தேவதை வந்தால்(ள்)













இனியதொரு மாலைப்பொழுது சோலைகள் நிறைந்த பிரபஞ்சம் சில்லிடும்வாடை காற்றை சுவாசித்தும் உடல் மீதான அதன் வருடலை வாங்கிக் கொண்டும்களைந்த தலை கோதி உடலை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு காலாற நடைபயின்றேன். மௌனத்தின் அர்த்தத்தை அசைப்போட்டுக் கொண்டே முன்நோக்கிச் செல்ல மூ
ச்சு முட்டியது முடியாமல் எட்டியது.









இயற்கை எத்தனை
பிரமிப்புக்கள் சுமந்தது. ஆச்சரியம் அடங்கவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொன்றும் புதிதாக.... இந்த தேசத்தின் பெயர் தான் என்ன? எங்கிருந்து வந்தது புதிதாய் என எனக்குள்ளேயே கேள்விகள் என்னையேகுடைந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் மெய் சிலிர்க்க வைத்தது அழகியபிரபஞ்சம்.... எங்கிருக்கின்றோம் எங்கு செல்கின்றோம் என்பதை உணராமலேயேஉலா சென்றேன்.












நீண்ட தூரம் நிலவின் வழி காட்டலோடே மனதின் அமைதியை சூடிக்க்கொண்டேமுன்னகர்ந்தேன்.... வழியே திடீரென கண்ணை பறிப்பதான் ஒரு ஒளி பிளம்புஜொலித்தது அதற்குள்ளிருந்து பிரபஞ்சத்தின் மொத்த அழகையும் அள்ளிப்பருகிய அழகின் உருவாக ஆம் ஒரு தேவதை அவள் ஒரு தேவதை. கதைகளில்மட்டுமே தேவதைகளை பற்றி அறிந்திருந்த எனக்கு
ண் முன்னால்காணக்கிடைத்ததும் அத்தனை ஆனந்தம் குளிரை அள்ளி வீசிய பொழுதும் எனக்குவியர்த்து கொட்டியது. தேவதை கையை நீட்டி என்னை தீண்டவும் செய்தாள்நான் சிலையானேன் அவளுள் சிறையானேன்.









தேவதை பேசத் தொடங்கினாள்... உனக்கு பத்து வரங்கள் தருகின்றேன் உனக்குதேவையானது எதுவானாலும்
கேள் என்றது. (பேச்சு மாற மாட்டாயே கேட்டேவிட்டேன்) நம் நாட்டின் போக்கு தேவதையையும் கூட நம்பமுடியவில்லை. தீவிரமாக யோசித்தேன் எதை கேட்பது எதை விடிவது என்ற குழப்பங்கள்சூடிக்கொள்ள மீண்டும் மீண்டும் யோசித்தேன்













நீண்ட மௌனம்..................
நானே மௌனம் கலைந்தேன்

எனக்கு பத்து வரங்கள் வேண்டாம் ஒன்பதை நீயே வைத்துக் கொண்டு ஒன்றைமட்டும் எனக்கு தா...

தேவதைக்கு சந்தோசம் உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி உன்னை போலஅனைவரும் இருந்துவிட்டால் என என்னை புகழ்ந்து தள்ளினாள் புகழ்ச்சிஉச்சகட்டமடைய சரி உனக்கு ஒரு வரத்தை தருகிறேன் வேண்டியதை கேள்என்றாள்

நான் நீயாக வேண்
டும் என்றேன்உன் சக்திகள் அனைத்தும் எனக்குள் வேண்டும்நான் நீயாக வேண்டும் என்றேன்.








அப்பொழுது
அதிர்ச்சியில் தேவதை சிலையானாள் மீண்டும் அதையே கேட்டேன். கண்களை மூடிக்கொள் என்றது தேவதை நான் சொல்லும் வரை கண்களைதிறக்க வேண்டாம் என்றும் சொல்லவே அப்படியே நின்றேன். வெகு நேரம்செல்லவே கண்களைத் திறந்தேன் நான் கண்ட பிரபஞ்சத்தின் சுவடை கூடகாணவில்லை அனைத்துமே மறைந்திருந்தது (தேவதையும் தான்) தலைசுற்றியது... போல உணர்ந்தேன் கீழே விழப்போகின்றேன் என தோன்றவே அருகில்இருந்த சுவரை எட்டிப்பிடிக்க நினைத்து நகர்ந்தேன். அய்யோ என அலறினேன். சிறிது நேரத்தின் பின்பே உணர்ந்தேன் கண்டது கனவென்று... கனவில் கூடகேட்டது கிடைக்கவில்லை தமிழனாக பிறந்ததனாலோ நானே கேட்டுக்கொண்டேன் விடை வரவே இல்லை....









உங்களுக்காவது நீங்கள் கனவில் கேட்பது கிடைக்கின்றதா என முயற்சியுங்கள்என என்னிடம் வந்த தேவதையை உங்களிடம் அனுப்புகின்றேன்

பாடுமீன் விஜய்

தயா

சுடுதண்ணி

உங்கள் தேவதை உங்களோடு என்ன பேசிக் கொள்கின்றாள் என்பதையும், நீங்கள்கேட்கும் வரங்களையும் தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றோம். எழுதுங்கள் எழுதுங்கள் எழுதுங்கள்

Comments

Vijay said…
ஓ கனவு கண்டிங்களா..........? இபபடி எத்தன கனவு கண்டிருப்பம்...... என்னபண்ணுறது கனவுகளோடு மட்டுமே நகருது வாழ்க்கை... என்று நனவாகுமோ
தமிழனாக இருப்பதால் மட்டும் கனவு பலிப்பதில்லை என்பது யதார்த்தமாக இல்லை..
எனக்கென்னமே தேவதை நீங்கள் கேட்டதை தந்ததாகவே தோன்றுகிறது.நீங்கள் அவராக கேட்டீர்கள் அது தான் இங்கு இருக்கிறீர்கள்..இனி உங்கள் சக்தியை நீங்கள் பயன்படுத்துவதை பொறுத்து தான் நீங்கள் தேவதையா என்பது தெரியும்..உங்களுக்கான கடமை இன்னும் விரிந்து கிடக்கிறது..சரியான வழியில் அதை கொண்டு நடவுங்கள்
ஒரே ஒரு வரம்ன்னு இப்படி கேட்டா யாரு தான் ஓடமாட்டா...பொன் முட்டையிடுற வாத்தை இப்படி கழுத்தை அறுத்து வீணாக்கிடீங்களே!
“நான் நீயாக வேண்டும் என்றேன்” உன் சக்திகள் அனைத்தும் எனக்குள் வேண்டும் நான் நீயாக வேண்டும் என்றேன்.

இடத்தைத் தந்தா மடத்தையல்லவா பிடிக்கப் பாக்குகின்றீர்கள்..
நல்லாயிக்கு வர்ணனைகள்...
அழைப்புக்கு நன்றி

http://suduthanni.blogspot.com/2009/11/blog-post.html

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு