நீ வேண்டும் வரமாக

கதை பேசி
கரம் சேர்த்து
கவி நெஞ்சின்
கலையாக.......

வலை வீசி
வசை பாடி
வாழ்வொன்று
வரமாக......

உணர்வோடு
உறவாடி
உலகத்தில்
உயிராக......

சிந்தனையின்
சிலையாகி
சிறு நெஞ்சின்
சிறையாக.....

தடுமாறி
தளராமல்
தவிப்போடு
தளிராக.....

விடியாத
விடியலாய்
வினாவாகி
விடையாக.....

மதியான
மனதாகி
மறு ஜென்மம்
மரணிக்க....

பகலிரவு
பக்கத்தில்
பண்பாக
பதிலளிக்க....

தேனாகி
தேளாகி
தேவைகளின்
தேடலாக....

சந்தங்கள்
சத்தமிட
சங்கீதம்
சலசலக்க.....

இயலாமல்
இடியாமல்
இயல்போடு
இசையாக...

நீ வேண்டும் வரமாக!

Comments

Bavan said…
கவிதை நடை அருமை,
வழக்கம் போல நல்லாயிருக்கு..:)
Vijay said…
அழகான கவிதை
"காலமெலாம் காதல் வாழ்க"
வாழ்த்துக்கள்
//....
பகலிரவு
பக்கத்தில்
பண்பாக
பதிலளிக்க....

தேனாகி
தேளாகி
தேவைகளின்
தேடலாக....//

கீர்த்தி,

சிக்கனச் சொல்லாக்கம், இயல்பான எதுகையும் மோனையும்...எளிதானப் புரிதலுடன்...அருமை.!
Admin said…
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றேன் வந்து தொடருங்கள்.

http://shanthru.blogspot.com/2009/11/blog-post_09.html#

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு