58. காதலுக்குள் கருகிய காதல்

தொலைப்பேசி சிணுங்களுக்காய்
அலைப்பாயும் மனதை
அன்றும் அவளால் கட்டுப்படுத்த
முடியவில்லை.....

மனதுக்குள் மலர்ந்த
காதல் அரும்பை
நீர் கொண்டு
வளர்க்கவில்லை
மலர்விழி
தன் உதிரத்தாலல்லா
அபிஷேகம் செய்கின்றாள்

மலர்விழி என்ற பெயரைக்
கொண்டதாலோ, என்னவோ
பார்ப்பவரை மீண்டும்
பார்க்கத் தூண்டும்
மலரை விட மென்மையாகவும்
வசீகரமாகவும் காணப்பட்டாள்

சிற்றிடையாலின்
எதிர்ப்பார்ப்பு
நிறைவேற்றப்பட்டது - ஆம்
வழமை போலவே
குறித்த தருணத்தில்
அவள் வீட்டு
தொல்லைப்பேசி
அவள் அம்மா...
தொலைப்பேசியை
அழைப்பது அவ்வாறே
ரீங்காரமிட்டது

அழைத்திருந்தவன்
சஞ்சய் தான்
வழமை போலவே
தனக்கே உரித்தான
அன்பு வார்த்தைகள்
கொண்டு ஸ்பரிசித்தான்
அவள் இதயத்தை

இந்த வார்த்தைத்
தீண்டலுக்காகத் தானே
நிமிடங்களின்
நீளத்தொடல் நேரத்தை
விநாடிக்கு விநாடி
கணக்கிட்டுப் பார்க்கின்றாள்

அவளுக்குள் சிறகடித்த
ஆனந்தப் பறவை
ஆகாயத்தை தாண்டி
வட்டமிட்டது சிட்டாய்

அவள் அழகு விழிகள்
அன்றும்
கதைப் பேசின
அன்பாய்
அன்போடு

தன் இதயச் சிறைக்குள்
பூட்டி வைத்த
காதல் அரும்பை
சுதந்திரமாய்
பறக்கவிட
முனைந்த
மலர்விழி
முதன்முதலாய்
முயற்சிக்கின்றாள்

காதல் பரீட்சையில்
முதல் படியைத்
தாண்ட எண்ணி......

ஏனோ! அவள்
பிஞ்சு இதயம்
அதிகமாய் துடிப்பதை
உணர்ந்தாள்
இதுவரை
இருந்ததில்லை
இவளுக்குள்
இப்படி ஒரு
தடுமாற்றம்

விவாதத்தில் பல மேடைகள்
கண்டவள் மலர்விழி
இவள் பேச்சுத் திறமை...
கரகோசம் வானை முட்டும்

ஆம் இவளை
பேசி வெல்வதென்வது
கடினமான விடயமே
இன்றென்னவோ..
இத்தனை குழப்பங்கள்
அவளுக்குள்

தன்னை ஒருவாறு
திடப்படுத்திக் கொண்டு
முன்னகர்கின்றாள்

சஞ்சய்...!
ஆம் அழைத்தது
மலர்விழி தான்

சொல்லடா கண்ணா
சஞ்சய், மலர்விழியை
அழைப்பது இப்படித்தான்

மலர்விழியை
மறுபடி மறுபடி
பிறக்க வைப்பது
இந்த வார்த்தைக்
கசிவுகள் தானே

தொடர்கின்றாள்
மலர்விழி
உங்கள் வாழ்க்கையில்
காதல்........

தொடர்ந்து வரமறுத்த
வார்த்தைகள்
தொண்டைக்குழிக்குள்
அடைத்துக் கொண்டதால்
மௌனமானாள் மலர்விழி

அடுத்ததாய் வெளிவந்த
சஞ்சயின்
வார்த்தைக் கணைகள்
விச அமிலம்கொண்டு
வீசியடித்தது
அவளை

ஆம்.... அவளுக்குள்
பூத்த காதல் அரும்பு
முனைத் தாண்டி
வளரும் முதலே
கிள்ளி எறியப்பட்டுக்
கொண்டிருந்தது

முதன் முதலாய்
உயிரோடிருக்கும் போதே
மரணத்தின் வாயில்
தொட்டுக் கொண்டிருந்தாள்
பெண்ணவள்

உச்சக்கட்ட வலி
உள்ளத்தில் குந்திக்கொள்ள
மையல் அவள்
இமைகளை
முட்டி மோதி
கண்ணீர் மழை
அருவியாகிக் கொண்டிருந்தது

ஏனோ.....
உற்சாகத்தில் உவகை கொண்டு
ஊஞ்சலாடிய
அவள் உலகம் - இன்று
கவலையைக்
கட்டிக் கொண்டு
ஊசலாடியது ஈசலாக

தலை சுற்றிக் கொண்டு வந்தது
உடலில் ஒரு நடுக்கம்
மனதில் ஒரு சலனம்
தனக்குள் தன்னையே
நொந்துக் கொண்டாள்

வைகறைப் பொழுதினினே
கடவுளை மலர்கள் கொண்டு
அபிஷேகிக்கும் அவள் -இன்று
கொடூர வார்த்தைகளினால்
வீசியெறிந்தாள் மனதினுள்ளே

அமைதியான அவள்
மன அலைகள்
சூறாவளியாய்
சுருட்டி சுருட்டி
அடித்துக் கொண்டிருந்தது

நீண்டதொரு மௌனம்................

