பாரதி கண்ட பெண்கள்

அடுப்படியில் அடங்கிவிட
அடிமைகள் இல்லை நாங்கள்
பொங்கியெழும் துணிவு கொண்ட
புதுமை பெண்கள்

வீட்டினிலே நாங்கள் என்றும்
மென்மை மங்கைகள்
விருப்புடனே சேவை செய்யும்
அன்பின் நெஞ்சங்கள்

அடக்கிடுவோம் வீரர் நாங்கள்
அகந்தைகளை நாளும்
அநியாயம் ஒழித்திடுவோம்
அனைவருமாய் கூடி

தவறு செய்தால் திருத்திக் கொண்டு
மேலே செல்லுவோம்
தவறி கூட தவறாய் நாங்கள்
தண்டிக்க மாட்டோம்

அடிக்க வரும் காளையரை
அன்பால் திருத்துவோம்
அதையும் மீறி அடிக்க வந்தால்
அடித்து நொறுக்குவோம்

வீசும் வலை விழுவதில்லை
எங்கள் தேசத்தில் - தூய
விழுதுகளால் நிரம்பிடட்டும்
எங்கள் வாழ்க்கை

எளிமை தன்னை என்றும்
எங்கள் வாழ்வில் கொள்ளுவோம்
ஏய்க்க வரும் கயவர் தம்மை
எதிர்த்து நின்று கோசம் போடுவோம்

சுட்டெரிக்கும் சுடர்கள் நாங்கள்
வீர மங்கையர் - எம்மை
இழிவு படுத்தும் மூடர் தம்மை
கொளுத்தி அழிப்போம்

தடுமாற்றம் கண்டிடாமல்
நேராய் செல்லுவோம்
அன்பு கொண்டு வீட்டுடனே
நாட்டை ஆளுவோம்

Comments

சபாஷ் கீர்த்தி.

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இவ்வாறான விடயங்களில் நான் பெண்கள் பக்கமே.

ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியில் எனக்கு நம்பிக்கையில்லை கீர்த்தி
//சுட்டெரிக்கும் சுடர்கள் நாங்கள்
வீர மங்கையர் - எம்மை
இழிவு படுத்தும் மூடர் தம்மை
கொளுத்தி அழிப்போம்//

அருமை..அருமை..
ரவி said…
குட் கீர்த்தி.
நன்றி யோகா அண்ணா. ம்ம்... பெண்களுக்கும் சுயம் என்று ஒன்றுண்டென மறந்துவிடுகின்றார்கள் அதை மாற்ற வேண்டும். மேலும் பெண்ணுக்கு பெண்ணே கொடுமைகள் செய்யும் காலம் இது என்ன செய்வது?
Vijay said…
Super.........
//தடுமாற்றம் கண்டிடாமல்
நேராய் செல்லுவோம்//
அண்ணனுக்கு தப்பாத ஒரு தங்கை நீ..உணை எண்ணி கலங்க தேவையில்லை.வெறும் எழுத்துக்களாக இவை தோன்றவில்லை உன் உறுமல்களாக தெறிக்கிறது.
நீ குரைக்கும் நாயல்லவே கடிக்காது என்பதற்கு நீ சீறும் சிறுத்தையாக இரு
சினம் கொண்டு சீண்ட வரும் இளைஞர்களுக்கு என்றும் சிங்கமாக விரு

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு