வலைச்சியும் அலைகடலும்










கட்டு
வலை எடுத்துகிட்டு
கடல் கடந்து போற மச்சான்
கண் விழிச்சு காத்திருப்பேன்
கரை சேரு நேரத்துக்கே

சாலை கருத்துருச்சு
ஊரும் உறங்கிடுச்சு - நீ
பேசி போன பேச்சை மட்டும்
மறக்கலையே மச்சான் நான்

நேற்றைக்கு இன்னேரம்
என்னோடே நீ இருந்த
நிலா சோறு ஊட்டிவிட்டு
சின்னவள தூங்க வைச்ச

உனக்கு புடிக்குமுன்னு
காலையில சமைச்சு வைச்ச
மீன் கொழம்பு மணக்குதையா
வந்துவிடு சீக்கிரமா வயிறார சாப்பிடலாம்

ஓடி ஓடி உழைக்குறியே
ஓடாய் தேயுறியே
ஒனக்குயிரா என்னைக்குமே
நானிருப்பே என் மச்சான்

காலம் காலம் எங்களுக்கு
கடல் தாயி துணையிருப்பா
வீரமுள்ள என் மச்சான்
வெற்றியோட வீடு சேரு!




Comments

நல்லாயிருக்கு..

//ஓடி ஓடி உழைக்குறியே
ஓடாய் தேயுறியே
ஒனக்குயிரா என்னைக்குமே
நானிருப்பே என் மச்சான்// :) அழகான வரிகள்..
Vijay said…
அழகான கவிதை
கடல்கடந்து இருக்கும் தங்கள் காதலருக்குக் கூறுவது போல் உள்ளது lolllllll
//அழகான கவிதை
கடல்கடந்து இருக்கும் தங்கள் காதலருக்குக் கூறுவது போல் உள்ளது lolllllll//

நன்றி விஜய்.

அவன் அங்கு மீன் பிடிக்கிறான்ர சந்தேகம் உங்களுக்கும் வந்துட்டா? என்ன செய்தால் என்ன யாரையும் ஏமாற்றாமல் செய்யும் வரை எந்த தொழிலும் நல்ல தொழில் தான்
தங்கச்சி எதிர்பாக்கத ஒரு பதிவு 99 வதா தந்தருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.ஆனால் மீனவ பெண்கள் மீன் குழம்பு காலையில வைக்கிறதில்ல இரவு தான் தொழிலுக்கு போக முன்னர் வைத்து தொழிலுக்கு கனவரை அனுப்பி வைப்பார்கள்..பரவாயில்ல ஒரு யதார்த்தம் இருந்தது..வாழ்த்துக்கள்
தங்களின் வலைப்பூ அறிமுகத்தை கீழுள்ள முகவரியில் தந்துள்ளேன்.வருகை தந்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்
http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_21.html
நன்றி தயாளன் அண்ணா! மீனவக்குடும்பத்தோடு தொடர்பிருக்கு போல..... அது சார்ந்த தகவல்கள் போதிய அளவு எனக்கு தெரியவில்லை, இனி திருத்திக் கொள்கின்றேன்.
நன்றி இய‌ற்கை
கண்டிப்பாக வருகை தருவேன்
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்
நல்லா இருக்கு.

நீ
பேசி போன பேச்சை மட்டும்
மறக்கலையே மச்சான் நான் //

ஆடவனின் நினைவில் வாடும் பெண்ணின் சோகம். சங்க காலாத்திலிருந்து இன்று வரை ஒன்றே.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு