83. வலைப்பதிவர்களுக்கு ஓர் ஆதங்க மடல்


என் அன்பின் வலைப்பதிவர்களே!

உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் உடனடியான மின்னஞ்சல் பதில்கள் அனைத்தையும் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன் இத்தனை ஆர்வமா என ஆடியும் போனேன் அத்தனை மின்னஞ்சல்கள் குவிந்த வண்ணம்....! எதை வாசிப்பது, எதை விடுவது என தெரியாமல் தடுமாறினாலும் அத்தனையையும் வாசித்து முடித்தேன்.

ஆம்...! உங்களுக்குள் இத்தனை ஆர்வமா? கூட்டத்தோடு கும்மாளம் போடும் உங்களால் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதற்கு கூட முடியவில்லையே என்பது வருத்தத்தை அளிக்கின்றது. (யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் கூறவில்லை என் மன ஆதங்கத்தின் வெளிப்பாடே இது. மேலும் இம்முறையாவது கருத்துக்களை முன்வைத்துவிட மாட்டீர்களா என்னும் நப்பாசை தான்)

மேலும் உங்களுக்கு இம்மின்னஞ்சல் மூலமாக அறியத்தருவது என்னவென்றால்......, வலைப்பதிவர் சங்கம் ஒன்றினை தொடங்கலாம் எனவும், அதில் உறுப்பினராக நம் வலைப்பதிவர்கள் அனைவரையும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் நினைக்கின்றோம். இது சார்ந்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு உடனடியாக அறியத்தாருங்கள். (இப்படி ஒரு சங்கம் தேவையில்லை எனத் தோன்றினாலும் கூறுங்கள்)

இச்சந்தர்ப்பத்தில் வந்தியதேவன், மன்னார் அமுதன், மு.மயூரன், புல்லட், விஜய்,  முர்சித் ஹகமட், யோ வாய்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (இவர்கள் மாத்திரமே தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

உங்கள் மின்னஞ்சல்களை காணவென்று ஓடோடி வரும் என்னை ஏமாற்றிவிடாதீர்கள் பதிவர்களே ஏமாற்றிவிடாதீர்கள். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன் என்றாவது உங்கள் பதிலை அனுப்புங்கள். மீண்டும் வெகு விரைவில் சந்திப்பேன் எனக் கூறி உங்களிடம் இருந்து விடைப்பெறுகின்றேன். (தொந்தரவுகளுக்கு மன்னிக்கவும்
. )

நன்றி!

மீண்டும் உங்கள் மின்னஞ்சல்களை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும்
ஜோ.கீர்த்தி
http://keerthyjsamvunarvugal.blogspot.com

Comments

ஈழத்தவனாயிருந்தாலும் இன்று அங்கில்லை! உங்களின் கோரிக்கை றியாயமானதே! வரவேற்கிறேன். ஆனால் பல இலைமறைகாயாக இருக்கின்ற பதிவர்களையும் சேர்த்து இதில் இணைப்பது நல்லது! மாவட்ட ரீதியாகவும் செயற்படலாம்! ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்! தங்களின் கருத்துக்கு எங்களுடைய ஒத்துழைப்பு என்றும் இருக்கும். விரைவில் தங்கள் எண்ணம் ஈடேற நாமும் வேண்டுகிறோம்!
கண்டிப்பாக நம் தமிழ் வலைப்பதிவர்களை ஊக்குவித்து அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே எங்கள் எண்ணம். முடிந்த வரை முயற்சியோடு செயற்படுவோம்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

நன்றி
இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள்
வெகு விரைவில் அறியத் தருகின்றேன்

நன்றி

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்