90. செஸ் விளையாட்டின் விதி முறைகள்

 
மூளை உள்ளவர்கள் விளையாடும் விளையாட்டே இது மன்னிக்கவும் மன்னிக்கவும் மூளையைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டே இது.  (எங்களுக்கெல்லாம் மூளை இல்லையென சொல்ல வந்தாயானு கேட்க வராதீங்க தவறுதலாகத் தான் டைப் செய்து விட்டேன்)
செஸ் விளையாடுவதற்கு ஞாபக சக்தி ஒன்றே போதும் என்கின்றது ஆய்வுகள் (கண்ணைக் கட்டி செஸ் விளையாடி நிறுபித்துள்ளனர்) செஸ் விளையாடுகின்றேன் என தாம் விளையாடி மகிழ்ந்தவர்களில் நானும் ஒருத்தி தான் என்றபோதும் எனக்கு தெரிந்தவர்களால் விதிமுறைகளைத் தெரிந்து கொண்டேன் இதோ இன்று உங்களுடனும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். இது சார்ந்த உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ் சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாக 1924 ஜீலை 24இல் நிறுவப்பட்டது.. தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இனி செஸ் விளையாட்டு சார்ந்த விதிமுறைகளைப் பார்ப்போம். ”செஸ்” பண்டைய காலம் தொட்டு புலக்கத்தில் இருந்த ஒன்றாகும். முற்காலத்தில் அரசர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதும் பிரசித்தமானதாகவும் திகழ்ந்தது. இன்றும் இளைஞர்கள் மத்தியில்  செஸ் பிரபலமாக காணப்படுகின்றது என்பது வரவேற்கத்தக்கது. அதாவது இருவரால் இவ்விளையாட்டு விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார். சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

செஸ் பலகை (Chess Board)
 செஸ் பலகை கறுப்பு, வெள்ளை சதுரங்களால் நிறப்பப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 8 சதுரங்களைக் கொண்டதான 8படிகளில் மொத்தமாக 64 சதுரங்கள் காணப்படும். வலதுகைப் பக்கம் வெள்ளைச் சதுரம் அமையும் வகையில் வைக்க வேண்டும். மேலும் ஒரு படையில் 16 காய்கள் வீதம் காணப்படும். காய்களை அடுக்கும்போது முதல் நிரலில் அல்லது வரிசையில் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம். இரண்டாவது நிரலில் எட்டு படைவீரர் காய்களும் நிறுத்தப்படும். எதிரணியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலே காய்கள் அடுக்கப்பட்டாலும்கூட, இங்கு கறுப்பு அரசி கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் வெள்ளைச் சதுரத்திலும் நிறுத்தப்படுவர். வெள்ளைப் படையணியே முதலில் நகரப்படவும் வேண்டும்.
மேற்காட்டப்பட்ட படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு காய்கள் ஒழுங்குப்படுத்தப்படும்.


“ஸ்டவுண்டன்” தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல்குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப்பட்டது. மேலும் 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழக்கத்தில் விட்டதாகவும் கூறப்படுகின்றது. அடுத்ததாக காய்களும் அவற்றை பயன்படுத்தும் விதிமுறைகளையும் பார்ப்போம்.


அரசன் (King)
எப்பொழுதும் தான் இருக்கும் இடத்தில் இருந்து எந்த ஒரு திசை நோக்கியும் , ஒரு சதுரத்துக்கும் மட்டுமே நகரமுடியும். தன்னைச் சுற்றியுள்ள 8 சதுரங்கங்களிலும் நகரும் தன்மையுடையது.

அரசி (Queen)
தான் இருக்கும் இடத்தில் இருந்து எந்த திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ ஒவ்வொரு தடவையும் எத்தனை சதுரத்துக்கு வேண்டுமானாலும் நகரமுடியும். ஆனால் காய்களைத் தாண்டி செல்ல முடியாது.

மந்திரி(Bishop)
தான் இருக்கும் இடத்திலிருந்து ஒவ்வொரு தடவையும் குறுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் (எத்தனை சதுரத்திற்கும்) நகர முடியும். ஆனால் காய்களைத் தாண்டி நகர முடியாது.


கோட்டை(Rook)
நேராக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நகரக்கூடியது. முன் பின்னாகவோ அல்லது இட வலமாகவோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் இதனாலும் காயைத் தாண்டிச் செல்ல முடியாது.குதிரை (Knight)
 “L” வடிவில் ஒரு நேரத்தில் 3 சதுரங்கள் நகரக்கூடியது. காய்களைத் தாண்டி நகரக் கூடிய ஒரே காய் இதுவாகும் எனினும் கடைசி சதுரத்திலுள்ள காயை மாத்திரமே அழிக்கக்கூடியது.இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகர்தபின் ஒரு சதுரம் இடம் அல்லது வலமாகவோ நகரும்.

படை வீரன்(Pawn) 
முதல் தடவையாக மாத்திரம் முன்னாக இரு சதுரங்களை தாண்டலாம். அடுத்தடுத்து முன்னோக்கி ஒரு சதுரத்திற்கே நகரலாம். ஆனால் இன்னொரு காயை அழிப்பதானால் குறுக்கு வழியாகவே இரு புறமாகவும் தாக்குதலை புரியலாம். அதன் பின்னர் நேராகவே நகர முடியும். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.மேலும் இக்காயை எதிராளியின் கடைசி எல்லை வரை நகர்த்தி விட்டால் ஏனைய காய்களின் தரத்திற்கு இவற்றை உயர்த்தி பயன்படுத்தலாம். ஆனால் எச்சூழ்நிலையிலும் பின்னோக்கி நகர முடியாது.


மேலும் இவ்விளையாட்டில் ஆட்டக்காரர் ஒரு காயை தொட்டு விடுவாரேயானால் அமுன்னர் இருந்த இடத்தில் திருப்பு வைக்க முடியாது அதனை நகர்த்தியே ஆகவேண்டும். 
செஸ் விளையாட்டின் முதலாவது வெற்றி வீரர் Wilhelm Steinitz என்பவராவார். அவுஸ்திரேலியா, அமெரிக்காவிற்கிடையிலேயே இந்த போட்டி நடைபெற்றதென்பதும் இவர் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Vijay said…
செஸ் பற்றி அறிந்திருந்த போதும் அறியாத பல தகவல்களைத் தந்தமைக்கு மிகவிம் நன்றி
root said…
tealy great thx for the inforamtion

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்