தூக்கம்

வானத்தையும் பூமியையும்
பிடித்து விளையாடும்
ஆசையோடு தாய் வயிற்றில்
கருவுற்று தரணியிலே
உதித்து
நீண்ட நாட்களின்
சிறு பகுதியை மட்டும்
கண்மூடி துயின்ற நான்
முழு நீளத்தையும் ஒன்றாய்
நித்திரையோடே கழிக்க போகின்றேன்
என் போல் நீயும்
உன் போல் அவனும்
அவன் போல் இன்னொருவனும்
என்றோ இதை தான்
அடைந்து விட போகின்றோம்
இதற்கிடையில் எத்தனை
போராட்டங்கள்?
எத்தனை ஆசையில்
அடுத்தவரை துன்பித்து
இன்புறுகிறோம் இன்றும்
ஏனோ தங்க பள்ளக்கு
சுமந்த ஊணும்
உணவாவது இந்த மண்ணுக்கே
உயிரோடு உலகமே
சுற்றிவிட்ட உனக்கு

இறுதியில் உறவாவது
ஆறடி மண் தானே?
அதற்குள் ஏன் அடுத்தவன்
வாழ்வை கெடுத்து
அரக்கனாய் மாள்கிறோம்?
உதயத்தில் முடிவாக வாழ்வு
இறப்பை கட்டிக் கொண்டதே
இருக்கும் வரை உயிரென்றும்
இறந்த பின்பு சவமென்றும்
இரண்டு பெயர் தானே அனைவர்க்கும்
இதை உணர்ந்து நடந்து
உலகம் இழந்தது ஒரு
உன்னத மனிதனை என
நம் பெயரை நாளும்
சொல்ல

Comments
ஆறடி மண் தானே?//
உண்மையான வரிகள்...
கவிதை அருமை..:)
கவிதை அருமை..:)//
Tnx Bavan :)
ஆறடி மண் தானே?
அதற்குள் ஏன் அடுத்தவன்
வாழ்வை கெடுத்து
அரக்கனாய் மாள்கிறோம்?
//
அர்த்தம் பொதிந்த வரிகள்...
அருமையான படைப்பு...
வாழ்த்துக்கள்
உலகம் இழந்தது ஒரு
உன்னத மனிதனை என
நம் பெயரை நாளும் வாழ்வோம்//
ம்...
நான் ரொம்ம்மப அப்பாவி எண்டுறதால பிரச்சினை இல்ல...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்...
அருமையான படைப்பு...
வாழ்த்துக்கள்//
நன்றி நன்றி
அர்த்தத்தை அசலாக்குவோம்
நம்பிட்டேன் நம்பிட்டேன் நண்பர்களே நீங்களும் நம்பிடுங்கள்
//நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்...//
நன்றி
நன்றி சந்ரு
வாழ்த்துக்கள் தோழி
இறக்கப் போகினும் சிறக்கப் போவோம்