என் அன்னை
ஆராரோ ஆரிரரோ
அன்னையவள் அரவணைப்பு
பேசப்பேச பெருமை சேர்க்கும்
பெற்றவளின் சீராட்டு!
தொன்மை தமிழினிலே - மன
வன்மை கரைத்துவிடும்
தூயவளின் அன்பதுவோ
துணையாகும் எந்தனுக்கு!
ஏழையென்றாலும் கோழையல்ல
என் அன்னை - கோபம்
கொள்ளாத இமயமல்லோ
என் அன்னையவள்!
அகிலத்தை ஆட்சி செய்யும்
அக பலமும் தந்தவளே
அற்புதமாய் நான் உணர்ந்த
அழகியவள் நீயல்லோ!
அகிலத்தை ஆட்சி செய்யும்
அக பலமும் தந்தவளே
அற்புதமாய் நான் உணர்ந்த
அழகியவள் நீயல்லோ!
பாசத்தின் மறு உருவாம்
தேசத்தின் ஒளி அவளாம்
வாசத்தில் அவள் மலராம்வாழ்க்கைக்கு அவள் கருவாம்!
அன்புக்கு அன்னையல்லோ
அணைக்கும் உயிரல்லோ
அவள் புகழை பாடிடுவோம்
ஊராரும் போற்றிடவே!
Comments
தேசத்தின் ஒளி அவளாம்
வாசத்தில் அவள் மலராம்
வாழ்க்கைக்கு அவள் கருவாம்!//
சிறந்த சொற்பிரயோகங்கள். அன்னை எனும் சொல்லே கவிதை தான். வாழ்த்துக்கள்
//தொன்மை தமிழினிலே - மன
வன்மை கரைத்துவிடும்
தூயவளின் அன்பதுவோ
துணையாகும் எந்தனுக்கு!//
நிஜமான வரிகள்,
தேசத்தின் ஒளி அவளாம்
வாசத்தில் அவள் மலராம்
வாழ்க்கைக்கு அவள் கருவாம்!//
எனக்குப் பிடித்த வரிகள். அருமை!
கனவு கண்டவள்.
பிறக்காதிருக்குமுன்னே என்மேல்
பிரியம் கொண்டவள்.
என் நோய்க்கு விழித்திருந்து
வலி பொறுத்தவள் - என்
சாதனையில் சப்தமின்றி
கரைதிருப்பவள்.
சான்றோன் என கேட்க
காத்திருப்பவள்.
தனக்கென வாழாத
தகைமை கொண்டவள்
நன்றி சம்யுக்தா
வாழ்க வளமுடன்.
அக பலமும் தந்தவளே..//
கீர்த்தி.
அன்னைக்கு அலங்கார கவிதை...!
ஆனால், நம் கவிதைகளுக்குள் அடங்கி விடாதவள் அன்னை.!
அழகியல் கவிதை.