புரிந்திரா காதல்

எனக்காக எல்லாம்
செய்வதாய் சொல்கின்றாய்;

புதிதாய் அலங்கரிக்கப்பட்ட மனை
புஸ்பங்கள் நிறைந்த பஞ்சணை
குளிர்ச்சியான அறை
நேரத்திற்கு உணவு
நேர்த்தியான உடை
பொழுதுபோக்கு சாதனங்கள்
புத்தம் புதிய வாகனம்
விலையுயர்ந்த அணிகலன்கள்
விற்பனை அழகு சாதனங்கள்

இப்படி ......
எனக்காக எல்லாம்
செய்வதாய் சொல்கின்றாய்

பக்கத்திலேயே நீ இருந்தும்
என் மீது அன்பு செய்வதை தவிர!

அன்று சொன்னதையே
இன்றும் சொல்கின்றேன்
எல்லாம் செய்வாய் எனக்காக
உன்னிடம் நான் எதிர்ப்பார்ப்பதை தவிர
என் சந்தோசம் இவைகளில் இல்லை
என்பதை அறியாது!
Comments

காதல் என்றைக்கும் புரியாதாம் அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள்.
நல்ல கவிதை

ஒருவர் எதிர்பார்க்காததை எதிர்பார்க்காத நேரத்தில் கொடுத்து ஆச்சரியப்படுத்துவதை விட, எதிர்பார்ப்பதை சரியான நேரத்தில் செய்வதே சிறப்பானது
Vijay said…
அன்பிற்கு முன் அனைத்துமே வெறுமைதான், இதை உணராதவர்கள் இருந்தும் இல்லாதவர்களாய்.....
நீ எதைக்கொடுத்தாலும் எனக்கு திருப்தியில்லை உன் அன்பைத்தவிர ...தோழியின் ஆதங்கத்தை சம்பந்தப்பட்டவர் செவிமடுத்தால் நன்று ...
//காதல் என்றைக்கும் புரியாதாம் அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள்.//

ரிப்பீட்டுகிறேன்
காதல் வெறும் இரசாயண தாக்கம் என்றால் கவலைகொள்ள ஒன்றுமே இல்லை.,இலலை அதற்குள் ஏதோ ஒன்று உள்ளது என்கிறது உங்கள் வரிகள்...புரிந்தவன் புரிந்து கொண்டால் அவனுள் புகுந்தவள்(நீங்கள்) பிழைத்து கொள்வீர்கள்
வரிகள் அருமை..ஏக்கங்களாக நீழ்கிறது வாழ்க்கை...

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்