வானவில்

வர்ணங்களின் கலவையோ
வையகத்தின் நிறமதோ
வந்தவுடன் மனம் துள்ளல் கொள்ளும்
வண்ண வண்ண வடிவதோ

மழையோடும் வெயிலோடும்
உறவாடி உயிரானாய்
உன்னழகில் உறைந்துவிட்டேன்
உணர்வுகளை தொலைத்து விட்டேன்

என்ன விலை அழகே நீ
சொல்லிவிடு வாங்கிடுவேன்
சொர்க்கத்தின் சுகத்தினையும்
உன் அருகில் அடைந்திடுவேன்

நீள்வட்டம் அரைவட்டம்
இது தானே உன் வடிவம்
நில்லாமல் ஓடிடுறாய்
உன் என்னை பாராமலே

வாரத்தில் மாதத்தில்
எப்போதோ நீ வருவாய்
உன் வரவை பார்ப்பதற்காய்
காத்திருக்கேன் தினம் நானும்

எனக்குள்ளே குதூகலிப்பேன்
எண்ணி எண்ணி தினம் மகிழ்வேன்
உன் அழகை கண்டு விட
என்னில் நான் கண் கொண்டேன்
Comments
கவிதை நன்றாக உள்ளது என்று மட்டும் தான் சொல்லுவேன்...
ஏனென்றால் எனக்கும் கவிதைகளுக்குமிடையில் வெகுதூரம்...
ஹி ஹி....
நன்றி
நன்றி