70. நன்றி நவிலலும், ஊக்கப்படுத்தல் விருதும்..........



 


 

 

 

 

 

 

 

 

கடந்த 09.09.2009 அன்று கிறுக்கல்களையும் கவிதைகள் எனும் பெயரில் சொல்லிக்கொள்ளும் (கவிதையை கொல்லும்) என்னையும் மதித்து  http://enularalkal.blogspot.com என்னும் பெயரில் வலைத்தள Blogspot வைத்துள்ள  Matooran Peri மனதில் தோன்றும் எண்ணங்களின் தோன்றல் வடிவம் என்னும் தனது  உளறல்களுக்கூடாக என் வலைப்பூவுக்குள் (http://keerthyjsamvunarvudal.blogspot.com)  தன் கால் தடங்களை பதித்து சென்றது மட்டுமல்லாமல் ஊக்கப்படுத்தல் விருதினையும் வழங்கியுள்ள அவருக்கு எனது முதற் கண் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 

 

 

 

 

 நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ஓவரா நன்றி சொல்லிட்டேனோ முறைக்காதீங்க நிறுத்திடுறேன்.

 

 

 

 

 

 

 

 வேலைப்பழு காரணமாகவே உங்களைப்பற்றி எழுதுவதில் இத்தனை தாமதங்கள் ஏற்பட்டது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.



 

 

 

மேலும்......!

 

 




 

 

 

 

 

 

 

இந்த ஊக்கப்படுத்தல் விருதினை பொத்தி வைத்துக்கொள்வது அவ்வளவு நல்லதாக அமையாது என்பதை ஊகித்து, என் போன்ற வளரும் வலையுலக சமூகத்தில் பிரவேசித்துள்ள இருவரை தேர்வு செய்து வழங்க நினைத்து வலைத்தளங்களுக்கூடாக நுழைந்து மீண்ட பொழுது மூச்சு முட்டி மௌனமானது மனது.......!

 


 

 

 

 

 

 

அப்பப்பா.... எத்தனை  நுணுக்கமான எழுத்து நடைகள் ஆச்சரியப்பட வைப்பதாக பொய் கூற விரும்பவில்லை ஆடிப்போய் நின்று விட்டேன் (முன்பாக வேலைப்பழு என்பதை மட்டும் சுட்டிக்காட்டி எஸ்கேப் ஆக நினைத்திருந்தேன்....  மன்னிக்கவும்! எழுதாமல் திணறியதற்கு இதுவும் ஒரு காரணம்) 





 

 

 

  

 

 

 

 

யாருக்கு இவ்விருதினை வழங்குவது என்பதில் எனக்கும், மனதுக்கும் இடையில் அகிம்சை யுத்தம்! அப்பப்பா முடிவை தேடி முடியாமல் நொந்து முட்டி முட்டி யோசித்ததில் மூளைக்குள் முந்திக்கொண்ட இரண்டு வலைத்தளங்களை வகைப்படுத்தி ஊக்கப்படுத்தல் விருதினை வழங்கி மகிழ்கின்றேன் மனப்பூர்வமாக இன்னும் இன்னும் பல்வேறான சாதனைகளை உங்கள் தமிழ் ஆர்வத்தினூடே வெளிச்சப்படுத்துங்கள் என்று வேண்டிக்கொண்டு......!

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

கொடுக்கின்றேன் கொடுக்கின்றேனென இவ்வளவு நேரமா அறுவல் மழை பொழிகிறாளேனு திட்டுறிங்கனு விளங்குது இதோ அந்த மூவரை வரிசைப்படுத்திடுறேன்



 

01. சுபானு

சுபானு என தன்னை சொல்லிக்கொள்ளும் தீவிர தமிழ் ப்ரியனான இவர் 2007 March மாதத்திலிருந்து ஊருக்கு நல்லது சொல்வேனு வலைத்தளப் பதிவுகளை இட்டு வரும் ஒரு சிறந்த ரசணையாளன்.   http://unchal.blogspot.com,

http://shayanth.blogspot.com,  

போன்ற பெயர்களில் வலைத்தளங்களை வைத்துள்ள இவர் தன் எண்ணங்களையும், உணர்வுகளையும் நல்லாவே ஊஞ்சலாட விட்டிருக்கின்றார். இவரோட வித்தியாசமான சிந்தனைகளுக்காகவே இந்த விருதை வழங்குறேங்க



(இவரது பெயரை எழுதுவேனானால் Dairy Milk வேண்டித் தருவதாக சொன்னது வேற கதை......... இதை மறந்துடுங்கோ...!)


 

 

 

02. குணா

இவங்கள பற்றி சொல்லவே வேண்டாங்க....., பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்தில் தழிழ் பற்றை எப்படியாவது  புகுத்திடனும்னு  கூறிக்கொண்டே  

http://www.nillal.tk

http://nillal.wordpress.com,

என்னும் வலைத்தளங்களை வைத்திருக்கும் இவர் ஒரு சிறந்த பதிவாளன்.  விஞ்ஞானம் சார்ந்த வியக்கத்தக்க பதிவுகளை தெளிவாகவும் அழகாகவும் எழுதுறாருங்க


இன்னும் இவரை பற்றி சொல்லி கொண்டே போகலாங்க.....  நல்ல மனிதர், பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துவதில் வல்லவர். பிச்சக்காரனோட பேசுறதானாலும் இராஜா, இராஜானு சொல்லித்தான் கதைப்பார். இவரோட இந்த நல்ல குணத்துக்காகவே இந்த விருதுங்க






Comments

குணா said…
என் மனமார்ந்த நன்றிகள்... நானோ தமிழ் என்ற மாபெரும் அகிலத்தின் சிறு துளிதான்...அத் துளி கூட வீணாக கூடாது என்ற உணர்வுள்ள உங்களை போன்றவர்களே நல்ல சமூக சிந்தனையாளர்கள்...தமிழிச்சியாகவே வாழ்ந்து சிரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சிந்தனை சிறகினிலே. என்ன இது படத்தோடு போட்விட்டீங்க.. விரைவில் பதிவிடுகின்றேன்.. மீண்டும் நன்றி.
///வேலைப்பழு காரணமாகவே உங்களைப்பற்றி எழுதுவதில் இத்தனை தாமதங்கள் ஏற்பட்டது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..

நானும் இதே காரணத்தைக்தான் சொல்லப்போகின்றேன்..
//என் போன்ற வளரும்..
இது கொஞ்சம் ஓவர்..
சிறு துளி தான் பெரு வெள்ளமாகும். தமிழர் நாம் தமிழர் என்ற உணர்வோடு தமிழர்களாகவே வாழ்ந்து மாள்வோமாக!

keep rocking anna
உங்கள் ஆற்றல்கள் வியக்கத்தக்கன சுபானு......... விரைவில் உங்கள் பதிவுகளை எதிர்ப்பார்க்கின்றேன்

வாழ்த்துக்கள்
இவ்வளவு பெரிய நன்றிகளா? புதியவர்களைத் தட்டிக்கொடுப்பது மூத்தவர்களான( வயதில் அல்ல வலையுலகில்) எங்கள் கடமை. உங்கள் கவிதைகள் போல் இந்தப் பதிவில் இருக்கும் படங்களும் அழகு. சுபானு, குணா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
விருது கொடுத்த உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு