80. உலக தமிழ் மாநாடும், ஒத்திவைப்பும்
உலக தமிழருக்கான மாநாடு என்று சொல்லும் போதே தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ் கர்வம் தோற்றம் பெறத்தான் செய்கின்றது. இவ்வாறு தமிழருக்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வுலக தமிழர் மாநாடு, 9வது தடவையாக ஒன்றுகூட தீர்மானித்துள்ளமை பெருமைக்குரியதும், மகிழ்ச்சியளிப்பதுமான விடயமே என்றபோதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மன வருத்தத்தை அளிக்கின்றது.
கடந்த ஜனவரி மாதம் 21ம் திகதியிலிருந்து 24ம் திகதி வரை நடாத்தப்படுவதாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு இம்மாதம் 29ம் திகதி (29/09/2009) கோவையில் நடாத்தப்படுவதாக தீர்மாணமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (30/09/2009) சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் உலகத் தமிழ் மாநாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர், நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உலகத் தமிழாராய்ச்சிக் கழக துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ம.ராஜேந்திரன், எண்பேராயம், ஐம்பெருங்குழுவின் உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அறிஞர்களால் மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் காலஅவகாசம் கூடுதலாகக் கிடைத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று கருத்து முன்வைக்கப்பட்டது. இதனை தொடந்து இடம்பெற்ற உரையாடலின் தீர்வாக செப்டெம்பர் 29ம் திகதி கோவையில் நடைபெற இருந்த உலகத் தமிழ் மாநாட்டை ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டதை போன்று கோவையிலேயே நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இவ்வருட இறுதிக்குள் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு காணாப்படாவிட்டால் கோவையில் நடக்க உள்ள உலக தமிழ் மாநாட்டின் போது பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இல. கணேசன் அவர்கள் கூறியுள்ளார். மேலும் இம்மாநாட்டில் தமிழர் சுதந்திரம் குறித்தும் பேசப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்முறை குறித்த திகதியில் உலக தமிழ் மாநாடு நடைபெற வேண்டும் என்பது எதிர்ப்பார்ப்பு
நன்றி!
Comments
ஒரே நகைச்சுவை போங்கள்...
தேர்தல் ஏதும் வந்தால் தான் உது நடக்கும்...
தமிழர்களை கேனையர்களாக கருதுகின்றனர் உந்த தமிழக அரசியல்வாதிகள்...