைத்த
அளுக்காய் (தாய்)




செய்தது தான் என்ன?
இத்தனையும் உனக்காய் செய்த
அவர்களுக்காய் - நீ
செய்தது தான் என்ன?

வாழ்க வென்று வாயார
வாழ்த்துப் பாடி
வடிவாய் உன்னை
வடிவமைத்த அவர்களுக்காக
வாழ்ந்து விட்டு தான் போயேன்

மனிதம் கொண்ட மனிதனாய்
கொஞ்சம் வாழ்ந்து விட்டு தான்
சாயேன்!






Comments

அழகான கவிதை மற்றும் அதற்கு பொருத்தமான சித்திரங்கள். இந்த படங்களை யார் வரைந்தது..
Unknown said…
அழகாகத்தான் இருக்கிறது கவிதை...
வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா! வரைந்தவர் யாரென தெரியாது மன்னிக்கவும்

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு