தீபாவளி பிறந்த கதை

தீபாவளி என்றதுமே நம் நினைவிற்கு வருவது பட்டாசு, திண்பண்டங்களும் என்ற நிலை தாண்டி விடுமுறையோடான குட்டி தூக்கத்தை நேசிக்கும் எமக்கு இம்முறை அந்த ஒரு நாள் விடுமுறையும் வழமைக்கு மாறாக ஒரு சனிக்கிழமையை பார்த்து வந்தமர்ந்து கொண்டது வருத்தமே என்ற போதும் இன்றும் பரபரப்பாக தீபாவளியை கொண்டாடும் எண்ணத்தோடு ஒரு சிலரையும், தம் இனம், சொந்தங்கள் படும் வேதனையை நினைத்து கொண்டாட்டமா? எப்படி முடியும் என இன்னொரு தரப்பினரையும் காணக்கூடியதாக உள்ளது. தீபாவளி..... ஐப்பசி அமாவாசை அன்று இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

தீபாவளி என்றால் என்ன?
'தீபம்' என்றால் ஒளி விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
நரகாசுரன்
என்
அசுரனைக் கிருஷ்ணர் கொன்றதாகவும், அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்கவும், கொடுமைகள் ஒழிக்கப்பட்டதாக மக்கள் அத்தினத்தை தீபாவளி என கொண்டாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இராமாயணத்தில் இராமர் சீதையை கவர்ந்த இராவணனை அழித்துவிட்டு வனவாசம் முடித்து அயோத்தியை அசைந்த நாளை அயோத்திய மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்ததாகவும் அந்நாளையே தீபாவளி என கொண்டாடுவதாகவும் கூறப்படுகின்றது.

ஸ்கந்த புராணத்தில் சக்தி கேதார விரதம் முடித்து சிவன் சக்தியை தன்னில் பாதியாக ஏற்று அர்த்த நாதீஸ்வரர் உருவமெடுத்த நாளையே தீபாவளி என கூறப்படுகின்றது


இப்படி தீபாவளியை கொண்டாடுவதற்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும் இறந்தவர்களை நினைவுகூறும் முகமாகவே அவர்களுக்கு பிடித்தமான உணவு, பலகாரங்கள், உடை என பல்வேறான பொருட்களையும் இறந்தவர்களின் படத்திற்கு முன்னால் வைத்து படைத்து தீபாராதணை காட்டப்பட்டு வழிபடுவதனையே இன்று தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம்
எண்ணைக் குளியல், புத்தாடைகள் தரித்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடல். மேலும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் உறவாடல் திண்பண்டங்கள் பரிமாறல், பட்டாசு ஏற்றி மகிழ்தல், விளையாட்டு என்றவாறு களிப்போடு கழிகின்றது. இப்படியானதொரு நல்ல நாளிலே இடம் பெயர்ந்து துன்புறும் நம் சொந்தங்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொள்வோமாக!

அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Comments

Vijay said…
தீபாவளி பற்றிய பல்வாறு கருத்துக்களை பகிர்ந்தீர்கள்....... நன்றி தோழி
தீபாவளி வாழ்த்துக்கள் கீர்த்தி.....
தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசியமென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

மேலும்...
http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_1566.html
தீபாவளி வாழ்த்துக்கள் கீர்த்தி.
நல்ல கருத்து பிரியோஸநமாக உளது
தீபாவளி வாழ்த்துக்கள்
உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.
karuthu said…
ஒரு பண்டிகைக்கே இத்தனை கருத்துகள்..எனக்கு என் மன்னன் இராவணன் வேண்டும் மாசற்றவனாய் அதை இராமன் கொண்றதாக இருந்தால் அந்த இராமனை என் முதல் எதிரி என்பேன்..அரக்கன் தேவர் என்று ஆரியர் விரித்த வலைக்குள் அகப்பட்ட என்னினம் என்று தன் அழுக்குகளை அகற்றி சுத்தமாக போகின்றது.ஊர் முழுதும் இன்னும் பல இராமர்கள் மீண்டும் சீதையை தீயில் இறகக காத்திருக்கும் வரை எனக்கில்லை உறக்கம்
தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...
கருத்தோடு வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்