என்று வரும்
பஸ் வண்டி ஓட்டம்
யன்னலோர இருக்கை
நீண்டதான பயணம்
வாகன நெரிசல்
மனதில் எரிச்சல்
காதை கிழிக்கும்
பீப் பீப் சத்தம்;
பக்கத்து இருக்கை
மனிதரின் காது கடி
இத்தனையும் மறக்க
உன் நினைவுகளை
அசைப்போட்டுக் கொண்டே
மெதுவாக தலை சாய்க்கின்றேன்!
உன் நினைவுகளின்
மென்மையான வருடலோடு
சோர்வு மறந்த போதும்
கண்ணயர்ந்தே போனேன்!
காதருகே உன் கிசுகிசுப்பு
கபடமில்லா உன் அன்பு
காமம் கலக்காத உன் அணைப்பு
பாகாய் உருகி போனேன்!
கதை நடுவே.....
கடந்து போண காலங்கள்
நெஞ்சை நெருட
விழி நீர் முந்திக் கொண்டு
கீழிறங்க....
விடாமல் நானும் தடுக்க;
துடித்துப் போன நீ
கைப்பிடித்து அழுத்தி
தோள் மீது சாய்த்து
என் துயர் கொல்கின்றாய்
மெதுவாய் தலையை
வருடவும் செய்கின்றாய்!
உன் அருகாமைத் தேடி
ஓட நினைக்கும் மனதை
உன் மீதான கோபத்தால்
தடுத்து நிறுத்திக் கொண்டேன்
நீயோ அணைத்து ஆறுதலானாய்!
அப்படியே உறைந்து நின்றேன்
உன் அன்பு பிடிக்குள்!
நங்கி நங்கி...
நடத்துனரின் குரல்
திடுக்கிட்டு எழுந்தேன்!
இறங்க வேண்டிய இடம் தாண்டி
தொலை தூரம் வந்தாயிற்று,
சுற்றும் முற்றும்
பார்த்து இருந்த
இடத்தை ஓரளவு
ஊகித்துக் கொண்டேன்!
எப்படியான ஒரு
சுகமான நினைவு
கெடுத்து விட்டாரே
என மனதுக்குள்
நடத்துனரை திட்டித்தீர்த்தேன்!
அவர் எழுப்பியிரா விட்டால்
எங்கு சென்றிருப்பேன் என்ற
எண்ணம் மேலெழ
நன்றி கலந்த பார்வையோடு
அவரை நோக்கினேன்!
முன்னதான இறக்கத்தில்
இறங்க வேண்டும்
நினைத்துக் கொண்டேன்!
உன்னோடான அந்த
பழைய நாட்கள்
நெஞ்சுக்குள் புகுந்து கொண்டது!
எனக்குள்ளேயே....
நானே கேட்டுக் கொள்கின்றேன்
மீண்டும் இது போன்றதொரு
நாள் என்று வரும்
நான்..... நீ.....
அருகருகில் நாமாக?
Comments
கபடமில்லா உன் அன்பு
காமம் கலக்காத உன் அணைப்பு
பாகாய் உருகி போனேன்!//
கொடுத்து வச்சவங்க யோ ....
கலக்குறீங்க சிந்தனா
நம்ம நாட்டில் பஸ்ஸில் தூக்கமா? நம்மலயும் சேர்த்து தூக்கி போயிருவாங்க. நான் ரொம்ப உசார் :)
//அனுபவமா?//
இனிமையான நினைவுகள் தான் வாழ வைக்கின்றது அனைவரையும் என்பது என் கருத்து
நன்றி
நன்றி