அன்பே என் அன்பே

என் சுவாச நரம்புகளை - உன்
இசை கொண்டு மீட்டுகிறாய்
இளம் நெஞ்சின் துடிப்புகளை
ஸ்பரிசித்து உயிர் தந்தாய்!

இதயத்தின் அறைகளிலே
உன் காதலை நிரப்புகிறாய்
இனியவள் கரங்களிலே என்
இதயத்தை சுழற்றுகிறாள்!

அந்த நாள் நினைவுகள்
அகத்தினில் அடியிலே
இந்த நாள் இன்பங்கள்
இன்னுமே முடியலே!

என்னவோ என்னவோ
எனக்குள்ளே என்னவோ
என்னவள் தாங்கிய
இனிமை தான் அன்பிலே!

உண்மையாய் உறவுகள்
உணர்விலே மனதிலே
மென்மையாய் அணைப்புகள்
நெஞ்சிலே விளகலே!

கனவுகள் கவிதைகள்
நினைவிலே நிலவிலே
நினைவுகள் தாங்கிய
நிஜங்களே அன்பிலே!

என் விழியின் இடைவெளியில்
உன் பார்வையால் நோக்குறாய்
உடலின் அணுக்களிலே
காற்றலையாய் நுழைகின்றாய்!

வார்த்தை ஒலிகளிலே
பெண் கருவாகி உயிரானாய்
கவலையின் வலியினிலே நல்
மருந்தாகி மலரானாய் - பெண்
நீயே என் உயிரானாய்!

Comments
பெண் கருவாகி உயிரானாய்
கவலையின் வலியினிலே நல்
மருந்தாகி மலரானாய் - பெண்
நீயே என் உயிரானாய்!//
அழகான வரிகள் ஆனாலும் ஒன்று சில சமலம் உயிரை எடுப்பவளும் பெண்ணவள்தான்
பெண் கருவாகி உயிரானாய்
கவலையின் வலியினிலே நல்
மருந்தாகி மலரானாய் - பெண்
நீயே என் உயிரானாய்!//
nice
நினைவிலே நிலவிலே
நினைவுகள் தாங்கிய
நிஜங்களே அன்பிலே! //
அழகான ஒரு தமிழ் நடையில் அழகான ஒரு உணர்வு பகிர்வு..தங்கச்சி தொடரட்டும் உங்கள் பதிவுகளும் எழுத்துக்களும்..
உன் பார்வையால் நோக்குறாய்
உடலின் அணுக்களிலே
காற்றலையாய் நுழைகின்றாய்!
//
மிகவும் இரசித்த வரிகள்.. நல்லாயிருக்கு.. பாராட்டுகள்