82. மற்றுமொரு வலைப்பதிவர் சந்திப்பு


















என் அன்பின் வலைப்பதிவர்களே!

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏனோ முதலாவது வலைப்பதிவர் சந்திப்பில் உங்களுக்குள் இருந்த ஆர்வமும், உற்சாகமும் இன்று முற்றாக மறைந்துள்ளதான ஒரு உணர்வு எனக்குள்...! சந்திப்பு எப்போ எப்போ என துடித்த உங்களை நினைவில் நிறுத்தி இன்றைய நிலையை நோக்கும் போது மனதிற்கு வருத்தமாகவே உள்ளது.

ஆம் அன்று வெகு விரைவில் எமது அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு என கூறி விடைப்பெற்ற நாம் இன்றுவரை அது சார்ந்த எந்தவிதமான முயற்சிகளும் செய்யவில்லை என்பது வருத்தமே. அடுத்த மாதத்திற்குள் மற்றுமொரு இனிய பதிவர் சந்திப்பை நடாத்தி மகிழ வேண்டுமென்பது என் அவா, உங்கள் ஆசையும் இதுவாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

நண்பர்களே...! அத்துடன் நீங்கள் பலர் இப்போது வலை, பேஸ்புக், ஜீமெயில், ட்விட்டர் என பலதிலும் நட்பாக இருந்தாலும் மீண்டும் சேர்ந்து எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும் எங்கள் ஆசை. பதிவர்களே, அடுத்த பதிவர் சந்திப்பு பற்றிய உங்கள் கருத்துக்களை உடனடியாக உங்கள் மின்னஞ்சலினூடாக தெரியப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் ஏற்று அது சார்ந்த முடிவுகள் எடுப்போம் என்பதனை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.

நன்றி

எதிர்ப்பார்ப்புடன்

http://keerthyjsamvunarvugal.blogspot.com

மின்னஞ்சல்
www.keerthyjsami@gmail.com
























Comments

Unknown said…
ஆகா... கிளம்பிற்றாங்கய்யா... கிளம்பிற்றாங்க...

யாராவது சண்டை ஏதும் பிடிச்சாவது விரைவில சந்திப்ப வையுங்கப்பா...

எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவா வையுங்கோ...
பார்போம் டிசம்பர் இறுதியில் நுவரெலியாவில் ஒரு சந்திப்பை ஏற்பாட்தடை செய்ய ஒரு யோசனை இருக்கு. அதற்கு முன் வேறு எங்காவது சந்திக்கலாம். நுவரெலியா என்றால் வருவார்களா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டியது..
//யாராவது சண்டை ஏதும் பிடிச்சாவது விரைவில சந்திப்ப வையுங்கப்பா...//

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி நன்றி நன்றி
//நுவரெலியா என்றால் வருவார்களா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டியது..//

ஆம் வருவார்களா என்பது சந்தேகமே!

அதற்கு முதல் கொழும்பிலேயே சந்திக்க ஏற்பாடுகள் செய்யலாமே?

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
ஆம் வருவார்களா என்பது சந்தேகமே!

அதற்கு முதல் கொழும்பிலேயே சந்திக்க ஏற்பாடுகள் செய்யலாமே?//

கொழும்பு என்றால் கொழும்பிலுள்ள யாராவது தான் ஏற்பாடு செய்ய வேண்டும். சந்ரு கண்டியில் ஏற்பாடு செய்தால் நல்லது என கூறினார். கண்டியில் வேறு யாராவது பதிவர்கள் என்னோடு இணைய தயார் என்றால் செய்யலாம் என நினைக்கிறேன். நான் மட்டும் கண்டியில் ஏற்பாடு செய்வதில் கொஞ்சம் Practical Problem இருக்கிறது. நுவரெலியாவில் என்றால் என்னால் தனியாகவே ஏற்பாடு செய்ய முடியும்.
//கொழும்பு என்றால் கொழும்பிலுள்ள யாராவது தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.//

இது சார்பாக கலந்தாலோசித்து விட்டு அறியத்தருகின்றேன்

நன்றி
Subankan said…
நல்ல முயற்சி. ஆயத்தப் பணிகளிற்கு ஆயத்தம் செய்யுங்கள், விரைவில் சந்திப்போம்.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு