Posts

Showing posts from 2009

தொடங்கிடுங்கள்

நித்திரை தொலைத்த நெஞ்சத்தின் குமுறல் நித்தமும் பிழியும் உண்மையின் நினைவுகள்.... தமிழ் தாகமும் தேகமும் பசிக்கு இரையாகும் போது எங்கே ஒழிந்தன உங்கள் போர்க் கொடிகள்.... வெல்வேன் வீழ்த்தி வாளேந்தி சொன்னீர் அன்றைய முழக்கத்தின் சுவடுகள் எங்கே.... ஆயுதம் இழந்தேன் அழுது துடிக்கின்றீர் அடிமையானேன் நீரே உரைக்கின்றீர்.... புரியாதவரே....! உங்கள் எண்ணங்களின் சிசுக்கள் விரல்வழி பிறக்கட்டும் உங்கள் பேனையை விடவா ஆயுதம் வேண்டும்.... படிந்த கரும்புள்ளிகளை காணாமல் செய்து புதியதோர் யுகத்தை புதிதாய் சமைக்க..... இன்றே தொடங்கிடுங்கள் உள்ளே உறங்கும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து உண்மையை விளக்கிட.... கத்தி முனையை விட கூர்மையாய் இருந்து குத்திக் கிழிக்கட்டும் உங்கள் எழுத்துக்கள்!

பெண்களும் வன்முறைகளும்

Image
இன்றைய உலகம் எத்தனை தான் முன்னேற்றங்களைக் கண்டு , எட்ட முடியாத தூரத்தை நோக்கி சென்று கொண் டிருந்தாலும் பெண்களைப் பாதிக்கும் வன்முறைகள் காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவம் பெருகின்றனவே தவிர இன்றும் அதே அளவில் காணப்படத்தான் செய்கின்றன . என்ன தான் பெண்களைப் பாதிக்கும் வன்முறைகளை ஒழிப்போம் என கோஷம் போட் டாலும் குறையுரா நிலையில் அத ன் நீட்சி அமைகின்றது . 1999 ல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தமையை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் திகதியை " பெண்களைப் பாதிக்கும் வன்முறை யை ஒழிக்கும் தினம் " என பெண்களுக்கானதொரு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் இன்றும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளே இல்லை . உலகளாவிய கணிப்பில் இவ்வாறான வன்முறைகளால் 70% பெண்கள் உடல் மற்றும் உள ரீதியில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன . அதாவது மூன்றில் இரு பெண்கள் வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன . பெண்களும் வன்முறைகளும் என பார்க்கும்போது அதனை இருவகையாகப் பி ரிக்கலாம் . அவையாவன , ...

நாளைய பதிவர் சந்திப்பு

Image
பதிவர்களின் பல வருட கனவுகளை நனவாக்கும் வண்ணமாக கடந்த ஆகஸ்டு 23ம் திகதியன்று கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் இனிதே நடாத்தி முடித்த முதலாவது இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலானது இன்றைய பதிவுலகை கலக்கி வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பதிவுலகத்தை தத்தமது பதிவுகளால் கலக்கி வரும் பதிவர்களை சந்திக்கும் ஆர்வம் அனைத்து பதிவர்களின் மனதையும் துளைத்து எடுப்பதும் உண்மையே. இவ்வாறான பதிவர்களின் அவாவுக்கு தீணிப்போடும் வண்ணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்) நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பானது குறித்த வேளையில் ஆரம்பிக்கப்படும் என்பதை ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு ஏலவே பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்களையும், கடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள தவறிய பதிவர்களையும் வருக வருகவென வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இதோ உங்களுக்காக நிகழ்ச்சி நிரல் மீண்டும் ஒருமுறை * அறிமுகவுரை * புதிய பதிவர்கள் அறிமுகம் * கலந்துரையாடல் 1 : பயனுறப் ப...

உன்னால் நான்

உன் காதல் பள்ளியில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் நான்! உன் புறக்கணிப்புக்களால் புதைக்கப்பட்டதாக என் வாழ்க்கை! சுவாசங்களின் இடைவெளியையும் சுருட்டிக் கொண்டது உன் நினைவு! என் இரவுகளெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் கனவானதும் உன்னால்! விழி துயில் கொள்வதும் தினம் விழித்துக் கொள்வதும் உன் தரிசனத்திற்காகவே! இன்று உன் விடை பெறலால் வினாவாகி தொக்கி நிற்பதுவும் நானே!

ப ச கஞ்ச கிறுக்கனுக்கு பரிசு

டுமீல் டுமீ்ல் சத்தமில்லா புல்லட் அடக்கிடுவோம் வரிகளிலே இவன் துல்லல் பார்ப்பதற்கு தானே அப்பாவி பதுங்கியிருந்து பாய்வதில் அடப்பாவி ஊமையாய் இருந்துவிட்டால் உதைப்பான் உரத்தலிலேஅடங்கிடுவான் பொட்டிப்பாம்பாய் போற்றச்சொல்லி கெஞ்சுவிட்டான் மாறி பாவம் புகழ்ந்தே தள்ளிடுவோம் வாரீர் வாசல் தாண்டி வந்துவிட்டான் போலி வந்தவனின் பேரோ கொல்பவன் தன்னை தானே கிரேட் என்னும் கேடி மூளைக்குள்ளே சேர்த்து வைத்தான் மண் கட்டி பத்து ரூபாய் தந்தால் போதும் சிரிப்பான் மாறி பத்து பைசா கேட்டால் கூட கடிப்பான் சிங்கமென சொல்லும் இந்த பூனை சீதனமாய் கேட்பதுவோ யானை மூன்று ரூபாய் தர மாட்டான் பாவி மூன்று கோடி தானே இவன் கொள்கை தன்னை தானே நொந்து கொள்ள தவிப்பான் தன் நக்கலிலே நூறு பேரை புதைப்பான் மாறி மாறி வாளி வைக்கும் பாவி இவன் வந்தாலோ ஆள் அன்று காலி எலிக்குட்டியை தொட்டணைத்த தோழன் இவன் தானே கூட்டத்திலே கோமாளி பார்த்து பார்த்து படித்ததுவோ எலக்ரோனிக் அதுவே பக்கத்தில் இருப்பவனுக்கு இப்போ எலக்ர்ரிக் சோக் வேற்றுமைகள் காட்ட மாட்டான் வசைபவன் கும்மி கொட்டுவதில் இவனொரு கிழபவன் தினம் நூறு வேசம்...

காதல் செய்வோம் வாராய்

சிறுக சிறுக சேர்த்து வைத்த சிந்தனைகளை சிதறடிப்பதான் உன் வார்த்தைகள் அவ்வப்போது சீற்றம் கொள்ளும் மூர்க்கமான முன் கோபம் - என எல்லாமே வதைத்தாலும் கல்வெட்டாய் பதிந்து விட்ட உன் நினைவு தழும்புகள் நினைவுள்ள வரை நீங்காது என்னில் - நீ அன்பின் சிகரம் அவ்வப்போது உன்னால் துப்பப்படும் அமில விஷங்கள் அனைத்தையும் செயலிழக்க செய்கின்றது என்றாலுமே இன்று வரை - உன் மீது கொண்ட காதல் உணர்வு கறையாமல், குறையாமல் கடந்து வருகி்ன்றன கண்மணியே விண் முட்டும் ஒலியோடும் - கண் தெறிக்கும் ஒளியோடும் காதல் செய்வோம் வாராய் வாழ்வின் வசந்தங்களை வறுமையிலும் வசமாக்கிட!

இனி வேண்டாம்

அணு தினமும் துதிப் பாடி மன்றாடி உனை நாடி மடி பிச்சை கேட்கின்றேன் மறு ஜென்மம் இனி வேண்டாம் இருந்தாலும் மறுபடியும் வேற்றுமைகள் காட்டிவரும் ஒற்றுமைகள் குழைத்துவிடும் மனிதப் பிறவி இனி வேண்டாம் மாற்றானின் மனை கவர்ந்து தன் மனையை அழகாக்கும் அழுக்கான மனங்கொண்ட மனிதப்பிறவி இனி வேண்டாம் பொன்னோடும் பொருளோடும் சுகமாக தினம் வாழ்ந்து மகிழ்வோவே மாண்டாலும் மறு ஜென்மம் இனி வேண்டாம்

ஏக்கம்

அன்பின் ஊற்றுத்தான் ஆனந்த கானம் தான் இன்பத்தின் வெள்ளம் தான் இனியதொரு குடும்பம் தான் இன்னிசை பயின்ற இனிமை காலம் மின்மினி தேசத்து மிளிரும் ராதை விதியின் விளையாட்டு திருப்பம் உறவோடு உறையுளும் தொலைத்த நிலை பணத்தின் மதிப்பு பாசத்திற்கில்லை பற்றற்ற வாழ்வு பழக்கப்பட்டியல் எட்டிய மன்னவன் எட்டிடும் துடிப்பு ஏழை வீட்டு வைரக் கனவு ஏக்கமும் தாக்கமும் இரு உலகம் இருக்கையில் பறித்தல் இறைவன் தேடல் பழக்கமும் வழக்கமாய் பாவி துடுத்தாள் பக்கத்தில் உற்றவன் சுவாசம் பெறவே!

யாழ்தேவியும் பெண்களுக்கான வுமன்ஸ்.கொம்மும்

இதோ இதுவரை பொதுவான ஆக்கங்களை வெளியிட்டு வந்த யாழ்தேவி பதிவர்களை தினக்குரலில் அறிமுகப்படுத்தி வந்தது. மிகக் குறுகிய காலத்துக்குள் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்ட யாழ்தேவி இன்று பெண்களை கருத்தில் கொண்டு பெண்களுக்காக தனித்து இயக்கப்படுவதாக ‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ வரும் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இயக்கவுள்ளது. இவ்வாறாக பெண்கள் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் பெண்களை ஊக்கப்படுத்தும் வண்ணமாகவும் தொடக்கப்படவுள்ள யாழ்தேவியின் ‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இவ்வாறான ஒரு பெண்களுக்கான தனிப்பகுதி தொடங்கப்படுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இன்று எத்தனை தான் கலாச்சார, தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் பெண்களை அடிமைப்படுத்தும் தனம் இன்றும் குறையவில்லை. எத்தனை தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் இன்றும் மட்டுப்படுத்தும் தன்மையும் குறையவில்லை. ஆண் பிள்ளைகளுக்கு வழங்க்கப்படும் சுதந்திரம் இன்றும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலைகளை மாற்ற வேண்டுமானால் இன்றைய இளம் பெண்கள் மத்தியில் விள...

நன்றி நவிலல்

Image
பதிவர்களோடு பதிவராக பதிவுலகில் நடைப்பயிலும் யாழ்தேவி நிர்வாக குழுவினருக்கும், தினக்குரல் பத்திரிக்கை நிருபர்களுக்கும் நன்றிகள் கோடி....! உடனடியாக நன்றி நவில முனைந்தும் ஒரு சில வேலைப் பளு காரணமாக சில நாட்களை கடந்த நிலையில் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதையிட்டு மனவருத்தமடைகின்றேன். எனது ஆக்கத்தை தினகுரலில் பிரசுரித்து தந்தமைக்கு நன்றிகள் இரு சாராருக்குமே. பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மைகளோடு தமது ஆக்கங்களை அவரவர் சொந்த தளத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். அவர்களுக்கென பதிவுலக நண்பர்களின் கருத்துப்பகிர்வுகளும், பின்னூட்ட ஊக்குவிப்புகளும் என்றென்றும் காணப்படும் என்றாலும் பதிவுலக பதிவர்களின் ஆக்கங்களை அவர்களின் அறிமுகத்தோடும், படத்துடனும் வெளியிட்டு தளத்துக்கான அனேகரின் வருகையை ஏற்படுத்தித்தருவதான இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது. இது வளர்ந்து வரும் பதிவர்களை மேலும் ஊக்குவித்து அவர்களை மேலும் மேலும் எழுதத்தூண்டும் முயற்சியாகும். இது போன்ற உங்கள் நற்பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

பெண்ணே

பெண்ணே நீயும் கண் திறவாய் பேதை நீயும் உயர்ந்திடுவாய் உன்னினம் போற்ற வகைசெய்து உரக்க குரலினை எழுப்பிடுவாய் அடுப்படி உந்தன் சொந்தமல்ல அக்கினிக்கு நீ இரையல்ல விட்டிலாக நீ இருப்பதைவிடுத்து பீனிக்ஸாய் நீயும் எழத்தொடங்கு தஞ்சமென்று தலை சாய்க்காதே மஞ்சத்தில் மனதை தொலைக்காதே பஞ்சத்தில் வாடி வதைந்தாலும் நெஞ்சத்தில் நேர்மை இழக்காதே வாசலை நீயும் தாண்டி விடு வாதிட்டு உலகை ஆண்டுவிடு வேஷங்கள் கண்டால் விழகிவிடு வானத்தை தொடும்வரை முயன்றுவிடு

இலங்கை தமிழ்ப் பதிவர் சந்திப்பு

அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ ... எப்போ .... என நாம் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த இரண்டாவது முறையாக ஒன்றுக்கூட்டப்பட இருந்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்பிற்கான ஒழுங்குகள் நிகழ்ந்த வண்ணமாக ! ஆம் எதிர்வரும் மார்கழி மாதத்தில் நடாத்தி முடிப்பதாக அமைப்பு குழுவினர் தீர்மானித்துள்ளனர் . அது சார்ந்த விபரங்கள் நிகழ்ச்சி நிரலோடு கீழ்வருமாறு ; இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை , வெள்ளவத்தை ( ரொக்சி திரையரங்கிற்கு முன்னால் ) காலம் : 13/12/2009 ( ஞாயிற்றுக் கிழமை ) நேரம் : மாலை 2.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை நிகழ்ச்சி நிரலும், விளக்கமும் * அறிமுகவுரை - 5 நிமிடம் * புதிய பதிவர்கள் அறிமுகம் - 10 நிமிடம் ( முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்களை அறிமுகப்படுத்தல் ) * பயனுறப் பதிவெழுதல் - 35 நிமிடம் ( கலந்துரையாடல் ) பதிவுகளின் தன்மை , பதிவெழுதல் முறைமை , வீச்சு , தாக்கம் , மேம்படுத்தல் முறைகள் , பதிவுலகின் நன்மைகள் , தீமைகள் போன்றன . * பின்னூட்டங்களும் அவற்றின் தாக...

என் அன்னை

ஆராரோ ஆரிரரோ அன்னையவள் அரவணைப்பு பேசப்பேச பெருமை சேர்க்கும் பெற்றவளின் சீராட்டு! தொன்மை தமிழினிலே - மன வன்மை கரைத்துவிடும் தூயவளின் அன்பதுவோ துணையாகும் எந்தனுக்கு! ஏழையென்றாலும் கோழையல்ல என் அன்னை - கோபம் கொள்ளாத இமயமல்லோ என் அன்னையவள்! அகிலத்தை ஆட்சி செய்யும் அக பலமும் தந்தவளே அற்புதமாய் நான் உணர்ந்த அழகியவள் நீயல்லோ! பாசத்தின் மறு உருவாம் தேசத்தின் ஒளி அவளாம் வாசத்தில் அவள் மலராம் வாழ்க்கைக்கு அவள் கருவாம்! அன்புக்கு அன்னையல்லோ அணைக்கும் உயிரல்லோ அவள் புகழை பாடிடுவோம் ஊராரும் போற்றிடவே!

வலைபதிவுலகு சார்ந்த பதிவர்களின் கலந்துரையாடல்

பதிவர்களே.....! பதிவுலகில் நாம் காலடி வைத்து, அல்லது வலைப்பதிவிடல் சார்ந்து அறிந்து கொண்டது வெகு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான் என்றாலும் வலைப்பதிவிடல் பல வருடங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் வலைப்பதிவர்கள் நமக்கே அது சார்ந்த பல்வேறுபட்ட தகவல்களும் தெரிந்திருப்பதில்லை. எனவே நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்த வலையும் வலையுலகும், பதிவிடலும் சார்ந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். மேலும் வலைப்பதிவிடலின் நன்மை, தீமைகளையும் தெரிந்து கொள்வோம். பின்னூட்டங்களாக உங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிவியுங்கள். முதல் வலைப்பதிவு, யாரால் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? எவ்வகையான விடயங்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? இது போன்ற உங்களுக்கு தெரிந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்மைகள் * தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளும், எண்ணங்களும் சிதையாமல் கருவாகின்றது. * கருத்து சுதந்திரம் காணப்படுகின்றது. * அவர் அவர் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கக்கூடிய நிலை காணப்படிகின்றது. * மாற்றங்கள் செய்வதற்கான வசதிகள் காணப்படுகின்றது. (உ+ம்) அச்சில் பதித்த பின்னால் அவற்றில் எந்த மாற்றங்...

