பதிவர்களே
பல்வேறு எதிப்பார்ப்புக்களோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கை வலைப்பதிவர் சந்திப்பானது எப்போது..... எப்போது....... என்பது தான் நம் அனைவரின் கேள்விகளாக இருக்கின்றது. நமது வேலைப்பளு, மற்றும் ஏனைய காரணிகளால் அது சார்பான முயற்சிகளை நாம் அனைவரும் தனித்தனியாகவே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் தனித்தனியாக செய்வதனிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதற்கான பலன் இன்னும் அதிகமாக இருக்கும். மேலும் பயனுள்ள வகையில் ஒழுங்கமைப்பதற்கும் இலகுவாக இருக்கும்.
வலைப்பதிவர் என வரும் போது நாம் அனைவரும் அதற்குள் அடக்கப்பட்டு விடுகின்றோம் என்பதனை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் முதல் சந்திப்பில் அறிமுகத்தோடு முடிந்து விட்டது அதை தாண்டி இம்முறை பட்டறை போன்று செயற்பட்டால் நல்லது என்றும், இது சார்பாக இதை செய்யலாம், அதனை செய்யலாம் என பல்வேறான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் எத்தனை பேர் நிகழ்வில் பங்குபற்றுவார்கள் என்பது தெளிவாக தெரியும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளையும், இடத்தினை தெரிவு செய்வதும் இலகுவாக இருக்கும் என்பது என் கருத்து.
என் இனிய பதிவுலக நண்பர்களே!
தங்களில் யார் யார் நம் இரண்டாவது பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வீர்கள் என்பதனை பின்னூட்டமாக தெரிவியுங்கள். மேலும் நிகழ்வு சார்ந்த உங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் சேர்த்து தெரிவிப்பீர்களானால் அது சார்ந்த ஒழுங்குகளை நாம் அனைவரும் சேர்ந்து செய்வதற்கு வசதியாக இருக்கும்.
உங்கள் விருப்பத்தினை இவ்வாறாக தெரிவியுங்கள்
பெயர் : ஜோ. சம்யுக்தா கீர்த்தனா
மின்னஞ்சல் : www.name@gmail.com
வலைத்தளம் : http://keerthyjsamvunarvugal.blogspot.com
தொலைப்பேசி இலக்கம் : 07xxxxxxxx
நன்றி
பதிவர்கள்

Comments
யாராவது தொடங்கினால் நல்லாயிருக்கும் என்னும் போது நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள்.
இனி நல்லதே நடக்கும்.
அநேகமான பதிவர்கள் கொழும்பிலிருப்பதால் சந்திப்பை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இல்லை என்றால் நுவரெலியா மாதிரி இடங்களில் சந்திப்பை ஏற்பாமு செய்ய நான் தயாராக இருக்கிறேன், ஆனாலும் எத்தனை பதிவர்கள் அங்கு வருவார்கள் என சொல்ல முடியாது. அப்படி வருவார்கள் என்றால் ஒழுங்குபடுத்த நான் தயார், ஆனால் ஆதுவும் இந்த மழை காலம் முடியவே சாத்தியமாகும்.
குழுமத்திலும் இதே பதிவை ஒரு கலந்துரையாடலாக ஆரம்பித்து விடுங்கள். தொலைபேசி இலக்கத்தையும் அஞ்சல் முகவரியையும் இவ்வாறு போட்டிருக்கிறீர்களே.. பிரச்சினை இல்லையா? அஞ்சல் முகவரியைப் போடும்போது.. name at gmail dot com என்று போட்டீர்களானால் தானியக்கமாக எடுத்து எரிதங்களை அனுப்பும் நடவடிக்கையிலிருந்து ஓரளவு தப்ப முடியும்.
ஒன்றாக செய்யப்படவேண்டுமென்பது கட்டாயம்...
ஆனால் ஏற்கனவே கழுகுப்பார்வைகள் பதிவர்கள் மீது விழுந்திருப்பதால் ஏற்பாடுகளை இயலுமானவரை இரகசியமாக செய்வது சிறந்ததென்று நினைக்கிறேன்...
(நன்றி சுபாங்கன். ;) )
நீங்கள் முன்னின்று செயற்பட எத்தனிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது....
விரைவில் ஒன்றாக, அனைவரினதும் ஒத்துழைப்பு, சம்மதங்களோடும் கலக்குவோம்....
என் ஆதரவும் என்றைக்கும் உண்டு