செல்லமே மலர்விழி
மௌனம் கலைகின்றான் சஞ்சய்

இவள் இடிந்து போண
இதயத்தின் அழுத்தத்தால்
மூளியின் செயற்பாடுகள்
ஸ்தம்பிதம் அடைந்ததாயல்ல
நிறுத்தப்பட்டதாய்
உணர்ந்தாள்

தனக்குள் சுமந்த
காதல் சிசு
கருவிலேயே
கருக்கப்படும் என
இவள் நினைத்தாளா என்ன?

ஆம்...! இதுவே
மடந்தை இவள்
மனத் தோட்டத்தில்
பூத்த முதல்
காதல் மலர்

எத்தனை நண்பிகளின்
கண்ணீரைக் கண்டு
மடத்தனம் என
மட்டந்தட்டி
பேசி இருப்பாள் - இன்று
தன் வாழ்விலேயே
தடுமாறித்தான் போனாள்
தாரகை அவள்

முதன் முதலாய்
உணரும் வலியின்
தருணமல்லவா
வேண்டாம் என தோன்றியது
வாழ்க்கையே

இடையே தாயின் குறல்
என்ன தான் இருக்கின்றதோ
முதலில் இந்த
தொல்லைப்பேசியை
ஒழிக்க வேண்டும்
சரமாரியாக பொழிந்தார்

உங்கள் வேலையை
நீங்கள் பாருங்கள்
முதன் முதலாக அதட்டிகிறாள் அன்னையையும்

தொடர்ந்தும் தாயின் அர்ச்சனை

இவள் காதுகளில் ஒலித்தால் தானே
இவள் உலகமே
டைட்டானிக்காய்
மூழ்கிக் கொண்டிருக்கும் போது
எங்கே கேட்கப் போகின்றது?
தாயாவது யாராவது......
ஒன்றுமே புரியாத நிலையில் அவள்

மலர்விழி......... ஆம் அழைத்தான்
சஞ்சய் சற்று உரக்கவே


ஏதோ அந்த அழைப்பில்
திடுக்கிட்டவள் சுய உலகிற்குள்
திரும்பினாள் - என்றாலும்
மீண்டும் அதே நினைவு
சூடிக்கொள்ள மடந்தை அவள்
மீண்டும் சிலையானாள்

ஆம்.....! முதம் முதலாக
சஞ்சயின் பாச அழைப்பு
நிருஞ்சி முல்லாய்
நெருடியது மனதை

அவன் அழைத்தது
வழமை போலவே தான்
வழக்கத்திற்கு மாறாக
அவள் தான்
இப்படி உணர்கின்றாள்
ஒரு நாளும் இல்லாமல்

இவள் ஆசைக் கனவு
சுக்கு நூறாக்கப்பட்ட
வலியில் இவளுக்குத் தான்
தோன்றியது தவறாக

ஏதாவது பேசேன் கண்ணா
(சஞ்சய் தான் கூறுகின்றான்)

சஞ்சய் நான்....... நான்........
ஒருவாறு தருமாறிய
வார்த்தைகளை
ஒன்றாக்கி
”வைக்கின்றேன்” என முடித்தாள்

வேண்டாம்...! நான் உன்னோடு
பேச வேண்டும்
ஏன் ஒரு மாதிரியாக
இருக்கின்றாய்
வீட்டில் ஏதாவது பிரச்சனையா?
கேட்டவன் சஞ்சய்

இல்லை, ஒன்றும் இல்லை
நான் வைக்கின்றேன்
மீண்டும் சொன்னாள் மலர்விழி

உன் கவலையை தாங்கிக்
கொள்ள நான் இருக்கின்றேன்
அன்பே....
சொல்லடி தங்கம்

இந்த வார்த்தைகள்
மீண்டும் நெஞ்சுக்குள் நெருட

எதிர்முனையில் இருந்து வந்த
வார்த்தைகளை
செவி மடுக்காதவளாய்
ஒலிக்கும் முன்னமே
தொடர்பை துண்டித்தாள்

பதில் கூற விரும்பாததால் அல்ல
பதில் கூற முடியாததால்
உடனே துண்டித்தால்
அழகு சிலை அவள்
(தொடரும்)Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்