மரணிக்க முன் ஒரு நிமிடம்

உன்னை நீயே கேட்டுக்கொள்
உண்மையாய் உன்னில் கேட்டுக்கொள்
உலகில் நீ எது வரை என
உன்னை
கேட்டுக்கொள்
------------------------------------------*

உதிரம் கொண்டு உயிர் தந்து
உறவாய் உன்னை ஆளாக்கியவளுக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே
கேட்டுக்கொள்
------------------------------------------*

கண்ணில் மணியாய் உனைக் காத்து
கருணை மொழிகள் கற்பித்தவருக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
--------------------------------------------*

ஏழையாய் நானும் பிறந்தபோதும்
ஏட்டுக் கல்வி தந்தவருக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே
கேட்டுக்கொள்
--------------------------------------------*

பாரினில் பார்வையாய் நீ இருக்க
உனை அன்று படைத்தவனுக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
-------------------------------------------*

அன்பாய் உன்னில் உறவாடி
அடியும் இடியும் பகிர்ந்த சகோதரத்துக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
--------------------------------------------*

மலரும் நினைவாய் உறவாடி
தட்டிக்கொடுத்த தோழனுக்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே
கேட்டுக்கொள்
--------------------------------------------*

மனதால் உன்னை தினம் ஏந்தி
மரணம் வேண்டும் என்றவளு(னு)க்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
--------------------------------------------*

நிஜமும் நிழலும் தினம் தந்து
உனை ஏந்தி சுமந்த பூமித்தாய்க்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்
----------------------------------------------*

உன்னை நீயே கேட்டுக்கொள்
உண்மையாய் உன்னில் கேட்டுக்கொள்
உலகில் நீ எது வரை என
உன்னை நீயே
கேட்டுக்கொள்
------------------------------------------------*

Comments

ஒவ்வொருவரும் ஒரு முறை யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம் தான்.
ManA © said…
மரணிக்க முன் ஒரு நிமிடம்.. fantastic .. heart touching,,
Admin said…
//உன்னை நீயே கேட்டுக்கொள்
உண்மையாய் உன்னில் கேட்டுக்கொள்
உலகில் நீ எது வரை என
உன்னை நீயே கேட்டுக்கொள்//


பிடித்த வரிகள்


ஆனாலும் எல்லா வரிகளுமே அருமை
தரமான படைப்பு
காதலில் என்ன தயக்கம்
Subankan said…
அருமையான படைப்பு.

டெம்ளெட் நல்லாயிருக்கு.
நல்ல சிந்தனை. சுவையான வரிகள்
என்னையே நான் தினம் கேட்கும் கேள்விகளை உங்கள் வரிகளில் கண்டேன்..நிச்சயம் மரணித்து போகும் முன் நிறைவேற்ற துடிக்கும் சில விடைகள் இங்கு துாபமிடப்பட்டுள்ளது..
உங்கள் படை்ப்புகளில் என்னை கவர்ந்த படைப்புகளில் இதற்கு ஒரு இடம் உண்டு என்றால் மிகையல்லவே...
very nice...and being very socialistic...are great
Bavan said…
//நிஜமும் நிழலும் தினம் தந்து
உனை ஏந்தி சுமந்த பூமித்தாய்க்கு
நான் செய்தது தான் என்ன
உன்னை நீயே கேட்டுக்கொள்//

அழகாக எழுதி இருக்கிறீர்கள்...
அருமை...:)
//ஒவ்வொருவரும் ஒரு முறை யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம் தான்.//

ஆம் ஆனால் அடுத்தவனை பற்றி நினைப்பதிலும், அடுத்தவரை காயப்படுத்துவதிலுமே நாட்களை கடத்தும் மனித இனத்தை என்னவென்று திருத்துவது???

நன்றி
//மரணிக்க முன் ஒரு நிமிடம்.. fantastic .. heart touching,,//

நன்றி

மரணிக்க முன் ஒரு நிமிடம் நாமும் சிந்திப்போம்
நன்றி சந்ரு

மனிதத்தோடு வாழ்வோம்
//தரமான படைப்பு
காதலில் என்ன தயக்கம்//

நன்றி

ஆம் உண்மை அன்பை வெளிப்படுத்த தயக்கம் தேவையில்லை
//அருமையான படைப்பு.//

நன்றி! இதையெல்லாம் யோசித்து நடப்போம்

டெம்ளெட் நல்லாயிருக்கு.
நன்றி நன்றி நன்றி
//நல்ல சிந்தனை. சுவையான வரிகள்//

நன்றி நன்றி நன்றிகள்
மனதின் கிறுக்கல்கள்

நன்றி அண்ணா!

ஆம் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்க வேண்டிய வரிகள் தான் இவை
Muthusamy Palaniappan said...

// very nice...and being very socialistic...are great//

Thank You....! will think about thiz LOL
//அழகாக எழுதி இருக்கிறீர்கள்...
அருமை...:)//

நன்றி பவன்

நன்றிகள்

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு