Search This Blog

Monday, October 12, 2009

கெம்பஸ் போவேன்

அன்றும் வழமைபோல நண்பர்களோடு ஆங்கில வகுப்பிற்கு சென்றேன். அங்கு நடந்த ஒரு சுவையான சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.எங்கள் பின்லேடி ஓ சாரிங்க இப்படி தான் எங்கள் ஆங்கில ஆசிரியையை நாங்கள் அவருக்கு தெரியாமல் அழைப்போம். வாயால் பேசுவதைவிட தடியாலேயே அதிகமாக பேசுவார். அவரிடம் வகுப்பிற்கு சென்று அடி படாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவு அவருக்கு கோபம் வருவதே இல்லை தங்கமான மனிதர். ஆம் அன்றும் எங்கள் பாடத்தை படிப்பித்துக் கொண்டிருந்தவர் திடீரென உயர்தரம் படித்து முடிந்ததும் எங்கு செல்ல வேண்டுமென விரும்புகின்றீர்கள் என எங்களைப் பார்த்து கேட்டார்.

நாங்கள் ஒவ்வொருவராக செல்ல விருப்பமான இடங்களாக் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், திருகோணமலை, இந்தியா என வரிசையாக சொல்லிக் கொண்டே போனோம். அவற்றுள் எனக்கு அடுத்தப்படியாக அமர்ந்திருந்த எனது வகுப்பில் படின்ற தனலஷ்மி எழுந்து பல்கலைக்கழகம் செல்ல விரும்புவதாக கூறினாள்.


உடனே
எங்கள் அனைவரையும் விட்டு விட்டு பின்லேடி அவளை புகழ்ந்து தள்ளினார். அவள் தான் தன் பள்ளி வாழ்க்கை முடிந்
ததும் என்ன செய்ய வேண்டுமென்ற தெளிவான முடிவோடு இருப்பவள் எனவும் நாங்கள் உருப்பட மாட்டோம் என்றும் எங்களையும் புகழ்ந்து தள்ளினார். பின்னர் எங்களிடம் எதற்காக அங்கு செல்ல விரும்புகின்றீர்கள் என தனலஷ்மியிடமே ஆரம்பிக்க அவளும் சொல்ல தொடங்கினாள். “தனது அக்கா அங்கு படிப்பதாகவும் அவளை பார்க்க பல்கலைக்கழகம் செல்வதாகவும் கூறினாள்”

நாங்கள்
எல்லோரும்
சத்தமாகவே சிரித்து விட்டோம். அன்றும் எங்கள் கோபமே வராத பின்லேடிக்கு கோபமே வரவில்லை, அவளை போட்டு சரமாரியாக தாக்கிவிட்டார். பூஜையே நடந்தது போங்க. அதன் பிறகு இன்றுவரை அவளை நாங்கள் பல்கலைக்கழகம் போவோமா என அழைத்து வெறுப்பேத்துவதுண்டு.

“இன்று அவள் தனது உயர் கல்வியைத் தொடர வெளிநாடு சென்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது”

இது போன்ற உங்கள் பள்ளி நாட்களில் நடந்த மறக்கமுடியாத சுவையான நிகழ்வுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என இதன் மூலம் மூவரை அழைக்கின்றேன்.

*
பாடுமீன் விஜய்

*
Cheers with Jana

*
நையாண்டி நைனாநன்றி!

9 comments:

சுபானு said...

அது சரி நீங்க பல்கலைபோனிங்களா..?? பதிவு நல்லாயிருக்கு..

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//அது சரி நீங்க பல்கலைபோனிங்களா..?? //

நான் ஐந்தாம் கிளாஸ் பெயிலுங்கோ :(


//பதிவு நல்லாயிருக்கு..//
நன்றி

யோ வாய்ஸ் (யோகா) said...

ஸ்கூலுல நீங்க ரொம்ப குழப்பமோ?

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//ஸ்கூலுல நீங்க ரொம்ப குழப்பமோ?//

ரொம்ப தங்கமான பொண்ணு நான் :) :) :)

நீங்கள்???

மன்னார் அமுதன் said...

நல்ல நகைச்சுவைப் பதிவு

வந்தியத்தேவன் said...

கீர்த்தி பொய் சொல்லவேண்டாம் நீங்கள் 2 ஆம் வகுப்பு வரைதானே படித்தீர்கள். பிறகு எப்படி ஐந்தாம் வகுப்பு பெயில் ஹிஹிஹி.

எங்கடை வகுப்பில் ஆசிரியர் ஒவ்வொருவரையும் என்னவாக ஆகப்போகின்றாய் என்றபோது ஒருதன் போலீஸ் என்றான் அன்றுமுதல் அவனுக்கு போலீஸ் தான் பட்டம்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//நல்ல நகைச்சுவைப் பதிவு//

நன்றி அமுதன்

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

//கீர்த்தி பொய் சொல்லவேண்டாம் நீங்கள் 2 ஆம் வகுப்பு வரைதானே படித்தீர்கள்//

தங்கையை பற்றிய உண்மைகளை இப்படி போட்டு உடைப்பது ஒரு அண்ணனுக்கு அழகா?

பள்ளி வாழ்க்கை மறக்க முடியாதவை

Subankan said...

நல்லாயிருக்கு.