49. நண்பியே

நண்பியே!
உனைக் காணாத
இவ்விரண்டு நாட்களில்
நரகத்தின் வாசல் தொட்டு
மீண்டது என் உயிர்.......!

இன்று;
மீண்டும் உயிர்ப் பெற்று
உள சுவாசம் கொண்டேன்
உன் வருகையால்!

உனைக் கண்டு
நான் உதிர்த்த
கொடூர வார்த்தைகள்
உன் இதயத்தை
சுக்கு நூறாய்
கிழிப்பதற்காய் அல்ல
உன் மீது நான் கொண்ட
அன்பின் ஆழமே!

இன்றென்னவோ
என் வாழ்வில்
எனக்குள் மரணிப்பின்
வலி மறக்க செய்வது
உன் அருகாமை!

உன் அன்பை
அளவிட முடியவில்லை,
சுவாசிக்கின்றேன்
இடைவிடாமல்!

இறுதி வரை - உனை
எனக்காய் கேட்க
முடியவில்லை,
இருந்தும் இருக்கும்
வரையேனும் எனை
நீங்காதிருக்கக் கேட்கின்றேன்!

உன் அன்பின் வெளிப்பாடும்
மென்மையும் வியக்கின்றேனடி;
உன்னால் மட்டுமே முடிகிறது
உனைப் போல் அன்பு செய்ய!

உதறிவிடாதே உருக்குழைந்து
போய்விடும் என் நாட்கள்!

மன்னித்துக் கொள் மங்கையே
மதிகெட்டு நான் உதிர்க்கும்
வார்த்தைகளுக்காய்.....
மன்னித்துக் கொள் மங்கையே
மனம் நொந்துவிடாதே!

தனிமையின் கொடுமை
தாங்கமுடியவில்லை
மபுணிப்பைத் தேடியே
மனம் சென்றது!

உனை மறவாமல்
மனம் வாடி நின்ற வேளை
மறு நட்பாய் பூச்சி தன்
புன்னகையாலே......
மறந்து நின்றேன்
வலிகளில் வழி !

மீண்டும் யாசிக்கின்றேன்
மன்னித்து விடு
மனம் நொந்து நான் உதிர்த்த
வார்த்தை உன்
மென்மையான மனதை
வன்மை செய்திருந்தால்
மீண்டும் யாசிக்கின்றேன்
மன்னித்து விடு!

இப்படிக்கு,

உன் நட்பை என்றும்
நாடும் நங்கை
இவள்
கீர்த்தி

Comments

//உன் அன்பின் வெளிப்பாடும்
மென்மையும் வியக்கின்றேனடி;
உன்னால் மட்டுமே முடிகிறது
உனைப் போல் அன்பு செய்ய!//

நல்லாயிருக்கு ... :)

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு