என்றென்றும் உன்னோடு

ஒன்றாய் இரண்டாய்
இரண்டோடு இரண்டாய்
ஈரிரண்டு வருடங்களை
கடந்ததாக நம் காதல்!

ஏனோ.... நேற்று தான் நீ
உன் காதலை சொன்னதை போல
நினைத்து பார்க்கும் போதெல்லாம்
என் பெண்மை நாணம் கொள்கின்றது!

நேற்றும் இன்றுமாய்
இரவும் பகலுமாய் - என்
காதல் உன் மீது - நாளையும்
தொடரும் இதே காதலோடு!

நாட்கள் நீ இல்லாமல்
விரைந்தாலும் - உன்
அழைப்பொன்றே உயிர்
தந்து செல்கின்றது!

நரை படர்ந்தாலும்
நடை தளர்ந்தாலும்
நகராது என் காதல்
உனை தாண்டி...!

உலகம் உருண்டாலும்
உதிரம் உறைந்தாலும்
உயிர் பிரியும் வரை - உன்
நினைவோடே என் வாழ்க்கை!

Comments

பகீ said…
நல்லாயிருக்கு.

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஏதாவது உதவி தேவையெனில் சொல்லுங்கள். முடிந்தளவு உதவுகின்றேன்.

ஊரோடி
நல்ல கவிதை கீர்த்தி.

டெம்ளேட் மாற்றியிருக்கிறீர்கள் நன்றாக இருக்கிறது
Ramesh said…
கவிதை ரசிக்கத்தக்கது
சுருக்கமாய் :::

நான்கு வயது
ஆனாலும்
என்றும் பதினாறாய்
எப்போதும் எனக்குள்ளே
உயிர் கொள்ளுது
காதல்
நரைக்காது
உன்னோடு சேரும் வரை
வாழ்க்கை

சிதறல்கள்
Subankan said…
நல்ல கவிதை.

திரும்பவும் கறுப்பு டெம்ளெட்டா?
டெம்ளேட் மாற்றியபின்னர் உங்கள் வலையின் மெருகு இன்னும் கூடியுள்ளது. அடுத்த சந்திப்பு ஆயுத்தங்கள் எந்தளவில் இருக்கின்றன‌
பசி வந்தால் பத்தும் பறக்கும்
காதல் வந்தால் பெண்மையின் வெட்க்கம் பறக்கும்
நன்றாக உளது காதலின் உணர்வுகள்
//நல்லாயிருக்கு.//

நன்றி

//வலைப்பதிவர் சந்திப்புக்கு ஏதாவது உதவி தேவையெனில் சொல்லுங்கள். முடிந்தளவு உதவுகின்றேன்.//

நாம் அனைவரும் சேர்ந்து தானே செயற்பட வேண்டும்
//நல்ல கவிதை கீர்த்தி.

டெம்ளேட் மாற்றியிருக்கிறீர்கள் நன்றாக இருக்கிறது//

நன்றீ நன்றி
//கவிதை ரசிக்கத்தக்கது
சுருக்கமாய் ::://

நன்றி
உங்கள் வரிகளும் அருமை
//நல்ல கவிதை.//
நன்றி

//திரும்பவும் கறுப்பு டெம்ளெட்டா?//
மாற்றிவிட்டேனே :)
//டெம்ளேட் மாற்றியபின்னர் உங்கள் வலையின் மெருகு இன்னும் கூடியுள்ளது.//
நன்றி

//அடுத்த சந்திப்பு ஆயுத்தங்கள் எந்தளவில் இருக்கின்றன‌//
ம்.... நல்ல கேள்வி
உதவிக்கு தயாராகுங்கள்
//பசி வந்தால் பத்தும் பறக்கும்
காதல் வந்தால் பெண்மையின் வெட்க்கம் பறக்கும்
நன்றாக உளது காதலின் உணர்வுகள்//

காதல் அனுபவமோ???
நடக்கட்டும் நடக்கட்டும்

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு