உன்னத காதல்

நீ இருக்கும் நெஞ்சமிது - உன்
நினைவுகளை மெல்லுது
கனவுகளை கொள்ளுது
நிஜத்தினை அள்ளுது!

யார் யாரோ வந்தபோதும்
தேடுது உன்னையே - உன்
மௌனத்தின் கொடுமையால்
நொந்தது இதயமே!

பேசாமல் ஏசுகிறாய்
ஏசிவிட்டு பேசுகிறாய்
என்னவென்று ஏற்றுக் கொள்வேன்!

கூடலில் களிப்பின் உச்சத்தையும்
ஊடலில் நரகத்தின் வாசலையும்
தொட வைக்கின்றாய்!

பாசமா....? வேஷமா....?
பலமுறை கேட்டு விட்டேன்
உன்னதை விட உயர்ச்சி
என் காதல் என்கின்றாய்!

ஏற்றுக் கொள்கின்றேன்
அன்பை பெருக்கி - உன்
உரிமையை - நீ
எடுத்துக் கொள்கின்றாய்!

உன் உணர்வை ஏற்றுக் கொள்கின்றேன்
வா உல்லாச வானில் -நம்
உன்னத காதலை சுவாசிப்போம்!

Comments

// நீ இருக்கும் நெஞ்சமிது - உன்
நினைவுகளை மெல்லுது
கனவுகளை கொள்ளுது
நிஜத்தினை அள்ளுது! //

இந்த நான்கு வரிகளோ போதும் உங்கள் உணர்வுகளை வெளியிட
அழகான மென்மையான வரிகள் இவை.

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்