சிறுவர் பாடல்

சின்ன சின்ன
சிட்டு நாங்கள்
சிறகை விரித்து
பறக்கலாம்

வண்ண வண்ண
ஆடைகளை
வகையாய் நாமும்
அணியலாம்

பட்டம் விட்டு
பறவை போலே
வானை நாமும்
தீண்டலாம்

ஓடி ஓடி
ஆடிப் பறக்கும்
பட்டாம்பூச்சி
ஆகலாம்

குயிலை போல
இனிமையான
குரலிலையும்
பாடலாம்

குறும்பு செய்து
அன்னை அவள்
கோபத்தையும்
தூண்டலாம்

அடிக்க வரும்
அன்னை எம்மை
அணைக்கும் வரை
அழுவலாம்

பஞ்சு மிட்டாய்
பாகு மிட்டாய்
கலர் கலராய்
வாங்கலாம்

நேரத்திற்கு
உணவுகளை
விருப்பத்தோடே
உண்ணலாம்

கவனத்தோடு
பாடங்களை
கருத்துடனே
படிக்கலாம்

கவலைகளை
மறந்து விட்டு
களிப்புடனே
உறங்கலாம்

சின்ன சின்ன
சிட்டு நாங்கள்
சிறகை விரித்து
பறக்கலாம்
Comments
சிட்டு நாங்கள்
சிறகை விரித்து
பறக்கலாம்"