65. உலகைக் காண
கவிதை அவள்
கருங்கூந்தல்
காற்றினிலாட - காளை
இவன் மனமுமல்லோ
ஆடியது சேர்ந்து........;
வெட்ட வெட்ட வளருகின்ற
விரல் நகம் போல
வளருதிங்கே
அவள் மீது
இவனின் ஆசை.......;
அவள் விழி இரண்டும்
விண்மீனாய்
விந்தைகள் செய்ய
பரவசத்தில் பரிதலித்தது - இவன்
பார்வையுமன்றோ.......;
இளையவளின்
இனிய முகம்
இதமென இருக்க,
இனிமைகளை பாடி
அவள் அவனுயிர் மீட்ட,
கரம் நீட்டி
கை கோர்த்து
காதல் செய்யும்
வானம்பாடிகள் அவை
இதயங்கள் கானம்பாடிகளாய்
சிறகுகள் விரிக்க.......,
உணர்வுகளில் ஒன்றாகி
உருவங்களை தனதாக்கி
உயிராக உறவாடின
உல்லாச பூமியிலே
உலகைக் காண!
Comments
அப்படியே, அந்த ரேடியோவை எடுத்தா புண்ணியமா போகும்!
லோட் ஆக நேரம் எடுக்குதுங்க..