நானும் காதலும்

தொலைப்பேசி சிணுங்கும் போதெல்லாம்
ஆவலால் துள்ளும் மனது - தொட்டுப்
பார்த்ததும் சோர்ந்து போகின்றது - உன்
அழைப்பு இல்லாத தருணங்களில்...!

உன் விழி தீண்டாமல் முடிகிறது - ஏனோ
உன் வார்த்தை கேளாமல் முடியவில்லை

நீ சொல்லும் ஐ லவ் யூ என்னும் வார்த்தைகள்
காதில் ஒலிக்கும் போதெல்லாம் - நான்
மீண்டும் மீண்டும் மலராகின்றேன்...!

அவ்வப்போது உன் வார்த்தைகள்
உயிரை பிழிந்தாலும் - உன்
அன்பின் வழுவால் - உன்
மீதான காதலை பெருக்குகின்றது...!

இன்று நீ ஒரு தேசம்
நான் ஒரு தேசம் - நீ
எப்படி இருப்பாய் என ஊகித்தே
காலம் கழிகின்றது காதலோடே...!

தொலைப்பேசி சிணுங்கும் போதெல்லாம்
ஆவலால் துள்ளும் மனது - தொட்டுப்
பார்த்ததும் சோர்ந்து போகின்றது - உன்
அழைப்பு இல்லாத தருணங்களில்...!
Comments
இதயம் வருடுகிறது
நன்றி
தொடர்ந்து வருகையை எதிர்ப்பார்க்கின்றேன்
இதயம் வருடுகிறது//
காதல் காத்திருப்பு சுகம்
நன்றி
தெரிந்து கொண்டே கேட்கக் கூடாது நண்பா,
ம்... என்ன செய்வது இப்படியே கழிகின்றன நாட்கள்