மலையக வாழ்க்கை












காலையிலே
கண்முழிச்சி
என்னையும் குளிக்க வைச்சி
மலை மேல ஏறி தினம்
கொழுந்து பறிக்க போறவளே

கொழுந்து பறிக்க போயி
உன் கையி புண்ணாக
வாய் செவக்க வெத்தலையும்
வலி மறக்க போடுறியே












கவ்வாத்து
புடிக்க போயி
என் கையில் கத்திபட
ஒப்பாரி வைச்சு நீயும்
ரையே கூட்டுறியே

சங்கு சத்தம் கேட்டதுமே
அவசரமா ஓடிவந்து
சுட சுட சமைச்சு தந்து
புள்ளைகள பாத்துகுற












புள்ளைக்கு
படிப்போட பாசத்தையும்
ஊட்டி தான் நீ இருக்க
பட்ட கடன் தெரியாம
தான் நீயும் வளர்க்குறியே

வருத்தமுன்னு ஒரு நாளும்
முடியாம படுக்காம
கஸ்டபட்டு முழு நாளும்
ஓயாமல் நீ உழைப்ப











பக்கத்து
லயத்துலயே
அம்மா வீடிருக்க
கண் கசக்கி போக மாட்ட
மேல பாசத்துல

மழையிலயும் வெயிலுலயும்
மாடு போல உழைக்குறியே
மனமுடைஞ்சு போயிராத
மாரியாத்தா துணையிருப்பா






Comments

//மழையிலயும் வெயிலுலயும்
மாடு போல உழைக்குறியே
மனமுடைஞ்சு போயிராத
மாரியாத்தா துணையிருப்பா
//

நல்லாயிருக்கு.
இப்படி நினைச்சு தான் மக்கள் காலம் கடத்திக்கொண்டிருக்காங்க.

இன்னும் தொடர்ந்து எழுதுங்க.
கவிதை அருமை! உண்மையான அவர்கள் வாழ்வை - குறிப்பாக பெண்களுடைய கஷ்டத்தை பிரதிபலிக்கிறது! நன்றி!
அழகான கவிதை கீர்த்தி வாழ்த்துக்கள்

(இந்த கவிதைக்கு ஏற்கனவே நான் உங்களுக்கு வாழ்த்தியிருக்கிறேன் என நினைக்கிறேன்.)

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு