நாட்டுப் பற்று














ஊண்
உணவு இன்றி
உறக்கமும்
தான் தொலைத்து
என்
உறவுகள் அங்கே
செத்து
மடிதல் கண்டு
உள்ளம்
நொந்து நின்றேன்
கண்டேன்
கதறி அழுதேன்

நெஞ்சம்
வெடித்திடும் வலி கொள்ள
என்
உள்ளத்து உணர்வுகளை
சொல்லிடலாம்
என்றெண்ணி
சுற்றாரிடம்
சென்று
சொல்லத்
தொடங்கினேனே

சொல்லாதே
சொல்லாதே
வீடு
செல்லாது நம் உயிரும்
உயிரை
காத்துக் கொள்
சொல்லியது
சொந்தங்கள்

வெறி
கொண்ட உணர்வுகளை
எப்படியோ
கொட்டிடனும்
என்றெண்ணி
தேடி தேடி
களைத்து
விட்டேன்
கேட்பார்
யாரும் இல்லை

முடிவில்
ஒரு முடிவோடு
கேட்டதை
கேட்ட
மறு
நிமிடம் மறந்து விடும்
மனிதனிலும்

அஃறினையாம்
ஏட்டினிலே
எழுத
தொடங்கினேன்

பேனை
அணுக்களுக்குள்
எழுத்து கருக்களை கொண்டு
உயிர்
சுமந்து பயணித்து
உடைமை
உணர்வுகளை
உளறி
கொட்டினேனே

உயிர்
கொண்டு
வெறித்தது
கவிதை
எழுதிய
கவிதையது
எண்ணி
நாலு நாள் தான்
வந்தது
ஓலை - உன் வரிகளில்
நாட்டுப்பற்று
இல்லை

உயிர்
மீது ஆசையிருந்தால்
நிறுத்திவிடு
உன் எழுத்தை

நாட்டையே
பறித்துக் கொண்டு
நாட்டு
பற்றை பேசுகிறார்

எங்ஙனம் நிறுத்திடுவேன்
உண்மையையும்

உணர்வுகளையும்

வலி
கொண்டு உலகுக்கு
கொட்டிவிட
துடிக்கும் மனதிற்கு
உறுதுணை
தானே என் வரிகள்
எங்ஙனம்
நிறுத்திடுவேன்

Comments

//நாட்டையே பறித்துக் கொண்டு
நாட்டு பற்றை பேசுகிறார் //

நச் வரிகள்...

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு