உணர்வுள்ள தமிழன்

வீரம் பேசி நிற்போம்
பிறர் வீழ வழி சொல்ல மாட்டோம்

தீய எண்ணங்கள் புதைப்போம்
தீர்க்கமாய் மார்க்கம் காப்போம்

ஏழை என்றெண்ண மாட்டோம்
அவர் யாவரும் எம் சொந்தம் என்போம்

சாதி மதம் பார்க்க மாட்டோம்
ஓரினம் ஓர் மக்கள் ஆவோம்
உம் உதிரத்தை உணவாக்க
மாட்டோம் - உண்மை
உடலுக்குள் உயிராக இருப்போம்

சுரண்டலில் சுகம் காண மாட்டோம்
உழைத்தே உயர்ந்து நிற்போம்

தமிழையும் தாயையும் காப்போம்
காத்திட கரம் கோர்த்து நிற்போம்

எறும்பின் குணத்தோடே வருவோம்
யானையின் பலம் தாங்கி நிற்போம்
நாங்கள் தமிழே உயிரென்று வாழ்வோம்

Comments

Vijay said…
//எறும்பின் குணத்தோடே
வருவோம்
யானையின் பலம்
தாங்கி நிற்போம்
நாங்கள் தமிழே
உயிரென்று வாழ்வோம்//

அருமையான கவிதை கீர்த்தி
//தமிழையும் தாயையும் காப்போம்
காத்திட கரம் கோர்த்து நிற்போம் //

நிச்சயமாக..........................

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்