உறவுகள்

உனக்கும் எனக்கும் நேசம்
உதறல் கொள்ளுது உலகு
பாட்டன் முப்பாட்டன் பகையாம்
உளறி கொட்டுது உறவு!

நீ தேசம் தாண்டி சென்றாய்
என் இதயம் தேடி வந்தாய்
நாம் பாசம் என்று சொன்னால்
வெளி வேஷம் என்குது உறவு!

நான் உனக்காய் உலகில் வந்தேன்
எனக்காய் உன்னை பெற்றேன்
நிஜத்தில் தேட சொன்னால்
நிழலில் தேடுது உறவு!

அன்பின் மொழிகள் சொன்னாய்
என்னை அழகே என்றும் சொன்னாய்
உன்னை காண சொன்னால்
காதல் ஆழம் பார்க்குது உறவு!

உண்மை அன்பை கொண்டாய்
உயிராய் எனையே வென்றாய்
தருணம் பார்க்க சொன்னால்
பிரிய சொல்லுது உறவு!

உன்னை வேண்டாம் என்று சொன்னால்
விடுவேன் என்றேன் உயிரை
உன்னை விலக தினம் சொல்லி
வெறுப்பை சேர்க்குது உறவு!

Comments

Vijay said…
மெய்யானவற்றை விட்டு விட்டு பொய்யானவற்றை தேடும் உலகு........ அருமையான கவிதை கீர்த்தி
நன்றி விஜய்

உண்மை தான் பொய்மைக்கு தான் மதிப்பளிக்கின்றது உலகு

காதலையும் அப்படியே நினைக்குது உலகு
உணர்வு பரிமாற்றங்கள் தான் கதலாகுமே தவிர அருகில் இருப்பதும், தூரமாக இருப்பதும் காரணமாக கொள்ள முடியாது
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்