கணனி துணுக்குகள்

Image
இன்று கணனியின் பிரயோகம் மேலோங்கியுள்ள காலம் . வீட்டுக்கு வீடு கணனிமயமாக உள்ளது ஆனாலும் எம்மில் பலருக்கு கணனியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் உள்ளது . அதாவது கணனி முன்னால் எவ்வாறு அமருவது போன்ற விடயங்களில் அவர்கள் அக்கறை கொள்வதே இல்லை . அவற்றினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் , உபாதைகள் பற்றியும் சிந்திப்பதில்லை . இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள் படங்களோடு

மானசீக நட்பு

பூக்களால் நிரப்பப்பட்ட நட்பின் முற்றத்தை புளுதிகள் கொண்டு வாறியடிக்கின்றாய் பொன்னாய் போற்றப்பட்ட நட்பின் கற்பை ஏளனக் கண்கொண்டு பார்வை பார்க்கின்றாய் இனிமை நடையேற்ற நட்பின் மொழியை ஈன வார்த்தைகள் கொண்டு துளைத்து எடுக்கின்றாய் உனை தேடி கரம் கோர்த்து வலி ஏந்தி வடு சுமந்து தோள் கொடுத்த நட்பை தூக்கி எறிகின்றாய் வேலைக்கும் உன் வெற்றிக்கும் வியர்வை சிந்தி உழைத்த நட்பை விட்டிலாய் வதைக்கின்றாய் சந்தேகத்தோடு வாழும் நீ கண்டதும் கேட்டதுமென்றாய் தீர விசாரித்து தீர்க்கமாய் முடிவெடுப்பதை விடுத்து நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நட்பென்பாய் உன் மனதில் புகுந்த ஊனம் கரையும் வரை உளறிடுவாய் கரைந்த பின்னே கதறிடுவாய் கண்ணீர் மல்கிடுவாய் - அப்போது கண்ணுக்கெட்டா தூரத்தில் நான் இருப்பேன் நட்பை மட்டும் சுமந்து

A முதல் Z வரை (அ முதல் ஃ வரை)

இப்போதெல்லாம் தொடர்பதிவு எழுதுவது பதிவர்கள் மத்தியில் பிரபல்யமாகவும், அதிகமாகவும் முன்னகர்த்தப்படுகின்றது. என்னவோ அடுத்தவரை மாட்டிவிடுவதில் அத்தனை சந்தோசம் நம் பதிவுலக நண்பர்களுக்கு அவ்வாறே என்னையும் மாட்டிவிட்டுள்ளார்கள் நான் மட்டும் யாரையாவது மாட்டிவிடாமல் இருக்கமுடியுமா அதான் உடனே இந்த பதிவை எழுதுகின்றேன். என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த மயூரன் பெரி மற்றும் மன்னார் அமுதனுக்கு என் நன்றிகள் 1. A – Available/Single? : சிங்கிள் ஆனால் Available இல்லைங்கோ 2. B – Best friend? : என் அப்பா, நர்மதா 3. C – Cake or Pie?: கேக் 4. D – Drink of choice? : கோக் 5. E – Essential item you use every day? : கடிகாரம் 6. F – Favorite color? : பச்சை 7. G – Gummy Bears Or Worms?: இரண்டும் இல்லை 8. H – Hometown? : கொட்டகலை 9. I – Indulgence? : நடனம், இசை 10. J – January or February? February 14 : காதலர்தினம் தான் ஸ்பெஷல் 11. K – Kids & their names? : இப்போதே கேட்டால் 12. L – Life is incomplete without? : உறவுகள் 13. M – Marriage date? : தெரியாது 14. N – Number of siblings? : மூன்று 15. O...

இழப்புக்களும் அவை தரும் வலிகளும்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இழப்புக்களும், ஏமாற்றங்களும் அவனை பலமுறை தீ(சீ)ண்டிப் பார்த்திருக்கும் ஆனால் அவற்றுள் ஒரு சில இழப்புக்களையும், ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ள முடிவதே இல்லை அதே போல மறந்து விட முடிவதும் இல்லை. நேர நீட்சிக்குள் நீளமாக தொடர்ந்து உணர்வின் ஒவ்வொரு அணுக்களையும் தொட்டுக்கொண்டே இருக்கும் அந்த வலிகளின் மீட்டல். எத்தனை தான் முயற்சி செய்தாலும் நினைக்கும் போதெல்லாம் கண்கள் குளமாகும், மனது ரணமாகும், உலகம் இருளாகும், வாழ்வு கசப்பாகும் அத்தனை வலிகளை தாண்டிய வடுக்கள் வலிகளோடே என்றும் இருக்கும். இப்படியான நிகழ்வுகள் என் இறந்த கால வாழ்க்கை பக்கங்களை பிரட்டும் போதெல்லாம் தலை தூக்கி என்னை துக்கப்பட வைப்பதுண்டு அவ்வாறான நிகழ்வுகளில் என்னை மிகவும் பாதித்தது, உலகத்தையே வெறுக்க வைத்தது, கடவுளை கல்லென தூற்ற வைத்தது என் பாசமான தந்தையின் இழப்பு. என்னால் இன்று வரை ஏற்றுக் கொள்ள முடிவதும் இல்லை தாங்கிக் கொள்ள முடிவதும் இல்லை. ஆம் இன்றோடு அவர் எங்களை விட்டுப் பிரிந்து 9 வருடங்கள் ஏனோ நேற்று தான் அவரை காளன் காவு கொண்டது போன்று தோன்றுகின்றது. அவரை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே ப...

