மானசீக நட்பு

பூக்களால் நிரப்பப்பட்ட
நட்பின் முற்றத்தை
புளுதிகள் கொண்டு
வாறியடிக்கின்றாய்

பொன்னாய் போற்றப்பட்ட
நட்பின் கற்பை
ஏளனக் கண்கொண்டு
பார்வை பார்க்கின்றாய்

இனிமை நடையேற்ற
நட்பின் மொழியை
ஈன வார்த்தைகள் கொண்டு
துளைத்து எடுக்கின்றாய்

உனை தேடி கரம் கோர்த்து
வலி ஏந்தி வடு சுமந்து
தோள் கொடுத்த நட்பை
தூக்கி எறிகின்றாய்

வேலைக்கும் உன் வெற்றிக்கும்
வியர்வை சிந்தி
உழைத்த நட்பை
விட்டிலாய் வதைக்கின்றாய்

சந்தேகத்தோடு வாழும் நீ
கண்டதும் கேட்டதுமென்றாய்
தீர விசாரித்து தீர்க்கமாய்
முடிவெடுப்பதை விடுத்து

நேற்றைக்கும் இன்றைக்கும்
என்றைக்கும் நட்பென்பாய்
உன் மனதில் புகுந்த ஊனம்
கரையும் வரை உளறிடுவாய்

கரைந்த பின்னே கதறிடுவாய்
கண்ணீர் மல்கிடுவாய் - அப்போது
கண்ணுக்கெட்டா தூரத்தில் நான் இருப்பேன்
நட்பை மட்டும் சுமந்து

Comments

ஆண்-பெண் நட்பின் தூய்மையை அழகாக சொல்லி இருக்கீர்கள்.நன்றாக இருக்கிறது வார்த்தைகளின் விளையாடல். ஒரு சிறு திருத்தும் சொல்லலாமா?
அது ' ஊணம்' இல்லை.'ஊனம்' என்று இருக்க வேண்டும் தோழி!!!
நட்பு தூய்மையானது சில நட்பெனும் பெயரில் தவறு செய்யும் நபர்களே தவறானவர்கள். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

திருத்தம் செய்துவிட்டேன்

நன்றி
புளுதிகள் கொண்டு
வாறியடிக்கின்றாய்

the above should be as below:

புழுதிகள் கொண்டு
வாரியடிக்கின்றாய்

நன்றி
Vijay said…
வலிகள் சுமந்த கவியின் வரிகள் அனைத்துமே அருமை..... எழுத்துக்கள் இதயத்தைத் தொடுகின்றன.... எம்மையும் சிந்திக்க வைக்கின்றன்....
சந்ரு said…
அத்தனை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.
நட்பின் தொப்பில் கொடியை தொட்டுவிட்ட கவிதை
நட்சத்திர வாழ்த்துக்கள் !

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

இறுதிச்சடங்கு

உறவுகள்!