எழுத்தாளனும் இன்றைய நிலையும்எவன் ஒருவன் - தன்
உணர்வுகளை ஒன்றாக்கி,
உதிரத்தை மையாக்கி
உள்ளதை உ
ள்ளபடி
எழுதுகின்றா
னோ.....,


எவன் ஒருவன் - தன்
எழுத்துக்களால் - கத்தி
முனையை விட கூர்மையாக,
ஆழமாக அடுத்தவன்(ஈனர்)
மனதைக் குத்தி
க்
கிழிக்கின்றானோ
.....,


எவன் ஒருவன் - தன்
இறந்த கால, நிகழ்கால
நிகழ்வுகளுக்கூடாக
தேசத்தை ஆராய்
ந்து
நல்லதொரு
எதிர்கால நிலை காண
துடிக்கின்றானோ.....,
எவன் ஒருவன் - தன்
சுற்றார் சூழார்
வலிகளையும்
வடுக்களையும்
வார்த்தைகள்
கொண்டு
வடிக்கின்றானோ.....,


எவன்
ஒருவன் - தன்
நொருங்கிய

மன வடிவங்களின்
சிதறல்களை
ஆதங்கங்களாக்கி
வரிவடிவம்

கொடுக்கின்றானோ.....,


எவன்
ஒருவன் - தன்

நிலை மாறாமல் மறவாமல்
எத்துயர் வந்தப் போதும்
எழுந்து நிற்கும்
துணிவு கொண்டு
தன்னை பதிக்கின்றானோ.....,
அவனே
தேசத்துரோகியென
முத்திரை குத்தப்படும்
முதல் மனதன்!

Comments

உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் கூறும் கருத்து சில தேசங்களில் உண்மைதான் ஆனால் அவ்வாறு இல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தாராளமாக எழுத்து சுதந்திரம் உண்டு.

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்