விழுவியம் காப்போம்

நம் முன்னோர்கள் விழுவியம் காப்போம் என அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் விழுவியங்கள் என்றால் என்னவென்பது இன்று வரை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதும் இல்லை ஏனென்றால் நாம் அனைவரும் அப்படியான ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டவர்களாகவும், நேரமின்மையில் அவதிப்படுபவர்களாகவும் காணப்படுகின்றோம். இனி விழுமியங்கள் சார்ந்த சில தகவல்களை பார்ப்போம். மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்களை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான அன்பு, நாணயம், இரக்கம், நீதி, நேர்மை, நம்பிக்கை, கருத்து, எண்ணம், பக்தி என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம். இவ்வாறான கருத்துருக்களை வாழ்க்கையில் முதன்மையாக கொண்டு செயற்படும், முன்னகர்த்தப்படும் ஒரு ...

பதிவர்களே

பல்வேறு எதிப்பார்ப்புக்களோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கை வலைப்பதிவர் சந்திப்பானது எப்போது..... எப்போது....... என்பது தான் நம் அனைவரின் கேள்விகளாக இருக்கின்றது. நமது வேலைப்பளு, மற்றும் ஏனைய காரணிகளால் அது சார்பான முயற்சிகளை நாம் அனைவரும் தனித்தனியாகவே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் தனித்தனியாக செய்வதனிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதற்கான பலன் இன்னும் அதிகமாக இருக்கும் . மேலும் பயனுள்ள வகையில் ஒழுங்கமைப்பதற்கும் இலகுவாக இருக்கும். வலைப்பதிவர் என வரும் போது நாம் அனைவரும் அதற்குள் அடக்கப்பட்டு விடுகின்றோம் என்பதனை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் முதல் சந்திப்பில் அறிமுகத்தோடு முடிந்து விட்டது அதை தாண்டி இம்முறை பட்டறை போன்று செயற்பட்டால் நல்லது என்றும், இது சார்பாக இதை செய்யலாம், அதனை செய்யலாம் என பல்வேறான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் எத்தனை பேர் நிகழ்வில் பங்குபற்றுவார்கள் என்பது தெளிவாக தெரியும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளையும், இடத்தினை தெரிவு செய்வதும் இலகுவாக இருக்கும் என்பது என் கருத்து. என் இனிய பதிவுலக நண்பர்களே! தங...

பாரதி கண்ட பெண்கள்

அடுப்படியில் அடங்கிவிட அடிமைகள் இல்லை நாங்கள் பொங்கியெழும் துணிவு கொண்ட புதுமை பெண்கள் வீட்டினிலே நாங்கள் என்றும் மென்மை மங்கைகள் விருப்புடனே சேவை செய்யும் அன்பின் நெஞ்சங்கள் அடக்கிடுவோம் வீரர் நாங்கள் அகந்தைகளை நாளும் அநியாயம் ஒழித்திடுவோம் அனைவருமாய் கூடி தவறு செய்தால் திருத்திக் கொண்டு மேலே செல்லுவோம் தவறி கூட தவறாய் நாங்கள் தண்டிக்க மாட்டோம் அடிக்க வரும் காளையரை அன்பால் திருத்துவோம் அதையும் மீறி அடிக்க வந்தால் அடித்து நொறுக்குவோம் வீசும் வலை விழுவதில்லை எங்கள் தேசத்தில் - தூய விழுதுகளால் நிரம்பிடட்டும் எங்கள் வாழ்க்கை எளிமை தன்னை என்றும் எங்கள் வாழ்வில் கொள்ளுவோம் ஏய்க்க வரும் கயவர் தம்மை எதிர்த்து நின்று கோசம் போடுவோம் சுட்டெரிக்கும் சுடர்கள் நாங்கள் வீர மங்கையர் - எம்மை இழிவு படுத்தும் மூடர் தம்மை கொளுத்தி அழிப்போம் தடுமாற்றம் கண்டிடாமல் நேராய் செல்லுவோம் அன்பு கொண்டு வீட்டுடனே நாட்டை ஆளுவோம்