இழப்புக்களும் அவை தரும் வலிகளும்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இழப்புக்களும், ஏமாற்றங்களும் அவனை பலமுறை தீ(சீ)ண்டிப் பார்த்திருக்கும் ஆனால் அவற்றுள் ஒரு சில இழப்புக்களையும், ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ள முடிவதே இல்லை அதே போல மறந்து விட முடிவதும் இல்லை. நேர நீட்சிக்குள் நீளமாக தொடர்ந்து உணர்வின் ஒவ்வொரு அணுக்களையும் தொட்டுக்கொண்டே இருக்கும் அந்த வலிகளின் மீட்டல். எத்தனை தான் முயற்சி செய்தாலும் நினைக்கும் போதெல்லாம் கண்கள் குளமாகும், மனது ரணமாகும், உலகம் இருளாகும், வாழ்வு கசப்பாகும் அத்தனை வலிகளை தாண்டிய வடுக்கள் வலிகளோடே என்றும் இருக்கும்.

இப்படியான நிகழ்வுகள் என் இறந்த கால வாழ்க்கை பக்கங்களை பிரட்டும் போதெல்லாம் தலை தூக்கி என்னை துக்கப்பட வைப்பதுண்டு அவ்வாறான நிகழ்வுகளில் என்னை மிகவும் பாதித்தது, உலகத்தையே வெறுக்க வைத்தது, கடவுளை கல்லென தூற்ற வைத்தது என் பாசமான தந்தையின் இழப்பு. என்னால் இன்று வரை ஏற்றுக் கொள்ள முடிவதும் இல்லை தாங்கிக் கொள்ள முடிவதும் இல்லை. ஆம் இன்றோடு அவர் எங்களை விட்டுப் பிரிந்து 9 வருடங்கள் ஏனோ நேற்று தான் அவரை காளன் காவு கொண்டது போன்று தோன்றுகின்றது.

அவரை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை தங்கமான மனிதர். யார் மனதையும் புண்படுத்த மாட்டார், உதவியென வந்து நின்றால் யாராக இருந்தாலும் சலைக்காமல் உதவுவார். என்னை ஒரு மகளாக மட்டுமில்லாமல் ஒரு நண்பியாகவும் நடத்துவார். எங்களுக்காக எத்தனையோ விட்டுக் கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள் செய்திருக்கும் நான் அடிக்கடி அதிசயமாக பார்க்கும் உயிர் என் அப்பா. பள்ளி விடுமுறையில் நெருக்கமாக இல்லாமல் ஒரு சில நாட்கள் நம்மோடு பழகிவிட்டு பிரியும் நண்பர்களையே மீண்டும் சந்திப்போம் என தெரிந்தும் விடைபெற மனம் இடம் கொடாது அப்படி இருக்க ஒரு நல்ல தகப்பனாகவும், நண்பனாகவும் இருந்த ஒரு உயிரை நிரந்தரமாக பிரிதல் என்பது கொடுமையிலும் கொடுமை. இன்று அவரை தொலைத்து விட்டு நடைபிணம் போன்ற வாழ்க்கை வாழ்வதாய் உணர்கின்றது என்னோடு என் குடும்பமும்.

உயிர்களை படைத்து உணர்வுகளை தூண்டிவிட்டு அன்பான உறவுகளை வளர்த்துவிட்டு இடையில் பிரித்துக் கொள்வதில் என்ன இருக்கின்றது? ஒவ்வொருவரும் படைக்கப்பட்டது ஏற்றுக் கொள்ள தக்கதென்றால் ஒவ்வொருவரையும் தனித் தனியாக உறவு தொடர்புகளின்றி படைத்திருக்கலாமே என தோன்றுகின்றது. உலகில் அன்றாடம் ஆயிரக்கணக்கில் மரணங்கள்..... நமக்கு அயலிலும் தூரத்திலுமாக ஆனால் அவர்களுக்காக வருந்துவது இல்லையே அவரின் விதி அவ்வளவு தான் என நம் வேலைகளை நாம் தொடங்கி விடுகின்றோம். அப்படியே அதற்காக வருந்தினாலும் அந்த நேரம் மட்டுமே அடுத்து சில நாட்களில் அவ்வாறான நிகழ்வுகள் சார்ந்த ஒரு சிறு துறும்பும் நினைவில் வருவதில்லை ஆனால் உறவுகள் என வரும் போது உயிருள்ள வரை அந்த கவலை எம்மை தொடர்கின்றதேன்? பிறப்பும் இறப்பும் உயிர்களின் வாழ்வின் இரு அத்தியாயங்கள். உதிர்வும் மறைவும் மறுக்க முடியாதவை தான் என என்ன தான் படித்தாலும், என்ன தான் எழுதினாலும், அனைவரும் உணர்வுகள் ஒன்று சேர்ந்து கலக்கப்பட்ட உயிர்கள் தானே! தனக்கென வரும் போது கலங்கி போய்விடுவதில் அவனை கோழை என்பதா?

இப்படி என்ன தான் ஆறுதலாக பேசிக்கொண்டாலும், வீசியே சென்றாலும் உண்மை அன்போடு உறவாடிய உறவுகளை மறப்பது முடியவில்லையே மரணம் வரை வலிகொல்(ள்)கின்றதே ஆம் இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் எங்கள் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய கொடிய நாள் இது. உலகில் நான் அதிகமாக வெறுக்கும் நாளும் இதுவே.

எந்தையே என்னுயிர் தந்தையே
உன் நினைவுகள் வாழ வைத்தாலும்
உன் பிரிவு உயிரை பிழிகின்றது
உலகம் உயிர்ப்புடன் - நீ
தந்த நானும் உயிர்ப்புடன்
ஆனால் நீ மட்டும்....???

I Love You DAD

Comments

சிந்தனா,
'ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவதில்லை மாநிலத்தில்'

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள். வேதனைப் படாதீர்கள்.
உங்கள் தந்தை மேல் நீங்கள் அதிகம் பாசம் வைத்திருந்தீர்கள் என்பது ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். வலியில் கொடுமையான வலி பிரிவுதான் என்பதை நானும் ஒத்து கொள்கிறேன்.

யாழ்தேவி நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.
Unknown said…
யாழ்தேவி நட்நத்திரத்திற்கு எனது வாழ்த்துக்கள்...
Subankan said…
உங்கள் வேதனை புரிகிறது. அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தியுங்கள், எம்முடன் சேர்ந்து.
Admin said…
சிறு வயதிலே நானும் தந்தையை இழந்ததனால் உங்கள் இதயத்தின் வலி புரிகிறது. என்ன செய்வது எல்லோருக்கும் இறப்பு நிச்சயம் மனதைத் தேற்றிக்கொள்வதனைவிட வேறு வழியில்லை.

நட்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்.
உயிர்களை படைத்து உணர்வுகளை தூண்டிவிட்டு அன்பான உறவுகளை வளர்த்துவிட்டு இடையில் பிரித்துக் கொள்வதில் என்ன இருக்கின்றது?
இந்த வரிகளை நான் மிகவும் உணர்ந்து வாசிதேன்
உயிர் ஒன்றை படைத்து
உணர்வுகளை புகுத்தி
பரிதிவிடும் விளையாட்டு - இறப்பு
என்று கவிதை எழுதி் நொந்த மனம் இது இந்த வரிகளை நான் மிகவும் உணர்ந்து வாசிதேன்
உயிர் ஒன்றை படைத்து
உணர்வுகளை புகுத்தி
பரிதிவிடும் விளையாட்டு - இறப்பு
என்று கவிதை எழுதி் நொந்த மனம் இது இந்த வரிகளை நான் மிகவும் உணர்ந்து வாசிதேன்
உயிர் ஒன்றை படைத்து
உணர்வுகளை புகுத்தி
பரிதிவிடும் விளையாட்டு - இறப்பு
என்று கவிதை எழுதி் நொந்த மனம் இது http://kavikilavan.blogspot.com/2009/05/blog-post_30.html
இதை பார்க்கவும்.வேதனைகள் ஒன்றாக இருக்கும் போது சிந்தனைகள் ஒன்றாக வருகின்றது
Vijay said…
பழகிடும் உறவுகள் விலகிடும் போது இதயங்கள் தாங்காது என்ன செய்வது, இதைப்படிக்கையில் என் தந்தையின் நினைவு என்னைத் தழுவுகின்றது.... நீங்கள் சொல்வது போல் ஒரு சில இழப்புக்களையும், ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ள முடிவதே இல்லை..... சில அர்ப்ப சுகங்களுக்காக நல்ல நண்பினை தூக்கி வீசுபவர்கள் பற்றியும் எழுதுங்கள்.... உங்கள் எழுத்துலகப் பயணம் தொடர வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு