57. கவிதை

உனைக் கொண்டு
உனக்கூடாக
வர்ணிக்கின்றார்கள்
அவர்கள் இஸ்டத்திற்கு
உழைப்பாளி முதல்
உதவாக்கரை வரை!

உனைக் கொண்டு
உனக்கூடாக
வர்ணிக்கின்றார்கள்
அவர்கள் இஸ்டத்திற்கு
ஆதி முதல்
அந்தம் வரை!

உனைக் கொண்டு
உனக்கூடாக
வர்ணிக்கின்றார்கள்
அவர்கள் இஸ்டத்திற்கு
உள்ளது முதல்
இல்லாதது வரை!

ஏனோ........
உனை மட்டும்
கண்டு கொள்வதே
இல்லை இவர்கள்!

உன் தனித்தன்மை
கண்டு மெய் சிலிர்த்து
நிற்கின்றேன்
பல தருணங்களில்!

உனக்குள் உள்ள
உன்னதமான
கருத்துத் தெளிவு
ஊக்கப்படுத்துகின்றது!

இன்று நானோ
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடிவிட்டேன்
தேடிக்கொண்டிருக்கின்றேன்,

ஏனோ......
எனக்கு கிடைத்தப்பாடில்லை!
உன்னை வர்ணிக்க
பிரபஞ்சத்தில்
வார்த்தைகள் இல்லையோ?
இருந்தும் ஏதாவது
சொல்லியே ஆகவேண்டும்
என முயற்சி செய்து
சொல்லுகின்றேன்....

நெஞ்சத்தை தொட்டு விட்டது
உன் வரிகள்; உன் வரைதல்!
என்ற போதும் - இன்னும்
தேடிக்கொண்டிருக்கின்றேன்
வார்த்தைகளை - கவியே
உன்னை வர்ணிப்பதற்காக!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு