பெண்ணே

பெண்ணே நீயும் கண் திறவாய்
பேதை நீயும் உயர்ந்திடுவாய்
உன்னினம் போற்ற வகைசெய்து
உரக்க குரலினை எழுப்பிடுவாய்

அடுப்படி உந்தன் சொந்தமல்ல
அக்கினிக்கு நீ இரையல்ல
விட்டிலாக நீ இருப்பதைவிடுத்து
பீனிக்ஸாய் நீயும் எழத்தொடங்கு

தஞ்சமென்று தலை சாய்க்காதே
மஞ்சத்தில் மனதை தொலைக்காதே
பஞ்சத்தில் வாடி வதைந்தாலும்
நெஞ்சத்தில் நேர்மை இழக்காதே

வாசலை நீயும் தாண்டி விடு
வாதிட்டு உலகை ஆண்டுவிடு
வேஷங்கள் கண்டால் விழகிவிடு
வானத்தை தொடும்வரை முயன்றுவிடு

Comments

"..வாதிட்டு உலகை ஆண்டுவிடு
வேஷங்கள் கண்டால் விழகிவிடு,,'
உற்சாகம் ஊட்டும் வரிகள்.

'விழகி' யா அல்லது'விலகி'யா
வேஷங்கள் கண்டால் விழகிவிடு

should be

வேஷங்கள் கண்டால் விலகிவிடு

nice poem
//"..வாதிட்டு உலகை ஆண்டுவிடு
வேஷங்கள் கண்டால் விழகிவிடு,,'
உற்சாகம் ஊட்டும் வரிகள்.//


நன்றிகள்

விலகிவிடு என வர வேண்டும்
//வேஷங்கள் கண்டால் விழகிவிடு//

கருத்துக்களுக்கு நன்றி

விலகிவிடு என தான் வர வேண்டும்

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்