இலங்கை தமிழ்ப் பதிவர் சந்திப்பு

அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ... எப்போ.... என நாம் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த இரண்டாவது முறையாக ஒன்றுக்கூட்டப்பட இருந்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்பிற்கான ஒழுங்குகள் நிகழ்ந்த வண்ணமாக!

ஆம் எதிர்வரும் மார்கழி மாதத்தில் நடாத்தி முடிப்பதாக அமைப்பு குழுவினர் தீர்மானித்துள்ளனர். அது சார்ந்த விபரங்கள் நிகழ்ச்சி நிரலோடு கீழ்வருமாறு;

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை
(ரொக்சி திரையரங்கிற்கு முன்னால்)
காலம் : 13/12/2009 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : மாலை 2.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை

நிகழ்ச்சி நிரலும், விளக்கமும்
* அறிமுகவுரை - 5 நிமிடம்
* புதிய பதிவர்கள் அறிமுகம் - 10 நிமிடம்
(முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்களை அறிமுகப்படுத்தல்)
* பயனுறப் பதிவெழுதல் - 35 நிமிடம் (கலந்துரையாடல்)
பதிவுகளின் தன்மை, பதிவெழுதல் முறைமை, வீச்சு, தாக்கம், மேம்படுத்தல் முறைகள், பதிவுலகின் நன்மைகள், தீமைகள் போன்றன.
* பின்னூட்டங்களும் அவற்றின் தாக்கங்களும் - 35 நிமிடம் (கலந்துரையாடல்)
காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம் (பெயரிழிகள், அனானிகள்), பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல்.
* சிற்றுண்டியும் சில பாடல்களும் - 15 நிமிடம்
* இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது? - 20 நிமிடம்
குழுமத்தில் எவ்வாறு இணைவது, குழுமத்தை எவ்வாறு பாவிப்பது, எவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும், குழுமத்துக்கூடாக நாம் செயற்படுத்த நினைப்பது, குழுமத்தின் நன்மைகள் போன்ற விடயங்கள் விளக்கப்படும்.
* பெண்களும் பதிவுலகமும் - 15 நிமிடம்
பெண் பதிவர்களின் பதிவுலகப்பயணத்திற்கான தடைகள், பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும் போன்ற விடயங்களோடு பெண்பதிவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமையும் சிற்றுரை.
* பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி - 10 நிமிடம்
கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டுமுடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.
* உங்களுக்குள் உரையாடுங்கள் - 20 நிமிடம்
எத்தனைதான் பதிவுகளூடாக நம் அறிமுகமானவர்களாக இருந்தாலும் நேரில் அறிந்தவர்களாக இல்லை எனவே பதிவர்களுக்குள் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தும் முகமாக அமையும்.

பிற்குறிப்பு :
***ஒவ்வொரு நிகழ்விற்கும் குறிப்பிட்டளவு நிமிடங்கள் அண்ணளவாகக் குறிக்கப்பட்டுள்ளன. சிறு நேர மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பின் நிகழ்வுகள் தொடங்கப்படும் என்பதைக் கூறிக்கொள்வதோடு பதிவர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

***தூர இடங்களில் இருந்து வரும் பதிவர்களைக் கருத்தில் கொண்டே மாலைஇரண்டு மணி தேர்ந்தெடுக்கப்பட்டுளது. இது சார்ந்த பிரச்சினைகள், வசதிகள் குறித்து இம்முறை சந்திப்பில் கலந்துரையாடுவதன் மூலம் அடுத்த சந்திப்பில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

***இது பதிவர்களுக்கான சந்திப்பு. இது நம் நிகழ்வு என்பதை மனதில் கொண்டு சந்திப்பு பயனுள்ளதாக அமையும் வகையில் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இங்கே ஒவ்வொரு தனிப்பதிவரும் முக்கியமானவரே உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்களும் செவிமடுக்கப்படும். நிகழ்வு சிறப்புறலுக்கும், நிகழ்வு சார்ந்த செலவுகளிலும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

***பதிவர்கள் தங்கள் வருகையை இங்கே பதிலிடுவதன் மூலமோ, அமைப்புகுழுவினரில் ஒருவரோடு தொலைப்பேசியிலோ, நேரடியாகவோ தொடர்பு கொள்வதன் மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

***மேலும் பதிவர் சந்திப்பு பற்றிய விடயத்தை உங்களுக்கு தெரிந்த பதிவர்கள்அனைவருக்கும் (கடந்த சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்களுக்கும்) தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

***முதல் பதிவர் சந்திப்பில் போலவே இம்முறையும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். இது சார்ந்த முயற்சிகளில் மதுவதனன் மௌ. (கௌபாய்மது) ஈடுபடுவார். அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers இது நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத பதிவர்களுக்கும் ஏனையோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறாக நம் வரும் ஏற்பாடுகள் நிகழ்ந்த வண்ணமாக! இலங்கைத் தமிழ்ப்பதிவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நிகழ்வுகளில் கலந்து, பங்கேற்று நிகழ்வு சிறப்புறலில் உழைத்து பதிவருக்கான தடம் பதித்தலில் மகிழ்வுறுவோமாக!

நன்றி
அமைப்புக் குழுவினர்

Comments

நல்லது... நிகழ்ச்சி நிரல் அனைவருக்கும் விருப்பமுடையதாக இருக்கும் என நம்புகிறோம்.

செலவுகளுக்காக பதிவர்கள் ஆளுக்கு நூறு ரூபாய்கள் போட்டு இச்சந்திப்பை சிறப்புற நாடாத்துகின்றோம்.
Admin said…
சந்திப்போம், கலக்குவோம்.
//சந்திப்போம், கலக்குவோம்.//

நல்லது சந்ரு

நன்றிகள் எங்களோடு இணைந்து செயற்படுங்கள்
//நல்லது... நிகழ்ச்சி நிரல் அனைவருக்கும் விருப்பமுடையதாக இருக்கும் என நம்புகிறோம்.//
ஆம் நானும் அப்படித் தான் நினைக்கின்றேன்.

//செலவுகளுக்காக பதிவர்கள் ஆளுக்கு நூறு ரூபாய்கள் போட்டு இச்சந்திப்பை சிறப்புற நாடாத்துகின்றோம்.//
நன்றி இது நம் நிகழ்வு என்பதை உணர்ந்து உங்கள் ஆதரவையும் தருகின்றீர்கள். ஆம் பதிவர்கள் அனைவரும் ஆளுக்கு நூறு ரூபாய்கள் போட்டு நடாத்தி முடிப்போம்.

நன்றி
நானும் வர முயற்சிக்கின்றேன். ஹிஹிஹி

நல்லதொரு நிகழ்ச்சி நிரல்
//நானும் வர முயற்சிக்கின்றேன். ஹிஹிஹி//
அன்பு அண்ணா இது கொஞ்சம் ஓவர்

//நல்லதொரு நிகழ்ச்சி நிரல்//
நன்றி நன்றி நன்றி
V.N.Thangamani said…
நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
வர முயல்கிறேன் நண்பரே
தூரமும் நேரமும்தான் பிரச்சினை இருப்பினும் கலந்துக் கொள்வதால் பல அனுகூலங்கள் கிட்டும் என நம்புகிறேன்
கட்டாயம் வரவேண்டும்..
கலந்துகொள்ள வேண்டும்...
கலக்கவும் வேண்டும்...
சந்திப்போம்....
// வி.என்.தங்கமணி, said...

நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.//

நன்றிகள் கோடி
//வர முயல்கிறேன் நண்பரே
தூரமும் நேரமும்தான் பிரச்சினை இருப்பினும் கலந்துக் கொள்வதால் பல அனுகூலங்கள் கிட்டும் என நம்புகிறேன்//

தர்ஷன் நீங்கள் எங்கிருக்கின்றீர்கள்? இம்முறை சந்திப்பில் கலந்து கொள்வீர்களானால் தூர இருந்து வருபவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அது சார்ந்த முடிவுகள் எடுக்க இலகுவாக இருக்கும்.

கொழும்பு அனைவருக்கும் பொதுவான வந்து போகும் இடமாக கருதியே இச்சந்திப்பினை இங்கே ஒழுங்கு செய்தோம்.

கலந்து கொள்வீரென எதிர்ப்பார்க்கின்றோம்
நன்றி.
//கட்டாயம் வரவேண்டும்..
கலந்துகொள்ள வேண்டும்...
கலக்கவும் வேண்டும்...
சந்திப்போம்..//

நல்லது சந்திப்போம்

நன்றி நன்றி
Unknown said…
நானும் வருகிறேன்...

என் வருகையையும் இத்தால் உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.....
maruthamooran said…
நல்லது சந்திப்போம்
சந்திப்போம் கீர்த்தி
Thamira said…
வாழ்த்துகள்.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு