77. உன் மனைவியாக வேண்டும்

உன்னை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்
காலையும் மாலையும்
கண் இமைக்காமல்
உன்னை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்!




 







உன் தேவைகள் எல்லாம்
பார்த்துப் பார்த்து
செய்ய வேண்டும்
என் தேவைகள் விடுத்து
பறந்து பறந்து
உன் தேவைகள் எல்லாம்
பார்த்துப் பார்த்து
செய்ய வேண்டும்!

 













உன் விருப்பங்களைத்
தேடித் தேடி
கண்டறிய வேண்டும்
என் விருப்பங்கள் மறந்து
ஓடி ஓடி
உன் விருப்பங்களைத்
தேடித் தேடி
கண்டறிய வேண்டும்!

 











உனக்கு பிடித்ததாய்
விரும்பி விரும்பி
சமையல் செய்ய வேண்டும்
எனக்கு பிடித்த
சமையல் நீக்கி
உனக்கு பிடித்ததாய்
விரும்பி விரும்பி
சமையல் செய்ய வேண்டும்!

 












உன் இன்பங்கள்
மேலும் மேலும்
பெருக்க வேண்டும்
என் இன்பங்கள்
தொலைத்துக் கொண்டே
உன் இன்பங்கள்
மேலும் மேலும்
பெருக்க வேண்டும்!

 









 


உன் கவலைகள்
வேண்டி என்னில்
தாங்கிக் கொள்ள வேண்டும்
என்னையே நான் மறந்து
மன்னவன்
உன் கவலைகள்
வேண்டி என்னில்
தாங்கிக் கொள்ள வேண்டும்












வலிகளைப் போக்க வேண்டும்
என்றும் உன்
வலிகளைப் போக்க வேண்டும்
நல் மருந்தாக உன்னில்
நானே இருந்து
வலிகளைப் போக்க வேண்டும்
என்றும் உன்
வலிகளைப் போக்க வேண்டும்!

 









உன்னோடு சண்டை வேண்டும்
அன்பாய் தினமும் 
உன்னோடு சண்டை வேண்டும்
பொய்க் கோபம் காட்டிக் கொண்டு
உன்னை தவிக்க விட
உன்னோடு சண்டை வேண்டும்
அன்பாய் தினமும்
உன்னோடு சண்டை வேண்டும்









உன்னோடு உறக்கம் வேண்டும்
உன்னை அணைத்துக் கொண்டு
உறக்கம் வேண்டும்
எனக்கு பிடித்த
உன்னில் நானும்
நெருக்கம் கொண்டு
உன்னோடு உறக்கம் வேண்டும்
உன்னை அணைத்துக் கொண்டு
உறக்கம் வேண்டும்!

 












உன்னை என்றும்
உறவாய் நெஞ்சில்
ஏந்த வேண்டும்
உன் மகவை மடியில்
சுமந்து கொண்டே
உன்னை என்றும்
உறவாய் நெஞ்சில்
ஏந்த வேண்டும்!

 









உனக்காக மரிக்க வேண்டும்
மீண்டும் மீண்டும்
உனக்காக மரிக்க வேண்டும்
மறுபடியும் பிறப்பெடுத்து
உன்னோடு வாழ்வதற்காய்
உனக்காக மரிக்க வேண்டும்
மீண்டும் மீண்டும்
உனக்காக மரிக்க வேண்டும்!

 










இத்தனையும் நடப்பதென்றால்
நான் உந்தன்
மனைவியாக வேண்டும்
உனக்காய் வாழ்ந்து விட
உனக்காய் மாண்டு விட
இன்றே நான் உந்தன்
மனைவியாக வேண்டும்!




 








Comments

Unknown said…
சகோதரி...
அழகான கவிதை...
ஆனால் //உனக்காக மறிக்க வேண்டும்
மீண்டும் மீண்டும்
உனக்காக மறிக்க வேண்டும்
மறுபடியும் பிறப்பெடுத்து
உன்னோடு வாழ்வதற்காய்
உனக்காக மறிக்க வேண்டும்
மீண்டும் மீண்டும்
உனக்காக மறிக்க வேண்டும்! //
என்பதில் மரிக்க வேண்டும் என வரவேண்டும் என நம்புகிறேன்.

வண்ண மயமான ஆடைகளில் அழுக்கு இருப்பதைவிட வெள்ளை நிறமைன தூய்மையான ஆடைகளில் அழுக்கு வெளிப்படையாய் தெரியும்.
அதே போல் அழகான கவிதையில் ஓரிரண்டு எழுத்துப் பிழைகளும் அதன் அழகைக் கெடுத்துவிடும்.

வாழ்த்துக்கள்...
எண்ணங்கள் அருமை.

//உன்னை என்றும்
உறவாய் நெஞ்சில்
ஏந்த வேண்டும்
உன் மகவை மடியில்
சுமந்து கொண்டே//

நன்றாக உள்ளது
காதல் கவிதை.. நான் காதல் கவிதை வாசிக்கும் அளவுக்கு எனக்கு வயது போதாது
கவிதை நல்லாயிருக்கு... ;)
வரிகளின் ஏக்கம் தெரிகின்றதே.. யாரந்த கள்ளன்.. ??
இரசித்தேன்..
நன்றி கனககோபி அவர்களே
கருத்துக்களுக்கு நன்றி
நன்றி அமுதன், சுபானு

நன்றிகள்
யோகா அண்ணா அப்போ நீங்கள் இன்னும் காதல் செய்யும் அளவு வளரலயா? ரொம்ப சின்ன பையனா?

நன்றி

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு