வலைபதிவுலகு சார்ந்த பதிவர்களின் கலந்துரையாடல்

பதிவர்களே.....!

பதிவுலகில் நாம் காலடி வைத்து, அல்லது வலைப்பதிவிடல் சார்ந்து அறிந்து கொண்டது வெகு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான் என்றாலும் வலைப்பதிவிடல் பல வருடங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் வலைப்பதிவர்கள் நமக்கே அது சார்ந்த பல்வேறுபட்ட தகவல்களும் தெரிந்திருப்பதில்லை. எனவே நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்த வலையும் வலையுலகும், பதிவிடலும் சார்ந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வோம். மேலும் வலைப்பதிவிடலின் நன்மை, தீமைகளையும் தெரிந்து கொள்வோம்.

பின்னூட்டங்களாக உங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிவியுங்கள். முதல் வலைப்பதிவு, யாரால் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? எவ்வகையான விடயங்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? இது போன்ற உங்களுக்கு தெரிந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்மைகள்
* தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளும், எண்ணங்களும் சிதையாமல் கருவாகின்றது.
* கருத்து சுதந்திரம் காணப்படுகின்றது.
* அவர் அவர் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கக்கூடிய நிலை காணப்படிகின்றது.
* மாற்றங்கள் செய்வதற்கான வசதிகள் காணப்படுகின்றது. (உ+ம்) அச்சில் பதித்த பின்னால் அவற்றில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியா நிலை காணப்படும் ஆனால் இங்கு தேவையானவற்றை சேர்த்துக் கொள்ளவும், தேவையற்றவற்றை நீக்கவும் முடியும்.
* பின்னூட்ட ஊக்குவிப்பு காணப்படுகின்றது. (உ+ம்) பத்திரிக்கைகளில் ஒருவரின் ஆக்கம் வெளியிடப்படுமாயின் அவரின் ஆக்கங்களை எத்தனை பேர் வாசிக்கின்றார்கள் என்பதும், சொல்லும் கருத்துக்கள் எத்தனை நபர்களை போய் சேருகின்றன என்பதும் தெரியாமல் இருக்கும் ஆனால் வலை பதிவிடலில் உடனுக்குடன் பதில்கள், கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்படுகின்றன மேலும் அவற்றில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும். எவ்வாறான நிலையை குறித்த பதிவு கொண்டுள்ளது என்னும் தன்மை விளக்கப்படுகின்றது. அடுத்த பதிவில் தெளிவும் திருத்தமும் பேண உதவியாக உள்ளது.
* சிறந்த நட்பு வட்டத்தை உருவாக்கி தருகின்றது.
* ஆர்வம் அதிகரிக்க வழிவகுக்கின்றது.


தீமைகள்
* இலகுவாக குறித்த ஒருவருடைய பதிவு களவாடப்பட்டுவிடுகின்றது.
* கணனி பாவணையாளர்களை மட்டுமே தகவல்கள் சென்றடைகின்றது.

Comments

Unknown said…
மண்டையில மசாலா உள்ளவங்க யாரும் பதிலளியுங்கோ...
எனக்கு 2, 3 மொக்கை போட மட்டும் தான் தெரியும்...

ஆனால் வலைப்பதிவுகள் முதலில் தொடரறாநிலை தினக்குறிப்புகளாக (online diary) பயன்படுத்தப்படவே அறிமுகப்படுத்தப்பட்டது...
பிறகு என்னப் போல 5, 6 மொக்கை போடும் கூட்டமும், 2,3 நல்ல மனுசர் நல்ல விசயங்களையும் எழுதத் தொடங்கியிருப்பினம்.....
Unknown said…
This comment has been removed by a blog administrator.
* பின்னூட்ட ஊக்குவிப்பு காணப்படுகின்றது. (உ+ம்) பத்திரிக்கைகளில் ஒருவரின் ஆக்கம் வெளியிடப்படுமாயின் அவரின் ஆக்கங்களை எத்தனை பேர் வாசிக்கின்றார்கள் என்பதும், சொல்லும் கருத்துக்கள் எத்தனை நபர்களை போய் சேருகின்றன என்பதும் தெரியாமல் இருக்கும் ஆனால் வலை பதிவிடலில் உடனுக்குடன் பதில்கள், கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்படுகின்றன மேலும் அவற்றில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும். எவ்வாறான நிலையை குறித்த பதிவு கொண்டுள்ளது என்னும் தன்மை விளக்கப்படுகின்றது. அடுத்த பதிவில் தெளிவும் திருத்தமும் பேண உதவியாக உள்ளது.///

உண்மைங்க!!!
// முதல் வலைப்பதிவு, யாரால் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? //

http://en.wikipedia.org/wiki/History_of_blogging_timeline பக்கம் பாருங்கள்

கா. சேது
WebLog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 இல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.
குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் WebLog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.

1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.

1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.

முதல் தமிழ் வலைப்பதிவாளராய் கார்த்திகேயன் இராமசுவாமி கருதப்படுகிறார். இவரது முதல் தமிழ் இடுகை ஜனவரி 01 2003 இல் இடப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது

நன்றி : http://ta.wikipedia.org/
Anonymous said…
//மண்டையில மசாலா உள்ளவங்க யாரும் பதிலளியுங்கோ...//

பிறகேன் தலைவரே நீங்க போடணீங்க

எனக்கு 2, 3 மொக்கை போட மட்டும் தான் தெரியும்...//

அது உலகத்துக்கே தெரியுமே...
\\ கருத்து சுதந்திரம் காணப்படுகின்றது.
????
V.N.Thangamani said…
Nalla visayam, pirithorunaal pinnoodtamidukiren. nantri.
www.vnthangamani.blogspot.com

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு