72. வாழ்க்கைத் தேரில் காதல்+அழகு+கடவுள்+பணம்















எங்கோ இழுக்கத்தொடங்கிய தேருக்குள் அமர்ந்து கலையமுது பொழியும் சுவையமுது விடயங்களை அசைப்போட்டு, அள்ளிப்பருகி இன்ப வெள்ளத்தில் திழைத்துக் கொண்டிருந்தேன் அமைதியாக......! எவ்வளவு நாளிகைகள் நாங்கள் மாத்திரமே இழுத்துக் கொண்டிருப்பது என ஒருவர் மாறி ஒருவராக முன்னகர்த்திய தேர் மன்னார் அமுதனிடம் வந்து சேர, அவர் மெதுவாக...... வடத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என மூவரை தெரிவு செய்து அதில் ஒருவராக என்னிடமும் அனுப்பிவிட்டிருக்கின்றார். (கொஞ்சம் பிடித்து இழுத்துத்தான் பார்ப்போமே....!)


வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காதல்+அழகு+கடவுள்+பணம் ஆகிய இந்நான்கு விடயங்களையும் மிக அழகாக குறிப்பிட்டிருக்கும் அவருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு் என்னையும் மாட்டிவிட்டிருக்கும் அவரை ஏதாவது விடயத்தில் புகுத்தி என்னைப் போல குழம்ப வைத்து இரசிக்கும் சந்தர்ப்பம் அமையாமலா போகும்??? என்பதை நினைவில் பதித்து அவர் அளவிற்கில்லாவிடினும் என் அறிவுக்கு எட்டிய விதத்தில் பதிவிடுகின்றேன் உங்கள் பார்வைக்காக!.

இவ்ளோ எழுதிட்டாய் இன்னும் விடயத்துக்கே வரல ஓவர் சீன் போடாதனு நீங்க சொ(கொ)ல்ல வர்றது புரியுதுங்க... எதைப்பற்றி முதலில் எழுதுவதுன்ற குழப்பம் தாங்க இந்த சுனக்கமா நிக்குது சரி சரி கோபப்படாதீங்க அமுதனின் பதிவு ஒழுங்கிலேயே இதோ ஆரம்பிச்சிடுறேன்.



வாழ்க்கை = கடவுள்+அழகு+காதல்+பணம்


கடவுள்













எழுதுறேனு சொல்லிட்டேன் என்ன எழுதனும்னு தெரியலயே கடவுளே....! இப்படித் தாங்க எந்த ஒரு சின்ன விடயத்தை நினைத்தாலும், தொடங்கினாலும் சொல்லிடுறேன். உங்கள்ல எத்தனைப் பேருக்கு இந்த பழக்கம் இல்லைனு சொல்லுங்க. ஆமாங்க மனித சக்தியை தாண்டி உலகின் ஒவ்வொரு அசைவையும் ஆழும், ஆழக்கூடிய, மாற்றியமைக்கக் கூடிய ஒரு பரிபூரண சக்தி இருக்குங்க அதைத்தான் கடவுள்னு சொல்றோம்.

அப்படி கடவுள்ன்ற ஒரே ஒரு சக்தி தான் இருக்குமாகவிருந்தால் இங்கே இத்தனை மதங்கள் எதற்காக? இத்தனை தெய்வங்கள் எதற்காக? னு நீங்க கேட்பது புரியுதுங்க! நம்ம மனித இனத்துக்குத்தான் எதுவா இருந்தாலும் தனக்கு தனக்கு என வேண்டுமே (சும்மா கொடுத்தால் சோகமா இருந்தாலும் தேடிப்போய் வாங்கிப்பாங்க (என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்)) அப்படித் தாங்க எனக்கு உனக்கு என அவங்கட இஸ்டத்துக்கு வெவ்வேறான பெயர் கொண்டு அழைக்கிறாங்க (இது என்னோட தனிப்பட்டக் கருத்து).

கடவுள் என்பவர் பல்வேறான பெயர், உருவங்களைக் கொண்டு வணங்கப்பட்டாலும், பொதுவாக (இந்து, கிறிஸ்தவ, யூத) சமயங்களில் முதன்முதற் கடவுள் ஆண் எனவே சித்தரிக்கப்படுகின்றது. அது சரிங்க கடவுள்னா ஆணா? பெண்ணா?, அவர் உயிர் வாழ்கின்றாரா? இல்லையா? இப்படி பல கேள்விகள் எனக்குள்ளும் இருக்குங்க (யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ)

”அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
நீ வாழும் உலகின்
ஒவ்வொரு அணுவாயும்
உனக்குள்ளும் இருந்து
ஆள்வதான - ஒரு
பரிபூரண சக்தி..... - கடவுள்!”


அழகு












பள்ளிக்கூடத்துல எனக்கு பக்கத்து இருக்கைல இருக்கும் நர்மதா கொண்டுவரும் பென்சில், புத்தக கவர், அவள் போடும் புது புது சட்டைகள்னு...... தொடங்கி விஜயை விட அஜித் கலருன்றதால அவர் தான் அழகுனு சண்டைப்பிடித்ததில் இருந்து, கண்ணாடி முன்னாடி மணிக்கணக்காக நின்று நான் அழகா இருக்கேனா, அழகா இருக்கேனானு வீட்ல உள்ள ஒவ்வொருத்தங்ககிட்டயும் கேட்க யாருமே கண்டு கொள்ளாமல் விட நான் அழகுதானு நானே சொல்லிக்கொண்டு கண்ணாடியோடு தனியாகப் பேசிக் கொண்டு சுயதம்பட்டம் அடித்துக் கொண்டது ஒரு காலம்ங்க. (என் தொல்லை தாங்காமல் தம்பி குரங்குனு திட்டுனதெல்லாம் வேற கதைங்க)

உண்மை சொல்லனும்னா, அழகு....ன்றது தோற்றத்தை வைத்தோ, உடுத்தும் கலர் கலரான உடைகளை வைத்தோ தீர்மானிக்கப்படுறதில்லைங்க! (உயிரற்றவற்றுக்குனா தோற்றத்தை அழகுனு சொல்வது பொருந்தும்). சிறந்த நடத்தையும், மற்றவர் மீது அன்பு செய்யும் குணத்தையும் கொண்ட அகத்தின் அழகே நிஜமான அழகுங்க!

”சிலை போல தோன்றுகின்ற சித்திரமும் தனியழகு;
முகம் நோக்கிச்
சிரித்துவிடும் அன்பே நீ பேரழகு!
தினம் தோறும் நீளுகின்ற
நினைவெல்லாம் சீரழகு;
சளைக்காமல் அன்பு செய்யும்
சகியே நீ பூவழகு!
பிம்பங்கள் காட்டுகின்ற
நிழல் கூட வேறழகு;
வேற்றுமைகள் காட்டாத
அகமே உன்னழகு - என்றும்
திவட்டாத தொகையழகு!”



காதல்











”காதல்.........” சொல்லும் போதே இனிமையான உணர்வு நெருடல்கள் நெஞ்சுக்குள் பஞ்சுப்போல! காதல்க்கு ஒன்றின் மீதான பற்று, ஒன்றுடனான நெருக்கம், ஒன்றில் கொண்ட ஆதிக்கம்னு பல்வேறான கருத்துக்களை சொல்றாங்க ஆனால் காதல்ன்றது உருவாக்கப்படுவதில்லை இரண்டு உயிர்களுக்குள் துளிர்விடும் உணர்வு பூர்வமான ஒன்றுகூடல்ங்க.....(இது உடலும், மனமும் சேர்ந்து இலயிக்குமிடம்) இதயங்களின் சங்கமம்ங்க, எத்தனை பேர் இருந்தாலும் அவனுக்கு அவளையும், அவளுக்கு அவனையும் மட்டுமே அழகாக காட்டும் சிறப்பான உறவுப்பாளம்ங்க! சிரிக்கும் போது சேர்ந்து சிரிக்கும், அழும் போது ஆறுதலாகும் அன்பில் தொடுகை காதல். இன்னும் சிறப்பா சொல்ல வேண்டுமென்றால் அதிரசமும் ஒன்று சேர்ந்த பழரசம் காதல், இருந்தாலும் பிரிவுனு வரும்போது மரண விளிப்பையே தொட வைக்கும் கொடிய அமிலங்க...!

உங்களுக்கு புரியுறத போல சொல்லனும்னா, காதலை கடலுக்கும், காதல் செய்பவனை கடலில் விழுந்தவனுக்கும் ஒப்பிடலாங்க, அதாவது இங்கே வீழ்ந்து நீந்தத்தெரிந்தவன் கரையேறுகின்றான், முடியாதவன் மூழ்கிப்போகின்றான். ஆகவே அன்பர்களே...., என் இனிய நண்பர்களே...., எல்லாத்துக்கும் ரெடியானதுமே கலத்துல இறங்குங்கோ! காதல் செய்யுங்கோ........!

. ”நினைத்தவுடன் நெருக்கம் கொள்ள
நீ திட்ட விலகிச் செல்ல
நேற்று முதல் முடிந்தது தான்
ஏனோ முடியவில்லை இன்று
முண்டியடித்து........
மண்டியிட்டு............
போ என்குது மனசு
உன்னை நோக்கி
- உன்மீது கொண்ட காதலால்!
என் தேடலில் தீர்வானது காதல் கவிதைகளில் கருவானது காதல் என்னை எனக்கே அழகாய் உணர்த்தியது காதல்
இதெல்லாம் காதல் அரும்பை சூடிய செடி அவனின் வரிகள்
அற்புதமான வரிகளா இருக்குதில்லையா?

”உயிருள்ளவரை உறவாய் வருவது உண்மைக்காதல்” காதல் காதல் காதல் காதல் செய்து சாதல் நன்று!

பணம்












பணத்தை பற்றி எழுத நினைக்கும்போதே முதலில் ஞாபகத்துக்கு வருவது பணம் என்னடா பணம் பணம்..., குணம்தானடா நிரந்தரம்ங்கிற பாடல் தாங்க எவ்வளவு அற்புதமான கருத்தை தன்வரிகளுக்கூடா அந்தமான் காதலி படத்துல தெளிவா பாடி இருக்கார் டி.எம்.எஸ்..! என்னோட கருத்தும் இது தான்ங்க.


இன்றைய வேகமாக இயங்கும் உலகில் ஒவ்வொரு சுழற்சியிலும் பணம் தான் பிரதானமா போற்றப்படுகிறது. இன்று உன் கையிலுள்ள பணம் நாளை இன்னொருவன் கையில்....! அப்படி கை மாறும் பணம் ஒரு பிச்சைக்காரன் கையில் போய் சேருமாக இருந்தால் நாளைஅவன் தான் பெரியவன்னு சொல்லித்திரியும் சமூகம். இங்கே பணம் தான் பிரதானமா கொள்ளப்படுதே ஒழிய, ஒரு தனி மனிதனல்ல. பணத்தை கொண்டு அனைத்தையும் விலைக்கு வாங்கிடலாம்னு தவறான எண்ணத்தோடே சதா திரியும் மனிதர்கள் இதைப்பற்றி பேசும் போதே மனசுக்குள் ஏதோ ஒரு வலி பிறக்குதுங்க.

நிலையில்லா ஒன்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்கனு புரியல, இவ்வளவு சொல்றீங்களே உங்களுக்கு பணம் தேவையில்லையானு கேட்குறீங்களா? பணம்...... இன்று பண்டமாற்று ஊடகமாக பயன்படுத்தப்படுவது, வேண்டாம்னு சொல்லலங்க அளவோடு இருக்கட்டுமேனு தான் சொல்றேன். அதிகமாக சேர்க்கனும்னு ஆசைப்படுறவங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுறேன் போகும் போது நாம யாருமே எதையுமே எடுத்துச் செல்ல போறதில்லைங்க இருக்கும் வரை நம்மலாள முடிந்தளவு எல்லோருக்கும் உதவி செய்யும் நல்லுள்ளங்களா வாழ்ந்து மாள்வோம் மனிதமுள்ள மனிதர்களாய்! (உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுக்க சொல்லலங்க உங்களால முடிந்தத கொடுங்க வாழ்வீர் வளமாக நலமாக (தனக்கு மிஞ்சி தான் தானம்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க))

