பம்பலபிட்டியில் அரக்க வேட்டை
நேற்று முன் தினம் பம்பலபிட்டியில் கடலுக்குள் தள்ளி ஒருவரை துடிக்க துடிக்க அடித்து கொன்ற அரக்கத்தனம் மனதை பதைக்க வைக்கின்றது . ஆம் மனித நேயம் , மனசாட்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் இன்று மனிதர்களா ? அரக்கர்களா நம் தேசத்தில் வாழ்கின்றார்கள் என சிந்திக்கும் வகையில் மனித படுகொலைகளும் , சித்திர வதைகளும் பெருகிவிட்டது . மனிதம் மிருக வெறி கொண்டு மிருக வேட்டை கொள்கின்றது . உயிர் மறித்த மிருகங்களுக்கும் நாளுக்கு நாள் மாறும் விலையுள்ள இந்த தேசத்தில் மனித உயிர்களுக்கு விலை இல்லை என கொன்று குவிக்கப்படுகின்றது உயிரின் பெறுமதி தெரியாமல் . 29/10/2009 அன்று பம்பலபிட்டியில் வாகன நெரிசலுக்குள் வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும், ஆட்களின் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறி அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் அவரின் உயிரையே பறித்த அசம்பாவிதம் ஏற்றுக் கொள்ள முடியாதது . இங்கே சடப்பொருட்களுக்குள்ள முக்கியத்துவம் மனித உயிர்களுக்கு இல்லையே என்பது வேதனையை தருகின்றது . கொலை செய்யப்பட்ட அக்குறித்த நபர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என...