”பணம் பணம் என
பேயாய் அலையும் மனிதா உன்
குணத்தை விற்றிடாதே - நீ
விலை பேசி வாங்க முடியாதது
சக மனிதனின் மனம் - ஆதலால்
உன் மபுணிப்பு வரை
அளவாய் சேமித்து அகிலத்தில்
நீ நீயாய் வாழ்ந்திடு”
நீ தான் பணத்தை ஆள வேண்டும், பணமானது உன்னை ஆளும் வரை விடாதே

ஒருவாறு தேரில் ஏறி வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காதல்+அழகு+கடவுள்+பணம் ஆகிய இந்நான்கு விடயங்களுக்கூடாகவும் எனக்கு தெரிந்த விதத்தில் என் அனுபவத்தோடு பயணித்துள்ளேன். அதாவது அளவோடு இருந்தால் எல்லாமே நல்லதா அமையும்ன்றது என்னோட கருத்து. இது சார்ந்த உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.


மேலும் நான் இது வரை இழுத்து வந்த தேரை நல்லபடியா இழுத்து முடிச்சிடுவாங்கன்ற நம்பிக்கையோடு வடத்தை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மூவரிடமும் ஒப்படைக்கின்றேன்.

01.பால்குடி

02.சுபாங்கன்

03.சிந்து



நன்றி!

Comments

தலைப்பு மட்டும்தான் இருக்கு வேற எதையும் காணவில்லை?????
நாம் பார்க்கும் போது, மரங்கள் அசையாமல், அமைதியாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதற்காகக் காற்று இல்லையென்றோ, எந்தச் செயல்பாடும் நடைபெறவில்லையென்றோ பொருளில்லை. நம் கண்களாலும்,காதுகளாலும் அதனைக் காண முடியவில்லையென்றே பொருள். அதுபோல் தான் நம் தேடலும்.

நம்மால் கண்டடைய முடியவில்லையென்பதற்காக ஒரு பொருளை இல்லையென்று சொல்லக்கூடாது.

நான் நோக்குவதும், நீங்கள் நோக்குவதும், பதிவர் நோக்குவதும் வேறு வேறு கண்களிலிருந்து.

”மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்போம்”.ஆனால் அது சொல்லப்படும் முறையறிந்து சொல்ல வேண்டும். ஒருவரின் அனுபவப் பகிர்வில், நீங்கள் தொலைத்தவற்றை ஏன் ஐயா தேடுகிறீர்கள்.

விமர்சகன் என்பவன் எது பிழையென்று மட்டும் கூறலாகாது. எது சரியென்றும் கூற வேண்டும்.

சிந்தனா,
உங்கள் எண்ணங்கள் அருமை. யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் எழுதுங்கள், சிறந்த ஆக்கங்களை நீங்கள் ஏற்கனவே படைத்துள்ளீர்கள். மேலும் மேலும் படைப்பீர்கள். வாழ்த்துக்கள்.


பாகவதர்களே,
பிரசவ வலியில் அழும் ஒரு தாயின் ஓலத்தில் ஸ்ருதி தேடாதீர்கள்


ஒருவரின் ஆக்கத்திறனை மதிப்பிடவே - பின்னூட்டம் (மறுவினை)
மட்டம்தட்ட அல்ல.


பணிவன்புடன்
மன்னார் அமுதன்
//தலைப்பு மட்டும்தான் இருக்கு வேற எதையும் காணவில்லை?????

இதோ எழுதிட்டேன் அண்ணா
தலைப்பை உங்களது எண்ணங்களில் அழகாகன வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு